கடந்த சில வருஷங்கள்ல இந்த டிவி நியூஸில் தான் எத்தனை வகையான டெவலப்மென்ட்ஸ் (??).. ஆரம்பத்தில் கையில் கத்தையாக பேப்பர்களை வைத்து கொண்டு அதை பார்த்தும் பார்க்காததை போல் அழகாக அபிநயம் பிடித்து கொண்டே வாசிப்பார்கள்.... ரொம்ப தெளிவாக நியூஸ் நமக்கு புரிஞ்சிடும் ... சில வருடங்களில் அதை கவனிப்பதை விட அவர்கள் அணிந்து இருக்கும் ட்ரெஸ் மற்றும் அஸெஸரீஸை பார்க்கவென்றே நியூஸை ஆன் செய்ய வைத்த சில ட்ரெண்ட் செட்டர்ஸ் வந்தார்கள்.. ஆனால் அவர்கள் பார்க்க மட்டும் அழகாய் இல்லை நியூஸையும் ரொம்ப அழகாக வாசித்தார்கள்... அப்புறம் இந்த தனியார் டிவி வந்த புதிதில் இந்த நியூஸ்க்கு நடுவில் திடீரென ஒருவர் கையில் மைக் வைத்து கொண்டு ஸ்பாட்டில் நின்று பேச தொடங்கினார் (அதான் சாட்டிலைட் வந்துடுச்சே எங்க இருந்து வேணா பேசலாம்).... நிறைய தனியார் சேனல்கள் வந்த உடன் நடந்த ஒரு புதுமை தமிழ் சேனல்களில் இங்கிலிஷ் நியூஸ் (!) .... அதில் பார்த்தால் இந்த பிரபலமான நியூஸ் ரீடெர்ஸின் வாரிசுகள் வாசிப்பார்கள் ... இதுவும் பழசாகி விட்டதால் அரை மணி நேர நியூஸில் பதினைந்து நிமிடம் விளம்பரத்தை நுழைத்தனர் .... அப்றம் தனியாகவே விளம்பர இல்லையில்லை நியூஸ் சேனல்கள் ஆரம்பித்தார்கள் ... இது எல்லாமே பத்தாது என்று நினைத்தார்களோ என்னவோ அடுத்து நியூஸ்க்கு நடுவில் பொது அறிவு (???) சிறப்பு பார்வை என்ற பெயரில் முக்கியமான சில தகவல்களை தர ஆரம்பித்தனர் (ஆவிகள் பழிவாங்கும் ஊர் .... தெய்வங்களை வாழ வைத்த சாமியார்கள் .. இப்படி ... ).... பட் இதை எல்லாம் விட இப்போ சில வருஷங்களா எல்லா சேனல்களிலும் தவறாம வர்ற ஒரு டைப் நியூஸ் தான் டிபேட் என்னும் விவாதம்... இதில் பார்த்தால் ஓரே ஸ்க்ரீனில் 5 அல்லது 6 ஸ்க்ரீன் ஓடுகிறது.... நடுவே விவாதத்தை நடத்தி செல்பவர்.. அவரை சுற்றி உள்ள மற்ற ஸ்க்ரீனில் விதவிதமான முகபாவங்கள் (நிறைய அழகு காட்டும் பாவங்களும் , நிறைய வகையான தூங்கும் பாவனைகளும் இதில அடங்கும்) .... இதில் நடுவில் உள்ளவர் பஞ்சாயத் தலைவர் போல் சில நேரமும், கோர்ட் டவாலி போல் சில நேரமும், ஜட்ஜ் போல் மேஜையை தட்டி சில நேரமும், மைக்கை முழுங்கியவர் போல கத்தி பல நேரமும், தூங்குபவர்களை எழுப்பியும், குழாயடி சண்டை போடுபவர்களை பிரித்தும் விவாதத்தை நடத்த வேண்டும் ... இதில் சின்ன மானிட்டர் டிவி வைத்து இருப்பவர்கள் ரொம்ப பாவம் ... உத்து உத்து பார்த்து தான் யார் கத்துகிறார்கள் என்று கவனிக்க வேண்டும் ...இதை எல்லாம் கூட தாங்கிக்கலாம் ஆனா எல்லாஆஆஆ சேனல்லையும் எல்லா விவாதத்தை நடத்துறவங்களும் ஒரேரரர மாறி போட்டுட்டு வராங்களே ஒரு கோட் இல்லைன்னா ஒரு ஷெர்வானி அதை மட்டுமாவது மாத்த சொல்லி பெட்டிஷன் போட ஏதாவது ஸ்பெஷல் செல் இருக்கா ...
இனி என்ன எல்லாம் புதுமை பண்ண போறாங்களோ இந்த நியூஸ் சொல்றதுல ...ப்ளீஸ் அதுக்குள்ள யாராவது ஷோபனா ரவியையோ இல்லை சந்தியா ராஜகோபாலயோ நியூஸ் படிக்க கூப்பிடுங்கப்பா (பாத்திமா பாபு ஆக்ட்டிங்ல பிசீ இல்லேன்னா அவங்களையும் தான் ) !!!!
No comments:
Post a Comment