Thursday, July 28, 2016

Elliptical trainerம் நானும் ...

இந்த orbitrek Elliptical trainer அப்படின்னு டெலி ஷாப்பிங் ல வருமே அந்த மாறி trainer தான் பட் இது bsa make .... கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துனால ரெண்டு முணு சர்ஜரின்னு மானாவாரியா பன்ச்சர் ஒட்டி டிங்கரிங் பண்ணதுல திடீர்ன்னு பாத்தா டபிள் த சைஸ் ஆ மாறி இருந்தேன் .... அப்போ தான் இந்த  elliptical trainer பத்தி பார்த்தேன் ... உடனே என்னருமை கணவர் என்னையும் தக்கை மாறி இருந்த அந்த பைபர் பாடி சைக்கிளையும் பாத்துட்டு (அது என் வெயிட்டை தாங்காதுன்னு நினைச்சாரோ என்னவோ யாம் அறியோம் பராபரமே ) "இந்த டெலி ஷாப்பிங் ப்ரொடக்ட் எல்லாம் வேண்டாம் ... நம்ம bsa hercules லேயே இப்போ elliptical cycle வந்து இருக்கு.. இங்கேயே பாக்டரி இருக்கறதால எதாவது சர்வீஸ் இல்லை  பார்ட்ஸ் மாத்தணும்னா (?? லைட்டா டௌட்டா இருந்தது தெளிவாயிடுச்சு ) உடனே வந்து சர்வீஸ் பண்ணிடுவாங்க ... so அதை வாங்கி தரேன் " அப்படின்னு உடனே வாங்கித் தந்துட்டார்... அவ்ளோதான் போட்டேன் ஒரு சார்ட் ... ஒரே டயட்டிங்... பின்ன 15 மினிட்ஸ் before food 15 மினிட்ஸ் after food ன்னு முணு வேளை மாத்திரை மாறி cycling ..... ஒரு வேளை பண்றதுக்குள்ளயே முழி பிதுங்கிடுச்சு.... ஆனாலும் வாய் சவடால் விட்டு வாங்கிட்டோமேன்னு கஷ்டப்பட்டு ஒரு ஒரு மாசம் ஓட்டினேன் .... அப்பறம் நியூரோலஜிஸ்ட் விசிட் இருந்தது .... ஆபத்பாந்தவன் மாறி டாக்டர் "exercise பண்ணலாம்மா பட் கஷ்டமா இருந்தா இந்த back strain பண்றது மட்டும் கொஞ்ச நாளைக்கு வேண்டாம் " அப்படினாரு பாருங்க இது தான் சாக்குன்னு கொஞ்ச நாள்ன்னு அவர் சொன்னதை கொஞ்ச வருஷமா சின்சியரா பாலோ பண்ணிட்டேன்.. ஆனாலும் அந்த cycle மேல டவல் துப்பட்டா இது எல்லாமே போடாம தான் மெயின்டென் பண்ணேன் ....
அப்பறம் இந்த "36 வயதினிலே " படம் வந்தாலும் வந்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிரிரிரிய மாற்றம் வந்தது ... அதுல அதுவரைக்கும்  இல்லாத அளவு ஸ்லிம்மான ஜோவை பார்த்து அசந்து இம்ப்ரெஸ்சாகி நானும் வெயிட்டை குறைச்சிட்டு தான் மறுவேலைன்னு முடிவு எடுத்து bsa வ தூசி தட்டினேன் .... ஒரு ரெண்டு நாள் நல்லா தான் இருந்தது .... அப்பறம் என்னவோ செக்கு இழுக்கற மாடு மாறி அந்த ஹாண்டில பிடிச்சு இழுத்து  பெடலை மிதி மிதின்னு மிதிச்சாலும் ரொம்ம்ம்ப மெதுவா தான் ஓடுது... உடனே extra effort போட்டு மிதிச்சதுல ஒரு மாசத்துல சுத்தமா இடுப்பை அசைக்க முடியாத அளவு back pain .... அப்பவும் இது எல்லாம் எக்சர்சைஸ் பண்ணும் போது சகஜமப்பான்னு விடாம இன்னும் 2 நாள் பண்ணினேனோ முடிஞ்சது... உடனே ஓடு ரெகுலரா போற ஆர்த்தோ சர்ஜன் .... அவர் என்னை பார்த்த உடனே சொல்லிட்டார் இது severe lower back strain ன்னு .. உடனே நான் கேட்ட முதல் கேள்வி "டாக்டர் இந்த elliptical சைக்கிள  இனி எப்போ மறுபடியும் எக்சர்சைஸ் ஆரம்பிக்கலாம்..." உடனே என்னை ஒரு லுக் விட்டாரே பாக்கணும்...ஒரு குண்டை தூக்கி போட்டார்.. சில பேருக்கு elliptical trainer ஒர்கவுட் ஆகாதுன்னு... அய்யயோ சாய்ராம் அன்னை ஐயப்பான்னு ஒருத்தர் விடாம வேண்டிக்கிட்டேன் .... ஒரு 10 நாள் பிசியோதெரபி பண்ணுங்க அப்பறம் பார்ப்போம்னு வயத்துல பாலை வார்த்தார்.... இந்த cycle free கேப்ல சர்வீஸ் சென்டர்க்கு கால போட்டு ரிப்பேர்க்கு ஆள் அனுப்பினாங்க... அந்த பையன் என்னையும் சைக்கிளையும் பார்த்துட்டு "இதுக்கு ஒரு மாக்ஸிமம் வெயிட் லிமிட் இருக்கு ...யார் மேடம் யூஸ் பண்றாங்க " அப்படிங்கறான் .... முறைச்சிகிட்டே நான் தான்னு சொன்னேன் ... செக் பண்ணிட்டு "மேடம் front ல இருக்கற flywheel புஷ் போய்டுச்சு.... மாத்தணும்" ன்னு சொல்லிட்டு மாத்திட்டு போய்ட்டான்... ஒரு 10 நாள் பல்லை கடிச்சிட்டு அப்பறம் எடுத்தேன் வண்டிய ஐ மீன் சைக்கிள .... ஒரு வாரம் போச்சு .... பொறி பறக்க எக்ஸர்சைஸ் பண்ணேன்.. ஆமா ஒரு வாரத்தில சைக்கிளல ஒரு பயங்கர வெல்டிங் சத்தம்  உண்மையாவே  பொறி பறந்து ... பண்ணி முடிச்சிட்டு கீழ பாத்த ஒரே அலுமினியம் துகள்.... போச்சுடா ... திரும்ப கூப்பிடு சர்வீஸ் .... இந்த தடவையும் அதே ஆளு... "நான் தான் இதுல வெயிட் லிமிட் இருக்குன்னு சொன்னேனே மேடம் ... முன்ன புஷ் போய் இருந்தப்ப நீங்க யுஸ் பண்ணி இருந்தீங்க இல்ல.. அப்போ flywheel லையும் கொஞ்சம் உடைஞ்சு போச்சு .." அப்படின்னு சொல்லி இன்னும் 1 வீக் எடுத்து அதையும் புதுசா மாத்தி கொடுத்தான்... சரி ஒரு குறிக்கோளை  எடுத்தா இப்படி இடைஞ்சல் வர்றது எல்லாம் சாதனையாளர்களுக்கு சகஜம்ன்னு என்னோட வெயிட் லாஸ் எய்ம்மை இன்னும் vigorous ஆ தொடர்ந்தேன் ... ஒரு 8 மாசம் போச்சு ... ஏதோ மாற்றம் வந்த மாறி தான் இருந்தது .... இதுக்கு நடுவுல  ஸ்விம்மிங் போறேன்னு 3 அடில floating மட்டும் கத்துக்கிட்டு , aerobics போறேன்னு உடம்பெல்லாம் சுளுக்கிட்டு இப்படி பல முயற்சிகள்... கொஞ்ச நாள் முன்னாடி "ஹே நீங்க நல்லா எளச்சு இருக்கீங்களே " அப்படின்னு கேட்ட சில பேர் (அவங்க எல்லாம் கண்ணுல பவர் கிளாஸ் போட்டு இருந்ததை சொல்ல மாட்டேனே...) என்னோட டார்கெட்டை நோக்கி தான் போய்ட்டு இருக்கேன்னு எனக்கு புரிய வெச்சாங்க...
இப்படி எல்லாமே எனக்கு  சாதகமா போயிட்டு இருந்தப்போ தான் 2 வாரம் முன்னாடி இங்க அதிசயமா பெய்ஞ்ச மழைல அந்த இடி விழுந்தது... அதாவது நான் படிக்கட்டுல விழுந்தேன்... வலது கால் ankle coconut bun மாறி வீங்கிடுச்சு... உடனே இருக்கவே இருக்காரு என்னோட ஆஸ்தான ஆர்த்தோ சர்ஜன்... போன உடனே என் கால பாத்திட்டு "இவ்வளவு வீங்கி இருக்கே ...  either fracture or ligament tear.... ஒரு x-ray எடுத்திட்டு தான் முடிவு பண்ணணும் crepe bandage ஆ இல்லை plaster of paris ஆன்னு " அப்படிங்கறார் ... உடனே நான் என்ன கேட்டு இருப்பேன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும் "எப்போ எக்சர்சைஸ் ஆரம்பிக்கலாம் " .... ஆனா அதுக்கு அவர் என்ன பதில் சொன்னார்ங்கறது தான் இங்க ஹைலைட் ..
"x-ray வே வேணாம் ... உங்களுக்கு மாவு கட்டு தான் சரி" 

Monday, July 25, 2016

என் அன்பு ஸ்ரீராமபிரான் ஏன் இப்படி தன்னையே வருத்தி கொள்கிறார்... என்னால் தாங்க முடியவில்லையே .... ஒரு முறை என் தாய் சீதாமாதாவை பிரிந்து ஜீவனே இல்லாது காடு திரிந்து  கடல் தாண்டி தவியாய் தவித்தாரே .. அதையே என்னால் சகித்து கொள்ள முடியவில்லையே .... சீத்தம்மாவை கண்டேன் என்று சொன்னால் அந்த கண்டேன் என்ற ஒரு சொல் கேட்க ஆகும் அந்த ஒரு நொடி தவிப்பை கூட அவருக்கு தர வேண்டாம் என்று தானே "கண்டேன் சீதையை" என்று சொன்னேன் .... என் தாய் தீயிலேயே குளித்த  போது அதற்கு இணையான வெப்பத்தில் அவர் நெஞ்சு வெந்தது எனக்கு தெரியாது என்று நினைத்தாரோ .... என்ன நினைத்து அதை செய்தாரோ அதற்கு அர்த்தமே இல்லாது போய்விட்டதே .... எங்கே என் சீதாமாதா .... கர்ப்பிணியான அவளையும், அவளோடு சேர்த்து தன் ஜீவனையும் எதற்கோ எங்கோ அனுப்பி விட்டு என் ப்ரபோ என்ன செய்ய எத்தனித்து இருக்கிறார்.. அனுமனால் துயரம் தாங்க முடியவில்லை .... நேரே அவன் உயிருக்கு உயிரான பிரபுவிடம் சென்றான்.. "பிரபோ .... இது என்ன விதி ... எதற்காக யாருக்காக இந்த முடிவு... மாதா இல்லாத நீங்கள் இங்கே என்ன செய்ய போகிறீர்கள்... இந்த முறை நான் உங்கள் உத்தரவிற்கோ சீத்தம்மாவின் அனுமதிக்கோ காத்திருக்க போவதில்லை... இப்போதே போய் சீதாமாதாவை இங்கே அழைத்து வரப்போகிறேன்... " என்றான்.
"பிரிய அனுமன்... க்ஷத்ரிய குலத்தில் பிறந்து நாடாளும் மன்னனாக எனக்கு இருப்பது சில முக்கியமான கடமைகள்.... என் ஒருவனின் உணர்வுகளுக்கு மட்டும் மதிப்பளித்து வாழ நான் கொடுத்து வைக்கவில்லை... இதுதான் என் விதி..." என்றான் ராமன்.
"இல்லை பிரபோ நான் இருக்கும் வரை நீங்கள் இப்படி துயரத்தில் தவிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது ... உங்களையும் சீதாமாதாவையும் சேர்த்து வைக்காமல் என் பிறவி முழுமை அடையாது..." என்று கூறிவிட்டு எங்கே அங்கேயே இன்னும் ஒரு நொடி நின்றாலும் ராமன் அவனை தடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் வெளியே வந்தான்.
"அயோத்திய மக்களே...உங்களுக்காகவே தன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் என் ப்ரபோவின் அருமை என்றாவது உங்களுக்கு தெரிந்து இருக்கிறதா..  தன் பிள்ளைகளை போல் உங்களை எண்ணும் அவரின் துயரை போக்க வேண்டும் என்று அவர் மேல் உண்மையான அன்புடன் நீங்கள் யாராவது நினைத்து இருக்கிறீர்களா... கர்ப்பிணியான மனைவியை விரட்டி விட்டான் என்று என் பிரபுவிற்கு யுகம் யுகமாய் நிலைத்து நிற்க போகும்  அவப்பேரை தான் அவருக்கு தர போகிறீர்களா... இப்போதே என்னோடு சேர்ந்து வாருங்கள் .... போய் சீதாமாதாவை அழைத்து வருவோம் ... நீங்கள் அழைத்து வந்தால் ராமபிரான் ஏற்றுக்கொள்வார்...." என்று அழைத்து பார்த்தான்...மானிடர்கள் அல்லவா... யாரும் மசியவில்லை ....
ராமருடைய துயரை கண்டு செய்வதறியாது தவித்து "ஸ்ரீ ராம பிரபோ... ஸ்ரீ ராம பிரபோ" என்று அனுமனின் மனம் துவங்கிய அரற்றல்  யுகங்கள் கடந்து இன்னும் தொடர்வதாகவே எனக்கு தோன்றுகிறது !!!

Note:
ஸ்ரீராமர் மீது அளவற்ற பக்தியும் அன்பும் வைத்திருக்கும் அனுமன் ஸ்வாமியின் பார்வையில் ஒரு சிறிய முயற்சியே இது... யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கமில்லை... நானே ஒரு ardent devotee of Lord Hanuman.

Friday, July 22, 2016

பிள்ளை மனம் ....

நேற்று குழந்தை ஸ்கூலில் இருந்து வரும்போதே கொஞ்சம் டயர்டாக இருந்து இருக்கிறாள்.. so ஒரு உருப்படியான அம்மாவா நான் கொஞ்சம் cranky பிஹேவியரை எதிர்பார்த்து இருந்து இருக்கணும் ..... பேட் டயம் எனக்கும் என்னவோ தலைவலி மூட் சரியில்ல ( தலைவலி ஒரு சால்ஜாப்பு தான் .... குழந்தை விஷயத்துல வள் ன்னு விழுந்துட்டு அப்பறம் பீல் பண்ணலைனா நார்மல் அம்மா இல்லையே... கோபமே  படாமல்  பொறுமையே உருவாக இருக்க பண்டரிபாய் , கவியூர் பொன்னம்மா இவர்களால் மட்டுமே முடியும்.. அப்படி இருக்கும் மற்ற அம்மாக்கள் இப்படி சொன்ன என்னை மன்னிக்கவும்) .... லன்ச் பாக்ஸை திறந்தால் சாப்பிடாமல் அப்படியே இருக்கிறது (எனக்கும் லஞ்சுக்கும் தான் ராசி இல்லயே சாண்ட்விச் தந்த பாடம் ).... வந்ததே ஒரு கோபம் ...உங்க ஊர் கோபம் எங்க ஊர் கோபம் இல்லை ... மேல மேல அதுக்கும்  மேல... தூக்க கலக்கத்தில் அவளும் கொஞ்சம் கூடுதலா வெறுப்பேத்தினாள்.. இருந்தாலும்... ஆனாலும் ... கொஞ்சம் ஓவராக தான் கத்திட்டேன் ... அழுதுட்டே தூங்கிட்டாள்... as usual தூங்கற குழந்தைய பாத்து  மனசாட்சி "உனக்கு இதே வேலையா போச்சு .... உனக்கே  பொறுமை இல்லை... பாவம் அது குழந்தை.....  தூக்கத்துல தான் அப்படி இருந்து இருக்கா ... அதை புரிஞ்சுக்க முடில ... நீ எல்லாம் ஒரு அம்மா " என்று தலையை கடித்து துப்பியதில் தலைவலி போய் நெஞ்சு (அதான் மனது ) வலிக்க ஆரம்பித்தது.... சாயங்காலம் ஹிந்தி கிளாஸ்க்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால தான் அவளை  அவசர அவசரமா எழுப்பி ரெடி பண்ணி கொண்டு போய் விட்டு வந்ததில் சமாதானம் பேச இடைவேளை கிடைக்கலை .... அவளும் ஒண்ணும் பேசாமல் சைலண்டா ரெடி ஆனா ... கிளாஸ் முடிஞ்சு கூட்டிட்டு வரும்போது மெதுவா நான் பேச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவள் "அம்மா எங்க ஸ்கூல்ல சொல்லி கொடுக்கற மெத்தடும் நல்லா இருக்கு.. மறக்கவே மறக்காது மா... இந்தி டீச்சர் சொல்லி கொடுக்கறதும் எனக்கு நல்லா mindல பதியுது மா..." என்றாள் (அவள் ஸ்கூல் மாண்டிசோரி அதனால டீச்சிங் டிபரண்டா இருக்கும் ).... நான் உடனே இதுதான் சாக்கு லெக்சர் கொடுக்கலாம்ன்னு "ஆமாடா ... you should be really grateful to god for whatever you have got... you should not waste anything " அப்படீன்னு ஆரம்பிச்சேன்.... உடனே அவள் "அம்மா god எனக்கு முக்கியமா ரெண்டு ரொம்ம்ம்ம்ம்ப நல்லதா கொடுத்து இருக்கார் ... அதை சொல்லலியே நீ " என்றாள் .... என்னடா என்று நான் கேட்டதற்கு "ஒண்ணு நீ... இன்னொண்ணு  அப்பா " என்றாளே பார்க்கணும்... தெரிஞ்சு தான் சொல்லி இருக்காங்க குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு... நாம் செய்யும் எதையும் மன்னித்து மறப்பதில் !

Thursday, July 21, 2016

"மறக்காம அந்த all proof jacket, helmet எடுத்துக்கோ... "
"எடுத்துக்கிட்டேன் மா ..."
"பெப்பர் ஸ்ப்ரே இருக்கு இல்ல.. இல்லேன்னா ரீபில் பண்ணிக்கோ..."
"இருக்கும்மா..."
"சரி இன்னைக்கு சீசன் டிக்கெட்டோட அந்த safety லைசென்ஸையும் ரென்யூ பண்ணிக்கணும்...."
"ஓகே மா.."
"அட் எனி காஸ்ட் நைட் லேடிஸ் ஸ்பெஷல் air cab ல தான் திரும்பி வரணும்.. கூட்டமா இருக்குன்னு road cab ல வர கூடாது சரியா ..."
"அப்பப்பா எல்லா நாளும் பண்றது தானே மா இது எல்லாம் ... திரும்ப திரும்ப தினமும் சொல்லணுமா ..."
"நீ அம்மாவானா தெரியும்டி .. பத்திரமா போய்ட்டு வா..."
ஆஃபிஸ் முடிந்து air cab இல் ஏறிய போது ரொம்ப லேட் ஆகிவிட்டது... நான் மட்டும் தான் இருந்தேன் .... cab கிளம்பி பறக்க ஆரம்பிக்க அசதியில் கொஞ்சம் கண் அசந்து விட்டேன் ...  திடீரென "பறந்தாலும் விடமாட்டேன்..." என்ற பாட்டு ஒலிக்க வெடுக்கென கண் விழித்தேன் ... நான் போய் கொண்டிருந்த பஸ் சடன் பிரேக் அடித்து இருந்தது ... முகம் எல்லாம் வேர்த்து இருந்தது ... சே என்ன ஒரு கனவு ...
அந்த ரோடில் இருந்த அரங்கத்தில் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்...." என்று எக்காலத்துக்கும் பொருந்தும் பாடலை இயற்றிய அந்த மீசை கவிஞனின் 150வது பிறந்த நாள் விழாவாம்.. ஓரே டிராபிக் ஜாம் !!!!

Monday, July 18, 2016

கதை - காதல் எப்போ எப்படி வரும்..

கதை - காதல் எப்போ எப்படி வரும்..

நான் post graduation  பண்ணும் போது ஹாஸ்டல் வாசம் .... நான் , ரம்யா, ரேவதி, கலை , பூமா, தேவி என்று நாங்கள் ஆறு பேர்  ஒரு கேங்க் ... ஒரு ரூமில் மூன்று பேர் என்று நாங்கள் ரெண்டு ரூமில் இருந்தாலும் அது வெறும் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் தான் .... கிளாசில் தூங்கி HODயிடம் பாட்டு வாங்கி , ஹாஸ்டல் சென்டர் ஏரியாவில் படித்து , மெஸ்ஸில் சாப்பிட்டு , துணி துவைத்து, க்ளாஸ் கட் அடித்து மாரிஸ் தியேட்டரில் மேட்னி ஷோ பார்த்து , மலைக்கோட்டை உச்சியில் அமர்ந்து அரட்டை அடித்து, தெப்பக்குளம் சுற்றி உள்ள தெருவில் மாங்காய் இஞ்சி வாசனையை நுகர்ந்தபடி சைனா பஜாரை பராக்கு பார்த்து நடந்து, இவ்வளவு ஏன் தரையில் நீளமாய் பெட்ஷீட்டை விரித்து தூங்கும் எல்லா நேரமும் நாங்கள் இணை பிரியாத பிரெண்ட்ஸ்...
எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்தது இந்த கத்திரிக்காய் அதாங்க காதல் வரும் வரை ... முதலில் கலை தான் அதில் விழுந்தாள் .... எப்படி  எங்கே என்று தெரியவில்லை... ஆனால் கிளாசில் திடீர் என்று ஒரு ரெண்டு டெஸ்க் பின்னால உட்கார ஆரம்பித்தாள்... என்னடா என்று புரியாத போதும் அவள் டெஸ்கில் எப்போதும்  அவளோடு உட்காரும் பூமாவும் தேவியும் அப்படியே ஷிப்ட் ஆனார்கள்... கிளாஸ் டைமில் என்னதான் எழுதுவாளோ பேப்பர் பேப்பராய் எழுதி தள்ளுவாள் கலை... பூமாவும் தேவியும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி எங்களை பார்ப்பார்கள் ... சாப்பிட வாடி கலை என்றால் பசிக்கவே இல்லை நீங்க போங்க என்று சொல்லி விட்டு கையில் பெரிய சைஸ் நோட் புக்கை பிரித்து வைத்து கனவு கண்டு கொண்டிருப்பாள்...  போஸ்ட் கார்டில்  வீட்டுக்கு லெட்டர் எழுதுபவள் காலேஜ் காம்பஸ் உள்ளே இருக்கும் போஸ்ட் ஆஃபிஸில் என்வலப்ஸ் நிறைய வாங்கினாள்.... ஒரு  ஒரு மாதம் பொறுத்து பார்த்துவிட்டு "என்னடி நடக்குது ... திடீர்னு இவ இப்படி இருக்கா ... நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க... இப்போ எல்லாம் நாம ஒண்ணா ஓரே ரூம்ல அரட்டை அடிக்கறது குறைஞ்சி போச்சு ... இது எல்லாம் சரியா இல்ல " அப்படின்னு   ரம்யா தான் முதலில் கேட்டாள் ... "அது ஒண்ணும் இல்லடீ  கலையும் நம்ம கிளாஸ் வாசுவும் லவ் பண்றாங்க" என்று பூமா சொன்னபோது எங்களால் நம்பவே முடியல.... நம்ம கலையா சான்ஸே இல்லை என்றோம் ... காரணம்  எங்கள் செட்டிலேயே அவள் தான் ரொம்ப அமைதி.... அவள் அப்பா பக்கத்து ஊரில் பெரிய துணிக்கடை வைத்திருப்பவர்.... ஜாதி சங்க தலைவர் வேற ... கலை அவள் அப்பா பேரை கேட்டாலே நடுங்குவாள்... எனக்கு தெரிந்து வாசு அவள் ஜாதி இல்லை.. பின்விளைவுகளை  யோசிக்காமல் முடிவெடுக்கும் ரகமும் இல்லை கலை... பின்ன எப்படி என்று யோசித்து என் தலையே வெடித்து விட்டது... இதில் ரம்யாவும் ரேவதியும் காதலில் சுத்தமாய் நமபிக்கை இல்லாதவர்கள்.... "அது வேலையத்தவங்க செய்யற உருப்படாத வேலை.. ஏன் இவ்வளவு தூரம் பாத்து பாத்து வளத்த அப்பா அம்மாக்கு தெரியாது நமக்கு எப்படி மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணனும்னு" என்று லெக்சர் அடித்தே கொன்று விடுவார்கள்.. இதற்கு பயந்தே கலை எங்கள் ரூமிற்கு வருவதை தவிர்த்து இருந்தாள் என்று எனக்கு புரிந்து விட்டது... வாசு எப்படியோ அவளை காதலிக்க சம்மதிக்க வைத்து விட்டான் என்று தெரிந்தது.. அவன் கலை அளவு வசதி இல்லையென்றாலும் ஒரளவு வசதி உள்ள குடும்பம் தான் ... ஹாஸ்டல் இல்லை டே ஸ்காலர் ... நன்றாக படிப்பவன்...  கிளாசில் அவனுக்கு ஒரு கிரேஸ் உண்டு.... ஆனால் எனக்கு ஓரே ஒரு சந்தேகம் தான் ... கலை எந்த அளவு இதில ஸ்டராங்கா இருப்பா ... அவளை நான் புரிந்து கொண்ட வரை அவள் அப்பாவை மீறி எதுவும் செய்பவள் இல்லை .... பட் காதலுக்கு  இது எல்லாம் தெரியுமா என்ன ....
இதற்கு நடுவில் தேவியும் எங்கள் சீனியர் பாலுவும் லவ் பண்ண ஆரம்பிச்சு இருந்தது தெரிய வந்தது ..... கலை வீட்டில் ஜாதி பிரச்சனை என்றால் தேவி வீட்டில் காதல் என்ற வார்த்தையே பிரச்சனை .... எப்படித்தான் இந்த காதல் கரெக்ட்டா பிரச்சனை இருக்கற இடம் பாத்து வருமோ.... இப்படி இவங்க ரெண்டு பேரும் காதலை வளர்த்த நேரத்தில் ஆறு பேராய் சுற்றியவர்கள் முணு பேர் ஆனோம்... பூமா அவர்கள் ரூம் என்பதால் சில சமயம் எங்களோடு இருப்பாள் பல சமயம் அவர்களோடு இருப்பாள்... ரம்யா தான் "ஒழுங்கா படிப்ப முடிச்சு வேல வெட்டிய பார்க்காம லூசுங்க என்ன பண்ணிட்டு இருக்குங்க பாரு " என்று திட்டி கொண்டு இருப்பாள் .... திடீர் என்று ஒரு நாள் தேவி ஹாஸ்டலில்  இருந்து போய்விட்டாள் ... ஆமா சனி ஞாயிறு ஊருக்கு போவது போல கிளம்பி பாலுவோட போயிட்டாள் ... ஹாஸ்டல்ல ஓரே பிரச்சனை  .... தேவியோட அப்பா, மாமா , சித்தப்பான்னு ஒரு படையே வந்து நாங்க பிரெண்ட்ஸுங்கறதால எங்களை துருவி துருவி ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.... ஹாஸ்டல் வார்டன் எங்களை பார்த்தாலே பயங்கரமாய் முறைக்க ஆரம்பிச்சாங்க... எங்களுக்கு  மட்டும் எக்ஸ்ட்ரா கெடுபிடி.... நாங்க நொந்து போய்ட்டோம்...  "படுபாவி கூடவே இருந்து அமுக்குணி மாதிரி என்ன வேலை பண்ணிட்டு போய்ட்டா பாத்தியா ... இவ எல்லாம் ஒரு பிரெண்ட் ...இவ காதலும் கத்திரிக்காயும் " ன்னு ரம்யாவும் ரேவதியும் மாத்தி மாத்தி புலம்பி தள்ளினாங்க  ... இப்படியே ஒரு வழியா பைனல் இயர் பைனல் செமஸ்டர் வந்துட்டோம்.. திடீர்ன்னு ஒரு நாள் நடுராத்திரி  கலை விஷத்தை சாப்பிட்டுட்டா.. வலில அலறின சத்தம் கேட்டுட்டு பூமா முழிச்சுகிட்டு ஓரே கத்து .... வார்டன் வந்து கலைய ஹஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஒடி எப்படியோ காப்பாத்தியாச்சு... அவ அப்பா திடீர்ன்னு மாப்பிள்ளை பார்த்து எக்ஸாம் முடிஞ்ச உடனே கல்யாணம்னு முடிவு பண்ணி ஏற்பாடுகள் செஞ்சிட்டு இருந்தார்ன்னு அப்பத்தான் தெரிஞ்சுது... "ஒண்ணா காதலிச்சவன கல்யாணம் பண்ற தைரியம் வேணும்... இல்லயா அந்த கர்மத்தை பண்ணியே தொலைக்க கூடாது.... அதை விட்டுட்டு இப்படி சாக முடிவு பண்ணிட்டியே " ன்னு ரம்யா தான் ரொம்ப திட்டி  தீத்தா... அவ்ளோதான்  இதுக்கு மேல சொல்லவும் வேணுமா கலைய அவங்க வீட்ல கூட்டிட்டு போய்ட்டாங்க.... அவ என்ன பண்றா எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்க நாங்க அவ வீட்டிக்கு போன் பண்ணா கூட அவ அண்ணாவோ  அம்மாவோ தான் போன் எடுப்பாங்க... என்னவோ சொல்லி போன கட் பண்ணிடுவாங்க ... பூமா தான் பாவம் ரொம்ப நொந்து போய்ட்டா.... ஒரு பக்கம் வாசு தாடியெல்லாம் வளத்துட்டு பூமாகிட்ட "எப்படியாவது கலை கிட்ட பேசி பாரேன்" னு ஓரே அழுகை... அவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது .... இந்த அமர்க்களத்துக்கு நடுவில் பைனல் எக்ஸாம் முடிஞ்சது.... பாறாங்கல் மாதிரி மனச அழுத்தற பாரத்தோட அவங்க அவங்க பிரிஞ்சோம்.... அப்ப எல்லாம் மொபைல் போனே பிரபலமாகாத நாட்கள் ... லெட்டர்ஸ் தான் ஒரே வழி .... கொஞ்ச நாள்ல டெலக்ராம் மாதிரி கன்டென்ட் குறைஞ்சு அப்பறம் அதுவும் போய் காலத்தோட போக்குல அவங்க அவங்க லைஃப்ல மூழ்கிட்டோம்...

இன்னைக்கு ஏதோ வேலையா மந்தவெளி போயிட்டு பஸ்ல திரும்ப வந்துட்டு இருந்தேன் ... காலியான பக்கத்து சீட்டில்  சின்னதும் பெருசுமாக  துறுதுறு  என ரெண்டு பசங்க வந்து உட்கார்ந்தது... அந்த முகங்களை பார்த்தால் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது..... ரெண்டும் ஒன்றை ஒன்று சீண்டி கொண்டே வந்தது .... "டேய் கிடைச்ச சீட்ல அமைதியா உட்காந்து வாங்கடான்னா என்ன ரெண்டு பேரும் அடிச்சுக்கறீங்க " என்று அதட்டிய குரல் கேட்டதும் திரும்பி பார்த்தால் அட ரம்யா...
"ஹேய் ரம்யா எப்படி இருக்கடீ .... என்னை தெரியுதா...   இது உன் பசங்களா.. எங்க இருக்க...." என்று உற்சாகமானேன்... ஒரு நிமிடம் முழித்தவள் சட்டென்று முகம் மலர்ந்தாள் ... "ஹேய் வாட் அ சர்ப்ரைஸ் ... எப்படி இருக்கடீ .. மெட்ராஸ்லயா இருக்க ...நான் ஹைதராபாத்ல இருக்கேன் ... இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன்" என்றாள் ... "சரி எங்க உன் ஹஸ்பண்ட்... என்ன பண்றார்" என்று கேட்ட உடனே "அவர் வரலை..." ன்னு சொல்லிட்டு உலக அதிசயமாய் வெட்கப்பட்டாள் .... அப்பறம் கைல இருந்த மொபைலை நோண்டி ஒரு போட்டோவை காமிச்சா .... அதுல ஈன்னு சிரிச்சிட்டு இவ நிக்கறா ... பக்கத்தில நிக்கறது இவ ஹஸ்பண்ட் வாசு .....
அட போங்க இந்த காதல் இருக்கே எப்போ வரும் எப்படி வரும்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துரும் !!!

Wednesday, July 13, 2016

எனக்கு தெரிந்து பிசினெஸ் டெவலப்மன்ட் , சேல்ஸை அதிகப்படுத்த என்று marketing strategy ய lesson by lesson ஆ அறிமுகப்படுத்தி demonstrate பண்ணி implement பண்ணது நம்ம ஊர் மளிகை கடைகள் தான்....
முன்ன எல்லாம் ஒரு மாசத்துக்கு தேவையான provisions , toiletries எல்லாத்தையும் டிஷ்யூ பேப்பர் மாதிரி நீளமா ஒரு பேப்பர்ல எழுதி நம்ம அண்ணாச்சி இல்லேன்னா செட்டியார் கடைல கொடுத்தோம்னா அவர் "டேய்ய்ய் நம்ம கீழத்தெரு பச்சை கேட் வீட்டம்மாக்கு லிஸ்ட்ல இருக்கறது எல்லாமே போடுடா" ன்னு சொல்லிகிட்டே எத்தனை பெரிய டேபிள் இருந்தாலும் அதுல வெக்காம தன் காதுல சொருகிட்டு இருக்கற பேனாவை  எடுத்து நமக்கு முன்னாடி பொட்டலம்  பொட்டலமா எடுத்து வச்சு இருக்கற வேற வீட்டு சாமானை சரி பார்க்க ஆரம்பிப்பார்.. இதுல ரெண்டு விஷயத்துல skilled labour தேவைப்பட்டது.... ஒண்ணு அந்த சாமானையெல்லாம் சக்கு சக்குன்னு கோன் மாதிரி பேப்பரை மடிச்சு அதுல போட்டு மின்னல் வேகத்துல சணல் கயத்துல கட்டறது .. இன்னொன்னு அப்படி பேப்பர்ல மடிச்சதை எல்லாம் கரெக்ட்டா இது இதுல இது இதுதான்னு identify பண்ணி லிஸ்ட் அ கிராஸ் செக் பண்றது..... இதுல எனக்கு  ரொம்ப சுவாரஸ்யமா  இருந்தது என்னனா எண்ணெய் வாங்கறது... டின் டின் அ எண்ணெய்.. அதுல ஒரு funnel , ரொம்ப கம்மி அளவுன்னா ஒரு filler ஒரு pipette ஒரு burette (ஹிஹி ஒரு flow ல வந்துடுச்சு ).. அந்த தெரு முனைல வரும்போதே ஒரு மளிகை கடை இருக்கறது தெரிஞ்சுடும்... அப்படி ஒரு அரிசி தவிடு எண்ணெய் கலந்த ஒரு வாசனை வரும்...
அப்பறம் கஸ்டமர்  சர்வீஸ் ங்கற கான்செப்ட் ல ஹோம்  டெலிவரி மாடல் கொண்டு வரப்பட்டது... லிஸ்ட்டை கொடுத்தா "சாயங்காலம் அனுப்பிடறேன்க்கா " ன்னு சொல்லி சொன்ன சொல் தவறாம சைக்கிள் காரியர்ல டயர்ல கட்டின அட்டை பெட்டில எல்லா சாமானையும் போட்டு வீட்ல வந்து ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிட்டு தான் பணத்தை வாங்கிட்டு போவாங்க (இந்த payment on delivery , அப்பறம் 20 மினிட்ஸ் டெலிவரி டைம் இது எல்லாத்துக்கும் அண்ணாச்சி தான் முன்னோடி )... அப்படி செக் பண்ணும்போது ஏதாவது டேமேஜ்னா உடனே அந்த பையனே எடுத்திட்டு போய் மாத்திட்டு வந்துருவான் (வாடிக்கையாளர்  திருப்தி முக்கியம் இல்ல )... ...  அப்படி செக் பண்ணும் போது பேப்பர் பொட்டலம் வசதி இல்லன்னு ட்ரான்ஸ்பரென்ட் கவர்ல போட்டு ஒரு மெழுகுவர்த்தில சீல் பண்ணி அப்பறம் அதுக்குன்னு ஒரு சூடு போடற மெஷினை வேற கண்டுபிடிச்சாங்க ...
இது எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும்போது தான் பத்து  கிலோ இட்லி அரிசிக்கு 100 கிராம் உளுந்து,  3 பாக்கெட் sabena க்கு ஒரு lifebuoy சோப் (என்ன ஒரு சமயோசிதம் ! )ன்னு பிரீ கல்ச்சர் அ அந்த  அந்த கடையிலேயே கொண்டு வந்தாங்க (இந்த  பிக் பஜார் wednesday ஷாப்பிங் , big basket offer இதுயெல்லாம் ஞாபகம்  வந்தா நான் பொறுப்பு இல்லீங்க )... அப்பறம் பாத்தாங்க பொட்டுக்கடலை  வாங்க வந்தா அதை மட்டும் வாங்காம protinex உம் , எண்ணெய் வாங்க வந்து வெண்ணையும் வாங்கினா sales எங்கேயோ போகுமேன்னு ஸெல்ப் சர்வீஸ் சூப்பர் மார்கெட்டா மாத்தினாங்க... நாம தான் கண்ணு பாத்தா கை வாங்கற ஆளுங்களாச்சே...  அந்த ஐடியா சூப்பர் ஹிட் ஆச்சு .... ஓரே கடைல ஊரையே  வாங்கற மாதிரி இருந்தா கஸ்டமர்க்கு சௌகர்யம் இல்லையா அதனால இப்போ எல்லாம் எல்லா பெரிய சின்ன இப்படி எந்த கடையா இருந்தாலும் வாசல்ல நாலு காய் உள்ள நாலு பாய் ன்னு எல்லாமே வந்துருச்சு.... பொறாததற்கு போன் ஷாப்பிங் வேற ... போன்ல இது இது வேணும்னு சொன்னா டோர் டெலிவரி ...
இப்படி மாத்தி மாத்தி யோசிச்சு யோசிச்சு பிசினெஸ் அ டெவலப் பண்ற நம்ம ஊர் அண்ணாச்சிஸ்க்கு எவ்வளவு பெரிய ஹைப்பர் மார்க்கெட் வந்தா என்ன வால்மார்ட் வந்தா என்ன.... ஒண்ணும் பண்ண முடியாது....  இன்னைக்கு கூட பார்த்தேன் இங்க பக்கத்துல இருக்கற ஒரு சின்ன கடைய.... இவங்க எல்லாம் போட்டியை எப்படி சமாளிக்கறாங்கன்னு யோசிச்சிட்டே மேல பாக்கறேன்.. கடை போர்டுல "A.K.Provisions "ன்னு கடை பேருக்கு  கீழ அதை விட பெருசா "Big Basket " ன்னு ஒரு ஷாப்பிங் cart படத்தோட இருக்கு ....

Tuesday, July 12, 2016

"அம்மா .... நாளைக்கு நாங்க பீல்ட் டிரிப் போறோம் .... அதனால நாளைக்கு எனக்கு வெஜிடபிள் சாண்ட்விச் தரியாமா ..."
(அவள் ஸ்கூலிலே இந்த பிரெட், பிஸ்கட் , ஜாம், சாஸ் etc etc எல்லாத்துக்குமே பிக் தடா ... அதனாலேயே நான் ஆச்சர்யமா )
"என்னடா சாண்ட்விச் எல்லாம் allowed ஆ ..."
"நாளைக்கு மட்டும் ஓகே மா .... ப்ளீஸ் வெஜிடபிள் சாண்ட்விச் பண்ணித்தாமா...  அதுல மறக்காம சீஸ் வெக்கணும்.."
"ஓகே கண்டிப்பா தரேன்..." என்றேன்.

ராத்திரியே அதுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்தேன்... potato , carrot , peas, cheese....  காரணம் காலையில் சீக்கிரம் ஸ்கூலுக்கு ரெடி ஆகணும்..

அன்னைக்குன்னு பார்த்து காலையில் ஏனோ அலாரம் அடிக்கவில்லை ... திடீரென எழுந்து பார்த்தால் 6.45.... தொலைந்தேன்.. 7.15 மணிக்குள் குழந்தைக்கு லன்ச் பாக்ஸ் ரெடியாகணும் ...  வாக்கு கொடுத்தாச்சு வேற ... இனி ஏமாற்ற மனம் இல்லை ... அலாரம அலற விடாம புடிச்சிட்டு கதவு கிட்டயே law புத்தகத்தோட காத்துட்டு இருந்த நம்ம பேமஸ் Mr Murphy ய நான் அப்போ  கவனிக்கலை ...எப்படியாவது பண்ணிடணும்னு போய் கிச்சன் லைட்டை on செய்தால் டப் என்று கரண்ட் கட் ... உள்ள வந்து சோபால கால் மேல கால போட்டு உட்கார்ந்துட்டார் Mr Murphy ....

எப்படியோ அடிச்சு புடிச்சு வெயிட், கேஸ்கட்  இப்படி எதுவுமே  சரியில்லாத சின்ன cooker ஐ உபயோகித்து (அதான் கரண்ட் இல்லையே எலெக்ட்ரிக் cooker க்கு ) vegetable சாண்ட்விச் க்கு தேவையான filling ரெடி செய்தேன் ... இதில் அவசரத்தில் காபி கூட குடிக்காத மப்பில் ( coffee maker no current பகவானே ) இஞ்சி என்று நினைத்து பொங்கலுக்கு வாங்கிய மஞ்சளை துருவி பின்ன என்னடா ஏதோ வித்யாசமா இருக்கேன்னு பாத்து அப்பறம் அவசர அவசரமா இஞ்சியை  என் விரலோடு சேர்த்து துருவி (ரத்தத்தை சிந்தி உழைச்சு) , அப்பறம் விரலை கவனிக்க வேற ஒரு 5 நிமிஷம் வேஸ்ட் பண்ணி என்று ஓரே அமர்க்களம்...

கடைசீயா  பேக் பண்ணிட்டு பாக்கறேன் சீஸ் போடலை.... உடனே  "கண்ணா சீஸ் தனியா slice ஆ வெக்கறேன் ...." அப்டின்னு பெர்மிஷன் வாங்கி அவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு உக்காந்து இருந்த Murphy ய தெனாவட்டா ஒரு லுக் விட்டேன் ... என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு எழுந்து போய்ட்டார் Mr . Murphy ....

3 மணிக்கு ஸ்கூலுக்கு அவளை கூட்டிட்டு வர போனா மேடம் முகமே சரியா இல்லை ... ஏண்டா டல்லா இருக்கன்னு கேட்டா "அம்மா நீ வாட்டர் பாட்டிலே வெக்கலை... எவ்வளவு தாகமா இருந்தது தெரியுமா.. ஸ்கூலா இருந்தாலாவது கேன் இருக்கும் ... பீல்ட் டிரிப் வேற ... ஸ்கூலுக்கு திரும்பி வந்த உடனே தான் தண்ணி  குடிச்சேன் தெரியுமா " என்றாள் (யாரிடமும் கேக்க மாட்டாள் மானஸ்த்தி )... உடனே நான் "அய்யோ சாரிடா ... ஆனா நீ பொறுப்பா வீட்ல இருந்து கிளம்பும் போதே பார்த்து இருக்கலாம்ல " என்று நைசாக அவள் பக்கம் பாலை நவுத்தினேன் ... உடனே அவள் "சரி அதுகூட பரவால்ல ஆனா நீ வெஜிடபிள் சாண்ட்விச் ன்னு சொல்லிட்டு அதை ஏன் தரலை... நான் எப்படி ஏமாந்து போய்ட்டேன் தெரியுமா " என்று அழ ஆரம்பித்தாள்....

"ஹேய் அம்மா அதுதானடா தந்து இருந்தேன் ..." என்கிறேன்.... அதுக்கு அவள் "எங்க அப்படினா அதுல round ஆ slice slice ஆ கட் பண்ண cucumber , tomato , onion எல்லாம் இல்லயே... நீ ஏதோ மசால் எல்லாம் குக் பண்ணி இல்ல வெச்சுருந்த ...." என்றாளே பார்க்கணும்....
அட கடவுளே இது தெரிஞ்சிருந்தா 7 மணி வரைக்கும் தூங்கி இருந்தா கூட 10 நிமிஷத்துல ரெடி பண்ணி இருக்கலாமே என்று சீவின என் விரலை பார்த்து நிமிர்ந்தால் கதவுக்கு பின்னால் இருந்த  Mr .Murphy விழுந்து விழுந்து சிரிக்கிறார்...

Requirements சரியாக புரியாமல்  project பண்ணி முடிச்சு release க்கு பதிலா scrap பண்ண மாதிரி ஆயிடுச்சு !!!

Monday, July 11, 2016


கடந்த  சில  வருஷங்கள்ல இந்த டிவி நியூஸில் தான் எத்தனை வகையான  டெவலப்மென்ட்ஸ் (??).. ஆரம்பத்தில் கையில் கத்தையாக பேப்பர்களை வைத்து கொண்டு அதை பார்த்தும் பார்க்காததை போல் அழகாக அபிநயம் பிடித்து கொண்டே வாசிப்பார்கள்.... ரொம்ப தெளிவாக நியூஸ் நமக்கு  புரிஞ்சிடும் ...  சில வருடங்களில் அதை கவனிப்பதை விட அவர்கள் அணிந்து இருக்கும் ட்ரெஸ் மற்றும் அஸெஸரீஸை பார்க்கவென்றே நியூஸை ஆன் செய்ய வைத்த சில ட்ரெண்ட் செட்டர்ஸ் வந்தார்கள்.. ஆனால் அவர்கள் பார்க்க மட்டும் அழகாய்  இல்லை நியூஸையும் ரொம்ப அழகாக வாசித்தார்கள்... அப்புறம் இந்த தனியார் டிவி வந்த புதிதில் இந்த நியூஸ்க்கு நடுவில் திடீரென ஒருவர் கையில் மைக் வைத்து  கொண்டு ஸ்பாட்டில் நின்று பேச தொடங்கினார் (அதான் சாட்டிலைட் வந்துடுச்சே எங்க இருந்து வேணா பேசலாம்).... நிறைய தனியார் சேனல்கள் வந்த உடன் நடந்த ஒரு புதுமை தமிழ் சேனல்களில் இங்கிலிஷ் நியூஸ் (!) .... அதில் பார்த்தால் இந்த பிரபலமான நியூஸ் ரீடெர்ஸின் வாரிசுகள் வாசிப்பார்கள் ... இதுவும் பழசாகி விட்டதால்  அரை மணி நேர நியூஸில் பதினைந்து நிமிடம்  விளம்பரத்தை நுழைத்தனர் .... அப்றம் தனியாகவே  விளம்பர இல்லையில்லை நியூஸ் சேனல்கள் ஆரம்பித்தார்கள் ... இது எல்லாமே பத்தாது என்று நினைத்தார்களோ என்னவோ அடுத்து நியூஸ்க்கு நடுவில் பொது அறிவு (???) சிறப்பு பார்வை என்ற பெயரில் முக்கியமான சில தகவல்களை தர ஆரம்பித்தனர் (ஆவிகள் பழிவாங்கும் ஊர் .... தெய்வங்களை வாழ வைத்த சாமியார்கள் .. இப்படி ... ).... பட் இதை எல்லாம் விட  இப்போ  சில வருஷங்களா எல்லா சேனல்களிலும் தவறாம வர்ற ஒரு டைப் நியூஸ் தான் டிபேட் என்னும்  விவாதம்... இதில் பார்த்தால் ஓரே ஸ்க்ரீனில் 5 அல்லது 6 ஸ்க்ரீன் ஓடுகிறது.... நடுவே விவாதத்தை நடத்தி செல்பவர்.. அவரை சுற்றி உள்ள மற்ற ஸ்க்ரீனில் விதவிதமான முகபாவங்கள் (நிறைய அழகு காட்டும் பாவங்களும் , நிறைய வகையான தூங்கும் பாவனைகளும் இதில அடங்கும்) .... இதில் நடுவில் உள்ளவர் பஞ்சாயத் தலைவர் போல் சில நேரமும், கோர்ட் டவாலி போல் சில நேரமும், ஜட்ஜ் போல் மேஜையை தட்டி சில நேரமும், மைக்கை முழுங்கியவர் போல கத்தி பல நேரமும், தூங்குபவர்களை எழுப்பியும்,  குழாயடி சண்டை போடுபவர்களை பிரித்தும் விவாதத்தை நடத்த வேண்டும் ... இதில் சின்ன மானிட்டர் டிவி வைத்து இருப்பவர்கள் ரொம்ப பாவம் ... உத்து உத்து பார்த்து தான் யார் கத்துகிறார்கள் என்று கவனிக்க வேண்டும் ...இதை எல்லாம் கூட தாங்கிக்கலாம் ஆனா எல்லாஆஆஆ சேனல்லையும் எல்லா விவாதத்தை நடத்துறவங்களும் ஒரேரரர மாறி போட்டுட்டு வராங்களே ஒரு கோட் இல்லைன்னா ஒரு ஷெர்வானி அதை மட்டுமாவது மாத்த சொல்லி பெட்டிஷன் போட ஏதாவது ஸ்பெஷல் செல் இருக்கா ...
இனி என்ன எல்லாம் புதுமை பண்ண போறாங்களோ இந்த நியூஸ் சொல்றதுல ...ப்ளீஸ் அதுக்குள்ள யாராவது ஷோபனா ரவியையோ இல்லை சந்தியா ராஜகோபாலயோ நியூஸ் படிக்க கூப்பிடுங்கப்பா (பாத்திமா பாபு ஆக்ட்டிங்ல பிசீ இல்லேன்னா அவங்களையும் தான் ) !!!!

Saturday, July 9, 2016

Men are from Mars, Women are from Venus..
இப்படி இருந்தா அப்புறம் பூமி எப்படி தாங்கும்.... இந்த  இரண்டு கேடகரி யும் சேர்ந்து பண்ற அமர்க்களம் இருக்கே...

படிக்கும் போது எந்த நாள் எந்த பரிட்சை என்பது கூட தெரியாமல் பத்து மணி எக்ஸாம் க்கு 10.10 க்கு கூலாக போய் பாக்கெட்டில் பதினாறாய் மடித்து பஸ் டிக்கெட் சைஸ் க்கு இருக்கும் ஹால் டிக்கெட் ஐ கவனமாக மெதுவ்வா பிரித்து காட்டி விட்டு எக்ஸாம் ஹால் க்கு என்ட்ரி விடும் மார்ஸ்... 10 மணி எக்ஸாம் இற்கு 10 மணி வரை எக்ஸாம் ஹால் க்கு வெளியே புத்தகத்தை வைத்து கொண்டு விழுந்து விழுந்து மண் எல்லாம் அப்ப படிக்கும் ரகம் வீனஸ்... ஒரே மெயின் ஷீட்டில் ஒரு மணி நேரத்திலேயே எக்ஸாம் முடித்து விட்டு பேப்பர் பேப்பரய் வாங்கி எழுதி தள்ளும் வீனஸ் ஐ வேடிக்கை பார்த்து விட்டு சோம்பல் முறித்து விட்டு வெளியே செல்லும் மெஜெஸ்டிக் மார்ஸ், ரிசல்ட் வரும் போது அசால்ட் மார்ஸ் ...

காலையில் ஆபீஸ் போன உடன் வீனஸ் போவது ரெஸ்ட் ரூமிற்கு டச் அப் செய்ய என்றால் மார்ஸ் போவது டீ குடிக்க பில்ட் அப் செய்ய... ஆகா மொத்தம் நேரே சீட் க்கு போவது வெகுவே வெகு சில வியாழன்கள் ஐ மீன் ப்ரஹஸ்பதிகள் தான்..... நாற்பது பக்க டாகுமென்ட் என்றாலும் சளைக்காமல் டைப் அடிக்கும், நாற்பது பேர் மீட்டிங் என்றாலும் நிறுத்தாமல் நாலு பக்கத்திற்கு லெக்சர் தரும் வீனஸ், நாலு நிமிஷம் கூட அதை கேட்க முடியாமல் மொபைலை  நோண்டும் மார்ஸ் ...

வீட்டில் காலையில் எழுந்தவுடனேயே அந்த கோள்களின் கோளாறுகள் ஸாரி வித்யாசங்கள் தெரிய துவங்கும்... வீனஸ் நேரே பால் பக்கெட் ஐ தேடினால் மார்ஸ் ஒ நியூஸ் பேப்பர் ஐ அள்ளும்... வீனஸ் பேப்பர் படிக்காது என்று இல்லை ஆனால் மைண்டில் முதலில் வருவது காபி (அதனால் தான் இப்போதைய ட்ரெண்டில் கபே காபி டே க்கு அத்தனை மவுசு போல) ... கல்கத்தா காளி போல, இருக்கும் எல்லா கைகளை கொண்டும், எல்லா நாளும் செய்யும், அதே பழகிய வேலைகள் தான் என்றாலும், வாய்க்கு மட்டும் வேலை இல்லையே என்று எதாவது டென்ஷன் இல் புலம்பி கொண்டோ கத்தி கொண்டோ செய்யவில்லை என்றால் மனம் திருப்தி படாதது வீனஸ் என்றால்... லௌட் ஸ்பீக்கரையே முழுங்கி விட்டு கத்தினாலும் காதே வேலை செய்யாமல் இண்டர்நேஷனல் பொருளாதாரம், வீட்டை தவிர வேறு எங்கு நடந்தாலும் நடந்த அந்த கலவரம் இதில் மட்டுமே மூழ்கி இருக்கும் மார்ஸ்.... இந்தியா வாண்ட்ஸ் டு நோ அர்னாப் ஐ விட உச்சஸ்தாயில் ஐ வான்ட் டு நோ என்று கத்தினாலும் துச்சமாய் பார்த்து விட்டு மறுபடியும் பேப்பரிலோ லேப்டோப்பிலோ தலை கவிழ்ந்துரும் .....

குழந்தை தூங்கிட்டு இருக்கா .. நான் கடைக்கு போயிட்டு வந்துறேன்... அவ எழுந்தா கொஞ்சம் cerelac கரைச்சு கொடுங்க என்று சொல்லி கிளம்பும் வீனஸ் ... திரும்பி வந்து பார்த்தால் facial செய்தது போல் குழந்தையின்  முகம் எல்லாம் cerelac pack போட்டு வைத்து கண்ணில் வெள்ளரிக்காய்க்கு பதிலாய் வாயில் teether ஐ வைத்து இருக்கும் மார்ஸ் ...

கணவருக்கு பர்த்டே வந்தாலும் நடு ராத்திரி சர்ப்ரைஸ் என்ற பெயரில் "இது நானே பண்ண கேக் " என்று எழுப்பி அதை வெட்ட முடியாமல் வெட்ட வைத்து "டார்லிங் உங்க பர்த்டேக்கு எனக்கு(???) என்ன ஸ்பெஷலா தர போறீங்க " என்று கேக்கோட சேர்த்து பர்ஸுக்கும் வேட்டு  வைக்கும் வீனஸ் ....  அரை தூக்கத்தில் "ம்ம் நல்லா நாலு சாத்து தரேன் " என்று மைண்ட் வாய்ஸ் கொடுத்தாலும் "ஹௌ ஸ்வீட் உனக்கு என்ன வேணும்னு கேளுமா " என்று  சமாளிக்கும் மார்ஸ் (எப்படியும் வாக்குறுதியை amnesia வில் மறந்துற போற தைரியம் தான்)

ஒரு இடத்துக்கு கிளம்பனும்னா இதுகள் பண்ற அக்கிரமம் இருக்கே.... கண்ணாடி யை விட்டு ஒரு இன்ச் கூட மாறாமல் ஒரு மணி நேரமாக டிரஸ் பண்ணும் வீனஸ் பின்னால் பிரேக் டான்ஸ் ஆடி கொண்டே சைடு கேப்பிலோ இல்லை ஹை ஜம்ப் செய்தோ எப்படியோ தலையை மட்டும் விடாமல் வாரி கொண்டு ஒரு ஜீன்ஸ் ஐ அணிந்து கொண்டு ஊருக்கு முன்னால் போய் பைக்கையோ காரையோ ஸ்டார்ட் பண்ணிவிட்டு அதன் ஹார்ன் இல் இளையராஜா போல வித விதமா மியூசிக் போடும் மார்ஸ்... அப்படி கிளப்பறாங்களாம் .... வீட்டில் வேறு சில குட்டி வெள்ளியோ புதனோ இருந்தால் அதை வேறு கிளம்பணும் என்ற எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருக்க மார்ஸ் இடம் ட்ரைனிங் போலாம்... ஆனாலும் வீனஸ் அசருவதில்லை ....

வீனஸ் ஒரு நாலு நாள் எங்கயாவது  போய்விட்டு திரும்பினால் வீடு முழுவதும் டவல் , டீ ஷர்ட்ஸ் ஷார்ட்ஸ் , கம்ப்யூட்டர் டேபிள் டிவி டேபிள் டைனிங் டேபிள் எல்லாத்திலும் காபி கப்ஸ்,  பெட் மேலே சாக்ஸ் , தரை எல்லாம் நியூஸ் பேப்பர் என்று ஒரு வார் பீல்டு ஆக மாற்றி இருக்கும் மார்ஸ் ...

ஒரே நேரத்தில் பல மொழிகளை கலந்து கட்டி கேப் விடாமல் ரீல் ஓட்டும் வீனஸ் முன்னால் பயங்கர ஸ்லோ ஸ்பீட் ரிசீவராய் என்ன பேசுகிறாள் என்று புரிந்து கொள்ளவே முழி பிதுங்கி நிற்கும் போது "இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கேனே எதாவது பதில் சொல்றீங்களா.. என்ன அழுத்தம் பாருங்க உங்களுக்கு" என்று கிரெடிட் வாங்கி கொள்ளும் மார்ஸ்....

எவ்வள்ளவு தான் கூல் அண்ட் அசால்ட் ஆக இருந்தாலும் இந்த கன்வின்சிங் உரிமை அந்த  உரிமையை நிலைநாட்டும் திறமை எல்லாம் டிராமடிக் வீனஸ் க்கே சொந்தம்... அது ஒரு நடமாடும் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் ஸ்டேஷன்... அதும் எந்த வித தடங்கலும் இல்லாமல் கண்ணில் இருந்து கொட்டிகொண்டே இருக்கும் ஹைட்ரோ பவர் இல் ஹை வோல்டேஜ் ஷாக் வாங்கும் மார்ஸ் வாய் அடைத்து போய் விடும்..... நடுவே நம்ம பூமி (அதாங்க எர்த் ) சரியாய் இல்லேன்னா பாவம் short circuit தான்...

Wednesday, July 6, 2016

நாய் என்றாலே கொஞ்சம் பயம்.... அதை வளர்ப்பதை நினைத்தாலே நிறைய அருவருப்பு என்று இருந்த நான்...
இப்படி இருக்க ஒரு நாள் ஒரு சின்ன கூடையை ஆஃபிஸில் இருந்து வரும்போது கொண்டு வந்தார் அப்பா.. என்னடா என்று உள்ளே பார்த்தால் வெள்ளை கலரில் புஸு புஸு என்று ஒரு பந்து... ஆசையாய் எடுத்தால் அது துள்ளி ஷெல்ப் அடியில் உருண்டது .... என்னவென்று பார்த்தால் பத்தே நாள் ஆன ஒரு குட்டி பொமரேனியன்.... அவ்ளோதான் இதை எல்லாம் எதுக்கு வீட்டுக்கு எடுத்துட்டு வந்து இருக்கார் என்று இருந்தாலும் அழகா புஸு புஸு என்று அப்பாவி கண்களோடு இருந்த அதை திட்ட மனசு வரலை... உடனே ஒரு சின்ன கூடையில் (ஸ்கூலுக்கு எல்லாம் லன்ச் எடுத்துட்டு போவோமே ஒரு பிளாஸ்டிக் கூடை அது) மெத்தென்று துணியை விரித்து அதுக்கு பெட் ரெடி பண்ணி அதுல படுக்க வெச்சா சமத்தா தூங்குது... இப்படியே ஒரு ஒரு வாரம் போச்சு...
ஒரு நாள் காலைல தூங்கி எழுந்து கட்டில் கீழ காலை வெச்சா மெத்துன்னு இருக்கு .. உடனே கீக்கீன்னு ஒரு சௌண்ட்... பாத்தா அந்த குட்டி எப்படியோ அதோட பெட்ல உருண்டு உருண்டு கூடையை கீழ தள்ளி வெளிய வந்து இருக்கு.... ஓகே வளர ஆரம்பிச்சாச்சு so நாமகரணம் பண்ணிடலாம்னு நானும் என் தங்கையும் பேரெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சோம்.... ஜூலி ன்னு வெச்சா கிளிஞ்சல்கள் படத்துல வர "ஜூலி ஐ லவ் யூ" ன்னு பாடி இவ் டீசிங் பண்ணுவாங்களே பேசாம பப்பி ன்னு வெக்கலாம்னு முடிவு பண்ணோம் (பப்பி ஷேம்னு கிண்டல் பண்ண மாட்டங்களான்னு கேக்க கூடாது ... வேற பேரே யோசனைக்கு வரலை so dog’s puppy is puppy அப்படின்னு புத்திசாலித்தனமா தான் வெச்சோம்)..
அப்பறம் அதை சீராட்டி பாராட்டி வளர்க்கறதையே தன் லட்சியமா வெச்சு இருந்தார் அப்பா... காலைல எழுந்த உடனே அதுக்கு bonnisan டானிக் .... nestle milk .... மத்தியானம் தயிர் சாதம் னு பாத்து பாத்து கவனிக்கப்பட்டது பப்பி… கேட்டா கை குழந்தை மாறியாம்... இதுல அம்மா வேற "அவர் பொண்ணுங்களுக்கு கூட அவர் இப்படி பாத்து பாத்து டானிக் எல்லாம் கொடுத்தது இல்லை" ன்னு பெருமையா சொல்லி வெறுப்பேத்துவாங்க... அதுலயும் அதுக்கு clinic plus ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி அது நெத்தியில் சிவப்பு சாந்துல அப்டி ஒரு திலகம் வெப்பார் பாருங்க இன்ஸ்டன்ட் ஆ அழகா ஆய்டும்....
அதுக்கு ட்ரைனிங் கொடுக்கறேன்னு அவர் ஒரு ப்ரோக்ராம் சார்ட் போட்டாரே பார்க்கணும் ...  காலைல அதை தூக்கி சோபா மேல வெச்சுடுவார்... அது சோபா விளிம்பு வரைக்கும் வந்து எட்டி கீழ பாத்து கீகீகீகீன்னு கத்தியே எல்லாரையும் எழுப்பி விட்டுடும் .... என்னன்னு கேட்டா அது குரைக்க கத்துக்க ட்ரைனிங்  ப்ளஸ் மேல இருந்து கீழ குதிக்க ட்ரைனிங் ஆம் ... அது இப்படியே கத்தி கத்தி அப்பாவையே கீழ இறக்க வெச்சிடும் (யார்கிட்ட ன்னு ஒரு லுக் வேற விடும்... எல்லாம் அப்பா கொடுத்த செல்லம் ம்க்கும் )... அப்றம் தான் தெரிஞ்சது அது அவர் எங்களை எழுப்ப பண்ண டெக்னிக்ன்னு... அப்றம் அடுத்த ட்ரைனிங் "பப்பி பேப்பரை எடுத்துட்டு வா" .... அது உடனே வேகமா வாசலுக்கு போய் பேப்பரை பரபரன்னு பிராண்டி கசக்கி பேப்பரை கொண்டு கூட வராது அங்க இருந்தே கத்தும்... உடனே நான் போய் எடுத்துட்டு வருவேன்.... அப்றம் இது ரொம்ப வீட்ல எல்லா மூலைக்கும் போய் ஒளிஞ்சுக்குதுன்னு ஒரு பெரிய கூடைய (இந்த காய் எல்லாம் கொண்டு வந்து விப்பாங்களே அந்த மாறி கூடை ) வாங்கி அது மேல கவுத்து போட்டா my dear kuttichathaan  ல வர மாறி கூடை மட்டும் எல்லா ரூம்க்கும் ட்ராவல் பண்ணும்... வீட்டுக்கு வந்த நிறைய பேர் பயந்து ஓடி போய்டுவாங்க... இப்படியே நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா பப்பி வளர்ந்தது...
இதுக்குள்ள அப்பாக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வேற ஊருக்கு வந்தோம்... பப்பிய பாத்து அந்த தெருவுக்கே பயம்... காரணம் திருடனை பார்த்து கத்தினா பரவால்ல இது எங்க காம்பௌண்ட் அ தாண்டி யார் நடந்தாலும் விடாம கத்தும்... எல்லாருமே திருடன் மாறி ஓடி தான் போவாங்க எங்க வீட்டை தாண்டும் போது மட்டும்.... இப்போ தான் எனக்கும் பப்பிக்கும் real cold war ஆரம்பிச்சது ... பின்ன என்ன நான் கீழ உட்கார்ந்தாலே என்னை கொஞ்சுறேன் பேர்வழின்னு என் மடில வந்து முட்டும்... அது கூட பரவால்ல என்னவோ என் கூந்தலுக்கு இயற்கை மணம் இருக்கா இல்லையான்னு டெஸ்ட் பண்ற மாறி எப்பவும் என் பின்னலை பிடிச்சு இழுத்து அதுல இருக்கற hair bandஅ முழுங்கிடும்... இது முழுங்கியே நான் ஒரு வாரத்துக்கு 10 band வாங்கற மாறி ஆயிடுச்சு... அப்றம் அதை போய் எங்கயாவது vomit பண்ணி வெக்கும்...house owner க்கு பயங்கர கோபம் வரும்... அதுல இருந்து எங்க இருந்தாலும் ஓடி போய் அவங்க portion ல தான் இது என்னோட bandஐ output பண்ணும்...
இதுல இன்னும் கொடுமை என்னனா ஒரு பாட்டு பாட கூட எனக்கு சுதந்திரம் இல்லாம போய்டுச்சு..... நான் பாட வாய திறந்தாலே அது கத்த ஆரம்பிச்சிடும்... இதுல அக்கம் பக்கத்துல இருந்த பசங்க எல்லாம் "அக்கா... நாங்க சொல்ல முடியாததை உங்க பப்பி பண்ணுதுக்கா " ன்னு நமுட்டு சிரிப்போடு சொல்லிட்டு ஒடுங்க .... ஒரே டென்ஷன் தான் எனக்கு...வள் வள்ன்னு  அதோட போட்டி போட்டு நானும் குரைப்பேன் இல்லல்ல கத்துவேன்...   ஆன அப்பா வீட்டுக்கு வரும்போது மட்டும் அது போடுமே ஒரு படம்... அம்மாடி... பாத்தா இதுவா இப்படி எல்லாம் பண்ணித்துன்னு அப்படி ஒரு பாவமா இருக்கும்... அப்பாவை பார்த்தால் ஓடி போய் கட்டிக்கறது என்ன நக்கறது என்னன்னு ஒரே கொஞ்சல்ஸ்... இதுல அப்பா வேற "எனக்கு மூணு பொண்ணு" ன்னு சொல்லி வெறுப்பேத்துவார்... நான் முறைச்சா "அதுல ஒண்ணு ரொம்ப நன்றி உள்ளது" ன்னு சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிப்பார்.... இப்படியே போனப்போ ஒரு நாள் கோபத்துல "அப்பா… இந்த வீட்ல ஒண்ணு பப்பி இருக்கணும் இல்ல நான் இருக்கணும் " அப்படின்னு சொன்னா "ஆமாமா ஒரு வீட்ல ரெண்டு நாய் இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்" அப்படின்னு ஜோக் அடிக்கிறார்...
மறுபடியும் அப்பாக்கு ட்ரான்ஸ்பர்...இந்த தடவை பப்பிய கூட்டிட்டு போக முடியாது ஏன்னா புது  house owner child specialist doctor…அதனால அப்பாவோட ஒரு பிரெண்ட் அவர் வீட்ல பப்பிய விட்டுட சொன்னார்... விட்டுட்டு வந்தப்போ கண்ணுல ஒரே தண்ணி அதுக்கு... எனக்கே கொஞ்சுண்டு பாவமா இருந்தது ... பாவம் அதை எவ்வளவு திட்டிட்டோம்னு... வேற ஊருக்கு போய் கொஞ்ச நாள்ல பப்பி இல்லாம பழகிடுச்சு ... ஒரு தடவை அந்த மாமா போன் பண்ணப்போ சொன்னார் "நீங்க விட்டுட்டு போய் ஒரு ஒரு வாரம் பப்பி சரியாவே சாப்பிடல... இப்போ பரவா இல்ல.... she is very affectionate... எனக்கு இன்னொரு பொண்ணு தான் அவ" ன்னு...
இப்படியே ஒரு 4 வருஷம் ஓடிடுச்சு... ஒரு தடவை ஏதோ வேலையா அந்த ஊருக்கு போய் இருந்தோம்... சரி அந்த மாமா வீட்டுக்கு போலாம்னு போனா நாங்க வீட்டுக்குள்ள நுழையறோம் அப்பாவோட குரலை கேட்டு எங்க இருந்தோ வேகமா ஓடி வந்து அப்பா மேல தாவி நக்கி முத்தம் கொடுத்துன்னு ஒரே பாச மழை பொழிஞ்சது பப்பி... எங்க எல்லாரையும் பாத்துட்டு யார்கிட்ட வரது யாரை விடறதுன்னு தெரியாம எங்க எல்லாரையும் சுத்தி சுத்தி வந்தா... என்னை பாத்துட்டு அவ்ளோ சந்தோஷமா கத்து கத்துன்னு கத்தறா... அந்த மாமி "ஏம்மா நீ நல்லா(?) பாடுவியாமே எங்கே ஒரு பாட்டு பாடு" ன்னு சொன்னாங்க பாருங்க உடனே நான் பப்பிய ஒரு லுக் விட்டேன்... என்ன அதிசயம் நான் பாட ஆரம்பிச்ச உடனே என்கிட்ட வந்து மடியில தலை வெச்சு அமைதியா கேட்டா பாருங்க அங்க தான் என் மனசை என்னவோ பண்ணிட்டா... அப்றம் கிளம்பறோம் கண்ணுல கண்ணீரோட போகவே விடலை... நாய் நன்றி உள்ளதுன்னு சும்மாவா சொன்னாங்க !!!

பின் குறிப்பு :
அந்த தடவை ஊருக்கு திரும்பி வந்து ரொம்ப நாள் நான் பப்பி  ஞாபகத்தில்  இருந்தேன் ... ஒரு மூணு நாலு மாசம் இருக்கும் அந்த மாமா போன் பண்ணார் "sorry to say ma puppy is no more with us…நேத்து தான் போனா... இப்போதான் அவளுக்கு last rites எல்லாம் பண்ணிட்டு வந்தேன்..." அப்படிங்கறார்.... வாழ்க்கையில் முதன் முதலா அன்னைக்கு தான் பப்பிக்காக என் கண் நிறைந்தது ....

Tuesday, July 5, 2016

"அப்பா சிவா ... சாயங்காலம் வரும்போது மறக்காம அந்த கண் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாப்பா... இந்த வலது கண்ணுல பவர் கூடி இருக்கறா மாறி இருக்கு " என்றார் அப்பா .

ஆஃபீஸ்க்கு லேட் ஆன டென்ஷனில் வெடுக்கென்று "ஏன்பா என்னதான் உங்க பிரச்சனை .... யார் எப்படி போனாலும் உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் சிந்தனை.. உங்க கண்ணுக்கு அப்படி ஒண்ணும் ஓடி போய் பாக்கற மாறி பிரச்சனை இல்லை ... எனக்கு இருக்கற பவர்ல பாதி கூட உங்களுக்கு இல்ல.. இந்த வயசுலயும் நல்லா தான இருக்கீங்க வேற எந்த ஹெல்த் ப்ராப்ளமும் இல்லாம .... அப்புறம் ஏன்பா இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு  கூட உடனே டாக்டர்கிட்ட ஓடணும்ங்கறீங்க .... எனக்கு இந்த மாசம் இயர் எண்ட் ... சீக்கிரமா வீட்டுக்கு வரது நடக்கவே நடக்காது... " என்று கத்தினேன் ...  உடனே "ஏன்பா இப்படி கோபப்படறீங்க .. தாத்தா ஒண்ணும் தப்பா கேக்கலையே... உங்களுக்கு முடிலனா நான் கூட்டிட்டு போறேன்.." என்றபடியே வந்துவிட்டான் என் அருமை மகன் அரவிந்த்..... "ரெண்டு பேரும் என்னவோ பண்ணுங்க" என்று சொல்லி கிளம்பி விட்டேன் ....

என் அப்பா முன்னலாம் இப்படி இல்லை ... எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவர் டாக்டரிடம் போய் நான் பார்த்ததே இல்லை ... எதுக்கும் அலட்டிக்க மாட்டார்...  இப்போ கொஞ்ச காலமா தான் இப்படி ... அம்மா போன அப்பறம் தான் னு தோணுது .... தன்னை பத்தின கவனம் ரொம்ப அதிகமாயிடுச்சு அவருக்கு ... காலைல எழுந்திருப்பதில் இருந்து தூங்க போகும் நேரம் வரைக்கும் ஒரே வாக்கிங், டயட்டிங் என்று ஏதோ டைம்டேபிள் போட்டுகொண்டு செய்து கொண்டு இருக்கிறார்....யாரையும்  ஒரு தொந்தரவும் செய்வது இல்லை ... தனக்கு வேண்டிய டயட் கஞ்சி போட்டு கொள்வதில் இருந்து அவருடைய எல்லா  தேவைகளையும் அவரே தான் பார்த்துக்கறார்... இருந்தாலும் அவருடைய எதுவும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்கிற அவர் நடவடிக்கை பல சமயம் எரிச்சலை வரவழைத்து விடுகிறது... என்றைக்காவது ஒரு நாள் வீட்டில் எல்லாருக்கும் ரெஸ்ட்டாக இருக்கட்டுமே  என்று ஒரு சேஞ்சுக்கு  ஹோட்டல் போலாம் என்றால் கூட உடனே "நீங்க எல்லாம் போய்ட்டு வாங்கப்பா நான் எனக்கு ஒரு மிளகு ரசம் வெச்சி சாப்டுக்கறேன் " என்பார்.... உடனே என் மனைவிக்கு மனசு கேக்காது ... அவளே வீட்டில் சமைத்து விடுவாள்.. ஒரு சின்ன தலைவலி இல்லை சரியாக யூரின் போகவில்லை என்றால் கூட உடனே "சிவா டாக்டர் கிட்ட போய்டலாம்ப்பா ... இதை எல்லாம் அலட்சியமே பண்ண கூடாது ... ஒரு வேளை கிட்னி ல ஏதாவது பிரச்சனை வந்துட்டா " என்பார் ... பல சமயம் அவரை பார்க்கும் போது ரொம்ப ஓவர் obsessed ஆக இருக்காருன்னு கூட எனக்கு தோணும் ... அவர் பேரன் மட்டும் எப்போதுமே அவருக்கு சப்போர்ட் ... என்னவோ பண்ணிக்கட்டும் என்று விட்டு விடுவேன்..

ஆனா என்னவோ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப வெடுக்கென்று பேசிட்டேன்... ஆஃபிஸ் வந்தும் மனசெல்லாம் என்னவோ போல இருந்தது ... "ச்சை ஏன் இப்படி காட்டு மிராண்டித்தனமா பேசிட்டேன் இன்னைக்கு ... பாவம் அவர் மனசு என்ன பாடு படுதோ " என்று நினைத்து வேலையே சரியாக ஓடவில்லை... சட்டென்று கண் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன்.... சாயங்காலம் சீக்கிரம் வீட்டிக்கு போய் அப்பாவை ஐ செக்கப்பிற்கு அழைத்து செல்ல முடிவு செய்த பிறகு மனசு கொஞ்சம் சமாதானம் ஆனது.. வேலையில் மூழ்கினேன்... மத்தியானம்  ஒரு முணு மணிக்கு மொபைல் அழைத்தது.... எடுத்தால் "அய்யோ மாமா நம்மள விட்டு போய்ட்டாருங்க " என்ற என் மனைவியின் அழுகை குரல்... இடி விழுந்தது போல இருந்தது ...

அமைதியாக தூங்குவதை போல இருந்த அப்பாவின் முகத்தை பார்க்கவே  முடியவில்லை.... அழுகை அடைத்து கொண்டு வெளிய வர மறுத்தது .... சலனமே இல்லாமல்  என்னை பார்த்த அரவிந்தின் பார்வை  என்னை கொல்லாமல் கொன்றது.... என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவின் அருகே சாய்ந்து விட்டேன் ... எப்போ வந்தார் என்றே தெரியவில்லை என் தோளை  அணைத்தார் அப்பா ரெகுலராக செக்கப்பிற்கு போகும் டாக்டர்... "சிவா உங்க இழப்பு எனக்கு புரியுது... இந்த சமயத்துல இப்படி அவசரப்படுத்தறது எனக்கே ரொம்ப சங்கடமா தான் இருக்கு.... ஆனா உங்கப்பாவோட உயர்ந்த குணத்துக்கு அவரோட ஆசைய நிறைவேத்தணும் .. அதுக்கு இப்பவே அவரை ஹாஸ்பிடல் கொண்டு போகணும்... பிளீஸ் கொஞ்சம் கோவாப்பரெட் பண்ணுங்க " என்றார் .... எனக்கு ஒன்றும் புரியாமல் முழித்தேன்..

 "அப்பாக்கு தெரியாது டாக்டர்.. தாத்தா சொல்லவேண்டாம்னு சொல்லி இருந்தார்... நீங்க ப்ரொசீட் பண்ணுங்க " என்ற அரவிந்த் என்னிடம் திரும்பி "அப்பா.. தாத்தா அவரோட உடல் உறுப்புகள் எல்லாத்தையும் தானம் பண்ணி இருக்கார் ... அதுக்கு எழுதி கொடுத்த அப்பறம் தான் அவர் அவரோட ஹெல்த கவனமா பாத்துக்கிட்டார்... நாம தானம் பண்றது முக்கியம் இல்லடா நாம நல்லத தான் தானம் பண்ணணும் அரவிந்த்  அப்டின்னு சொல்லிட்டே இருப்பார் ... என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீங்க ரொம்ப கோபமா பேசினதுல அவர் முகமே வாடி போச்சு .. ஏதோ யோசிச்சிட்டே படுத்து இருந்தவர் அப்புறம் எழுந்துக்கவே இல்ல. நான் தான் டாக்டர் கிட்ட இன்பார்ம் பண்ணேன் " என்றான்....
"அப்ப்ப்ப்ப்பா..." என்ற என் கதறல் அதற்கு மேல் அவனை பேசவிடவில்லை...

Friday, July 1, 2016

பேசி சிரித்து தயங்கி தவித்து
உரைத்து ஏற்று மயங்கி களித்து
நின்று மணந்து அணைத்து கலந்து
வாதம் செய்து ஊடல் மறந்து
பகிர்ந்து நடந்து வலிகள் மறைத்து
உடையும் நேரம் தாயாய் தழுவி
எல்லாம் மறந்து உள்ளதை ஏற்று
கடவுள் போல அன்பை மட்டும்
பொழியும் கணமே காதல் மலரும் !!