Thursday, March 23, 2017

எனக்கு இதே வேலை..... என்ன வேலை?????

எனக்கு இதே வேலை..... என்ன வேலை????? ..... எங்கயாவது ஏதாவது வம்பு வளர்த்துட்டு அப்பறம் பின் விளைவுகளை பத்தி யோசிக்கறது.... வம்புன்னா ரொம்ம்ம்ப பெரிய லெவல்லாம் இல்ல..... இந்த கடைக்காரர் ஆட்டோக்காரர் அந்த மாதிரி ..... பின்ன என்னங்க பஸ் கண்டக்டர்ல இருந்து ரெஸ்டாரண்ட் வெய்ட்டர் வரைக்கும் எல்லாரையும் "சார்" "அண்ணா" "ஏம்ப்பா தம்பி" ன்னு க்ரோனலாஜிக்கல் ஆர்டர்ல மரியாதையா "தேங்க் யூ""எக்ஸ்க்யூஸ் மீ" ன்னு கர்டெசியோட பேசற என்னை ஏமாத்தற மாதிரி மட்டும் தெரிஞ்சுது அவ்ளோதான் பொங்கி எழுந்து சண்டை போட்டு வந்துருவேன்.... அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணா பரவால்ல ..... ஆனா கொஞ்ச நேரத்துல "இது தேவையா .... அவங்களுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்னு பேசாம பொறுமையா இருந்து இருக்கலாம்.... இப்ப எந்த ஏழரைய இழுத்து விட்டுருக்கோமோ" ன்னு விட்டத்தை பார்த்து யோசிப்பேன்.... என்னோட ஹஸ்பண்ட்க்கு வேற இந்த மாதிரி நான் பண்ணறதெல்லாம் சுத்தமா பிடிக்காது....  இப்படி ஏதாவது பண்ணிட்டு அதை பத்தி அவர்கிட்ட சொன்னா (அவர்கூட போகும்போது வாய திறப்பேன்??.... பரம சாது நான் ) அவ்ளோதான் ..... "நாம படிச்சவங்க தான .... இக்னோர் பண்ணிட்டு பேசாம வரலாம்ல.... ரோட்ல கடைலன்னு ஏன் ஸீன் கிரியேட் பண்ணனும்" ன்னு இங்கயும் திட்டு விழும் .... அவர்கிட்ட சொல்லாமலாவது இருக்கலாம்ல ... சின்சியரா சொல்லி வாங்கி கட்டிப்பேன்.... சரி சரி ஓகே ஓகே புரியுது …. முன்குறிப்பு தற்பெருமை எல்லாம் நிறுத்திக்கறேன் … விஷயத்துக்கு வரேன்.... இந்த மாதிரி ஸ்டண்ட் வேலை ஒன்னு பண்ணிட்டு அதனால வசமா மாட்டிகிட்டேன் ...  

ஒரு பன்னெண்டு பதிமூணு வருஷம் முன்னாடி இருக்கும்..... வீட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல என்னை பாத்தாலே ஒரே தி மரியாதை... எல்லாரும் உடனே மீட்டிங்க போட்டு "ஹே நேத்து நீதான்பா போன.... இன்னைக்கு என் டர்ன்னு " அப்படின்னு பஞ்சாயத் பண்ணி "உக்காருங்க மேடம்.... " அப்படின்னு ஆட்டோ கதவை திறந்து விடுவாங்க .. ச்சை ஆட்டோல ஏது கதவு... வாய்ல அதுவா வருது .... பின்ன ரெகுலரா ஏழரை மணி ஆபீஸ் பஸ்ஸை கரெக்ட்டா ஏழு நாப்பதுக்கு பஸ் ஸ்டாப்க்கு போய் அதை மிஸ் பண்ணிட்டு அங்க இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கற ஆட்டோஸ்க்கு டெயிலி முதல் போணியே நாந்தான் பண்ணுவேன்.... நல்ல கை ராசின்னு பேசிக்குவாங்க ..... பின்ன காலைல நான் தர ஆட்டோ சார்ஜே அன்னைக்கு முழுசா போதுமே.... எல்லாம் ஒரு தர்மம் தான்..... அப்பறம் வீட்ல "பொறுப்பே இல்ல..... என்ன சொல்லி என்ன" ன்னு தர்ம திட்டு .... பட் அது ஒரு சோஷியல் சர்வீஸ் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்னு வெச்சுக்கோங்க ...

அன்னைக்கு அப்படிதான் எங்க வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி இருந்த சித்தப்பா வீட்ல இருந்து என்னோட பாட்டியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர போனேன்....  வயசானவங்கறதால போகும் போதே ஆட்டோல போயிட்டு அவங்கள அதே ஆட்டோல கூட்டிட்டு வர்றதா பிளான் .... ஆட்டோ ஸ்டாண்ட்ல அன்னைக்கு இருந்த ஆட்டோல பதினஞ்சு வயசு தான் இருக்கும் அந்த ஆட்டோ ட்ரைவர்க்கு.... "ஆபீஸ் தான மேடம் " னான்.... "இல்லப்பா .... --- ஸ்ட்ரீட்க்கு போய் அங்க இருந்து பாட்டியை கூட்டிட்டு இங்க திரும்ப வந்து டிராப் பண்ணனும்.... ஒரு அஞ்சு நிமிஷம் அங்க வெயிட் பண்ண வேண்டி இருக்கும்.... அதையும் இப்போவே சொல்லிர்றேன்" னேன்.... "சரிங்க" னான்.... "யூஷுவலா அந்த ஸ்ட்ரீட்க்கு போக இருபது ரூபாய் தான.... நான் நாப்பது தரேன்... அப்பறம் கூட கேக்க கூடாது " அப்படின்னு தெளிவா பேசிட்டு தான் ஆட்டோல ஏறினேன் ......

அங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட்டிங்க்ல இருந்துருப்பான் .... அதையும் தெளிவா சொல்லிருந்தேனே... முணுமுணுன்னு புலம்பிகிட்டே தான் ஆட்டோவை ஓட்டிட்டு வந்தான் ... திரும்ப எங்க வீட்டுக்கு வந்தப்போ தான் பிரச்சனை.... "என்ன நாப்பது ரூபா தரீங்க.... எவ்வளவு நேரம் அங்க வெயிட்டிங்க்ல இருக்க வெச்சீங்க.... வேற சவாரியாவது போயிருப்பேன்.... அம்பது தாங்க..." ன்னு ரைட் ராயலா கேட்டானே பாக்கணும்.... சுர்ர்ர்ன்னு ஏறிடுச்சு எனக்கு ...."ஏன்பா எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு தான ஏறினேன்..... இப்போ என்ன தகராறு பண்ற.... உங்க ஸ்டாண்ட்ல ரெகுலரா ஆட்டோல போறேன்..... நீ என்ன இந்த சின்ன வயசுலயே இப்படி இருக்க.... " ன்னு முதல்ல கொஞ்சம் பொறுமையாதான் பேச ஆரம்பிச்சேன்.... அவன் தேவை இல்லாம மரியாதை குறைவா பேசினவுடனே ரொம்ம்ம்ப கோபம் வந்துருச்சு.... கடுப்பாகி "வேணாம்டி எதுக்கு தகராறு.... அம்பது கொடுத்துரு ..." ன்னு சமாதானமா பேசின பாட்டியை வீட்ல விட்டுட்டு நேரா ஆட்டோ ஸ்டாண்ட்க்கே போய் "என்ன உங்க ஸ்டாண்ட் பையன் இப்படிலாம் பேசறான்.... நீங்கலாம் ஒன்னும் சொல்ல மாட்டிங்களா..." அப்படி இப்படின்னு சண்டை போட்டுட்டேன்.... அவங்க அப்போதைக்கு "சரி மேடம்.... நீங்க போங்க... நாங்க சொல்லி வெக்கறோம்..... டேய் அவங்க சொல்லிட்டு தான வண்டிய எடுத்தாங்க.... அப்பறம் என்ன தகராறு பண்ற..." அப்படின்னு அவன்கிட்ட பேசற மாதிரி என்னை அனுப்பிட்டாங்க.... அடுத்த ரெண்டு மூணு நாள் ஆட்டோலேயே போகல.... அதுக்கு அடுத்த வாரம் வேற வழி இல்லாம ஒரு நாள் அந்த ஸ்டாண்ட்ல வேற ஒரு ஆட்டோல ஆபீஸ் போனேன்...  ஆட்டோ சார்ஜ்க்கு கரெக்ட்டா சேஞ்சு இல்ல.. அந்த ட்ரைவர் மீதி சிக்ஸ்டி ரூபீஸ் தரணும் .... சரி மீதியை சாயங்காலம் ஸ்டாண்ட்ல கொடுத்துர்றேன் மேடம் ன்னு சொன்னவனை நம்பி விட்டுட்டேன்.... அன்னைக்கு நான் வீட்டுக்கு போக லேட் ஆயிடுச்சு.... அடுத்த நாள் பஸ் வர்ற டைம்க்கே போய்ட்டேன்.... அந்த ட்ரைவர் ரோட்ல அப்போசிட் சைட்ல நின்னுட்டு தான் பேசிட்டு இருந்தான்.... என்னை பாத்தும் பாக்காத மாதிரி திரும்பிகிட்டான்.... பஸ் வந்துட்டதுனால நானும் சரி ஈவினிங் பாத்துக்கலாம்னு போய்ட்டேன்.... அன்னைக்கும் லேட் ஆயிடுச்சு... அதுக்கு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பினேன்.... அவன் என்னை பாக்காத மாதிரி இருந்தான்.... நான் ரோடை க்ராஸ் பண்ணி "நீங்க எனக்கு சிக்ஸ்டி தரணும்.... ரெண்டு நாளா பாத்தும் பாக்காத மாதிரி இருக்கீங்க...." அப்படினேன்.... "ஆமா சிக்ஸ்டி தான தரணும்..... மறந்துட்டேன்.... உனக்கு உன் காசு வேணும்னா நீ (கவனிக்கவும் மரியாதை இல்லாம) வந்து கேக்க வேண்டியது தான " ன்னு திமிரா பேசினான்.... அவன் ஆட்டோக்குள்ள ஏற்கனவே என் கூட தகராறு பண்ண அந்த பையன் உக்காந்து இருந்தான்.... சரிதான் இது பிளான் பண்ணி செய்யறதுன்னு புரிஞ்சு திரும்பவும் செம்மா கடுப்பு.... நேரா அந்த ஸ்டாண்ட்ல கொஞ்சம் சீனியர் கிட்ட போய் "எனக்கு அறுபது ரூபா பெரிய விஷயம் இல்ல (ஆமா கர்ணனுக்கு தங்கச்சி நான்னு நெனப்பு ) ஆனா ஏமாத்தணும்னு நினைச்சது தான் என்னால பொறுத்துக்க முடியலை …..இந்த மாதிரி ஒரு ரோக் கூட்டம் இந்த ஸ்டாண்ட்ல இருக்குன்னு இத்தனை நாள் நான் தெரிஞ்சுக்கலை பாருங்க ...இனிமேல் உங்க ஸ்டாண்ட் வண்டில ஏறுவேன் ...." அப்படின்னு கத்திட்டு போய்ட்டேன்....

அதுக்கு அப்பறம் அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோவே ஏறலை.... ஆனா அங்க இருந்த கொஞ்ச மாசம் அந்த ட்ரைவர்ஸ் எப்ப நான் அந்த பக்கம் போனாலும் முறைச்சுகிட்டே இருப்பாங்க… நானும் கண்ணாலேயே எரிச்சிட்டு போய்டுவேன்…. இருந்தாலும் சம்டைம்ஸ் ஆபீஸ்ல இருந்து லேட் நைட்லாம் கேப்ல வரும்போது கொஞ்சம் பயமாதான் இருக்கும்.... பெரிய இவளாட்டம் ஆட்டோ ட்ரைவர்ஸ் கிட்டலாம் தகராறு பண்ணிட்டோம்... கராத்தே கூட கத்துக்கல.... இதெல்லாம் எனக்கு தேவையான்னு தோணும்...  அப்பறம் கொஞ்ச மாசத்துலயே வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம்.... கல்யாணம் ஆகி நானும் வேற ஏரியாக்கே வந்துட்டேன்.... ஸ்டில் என்னோட பேரன்ட்ஸ் அங்க இருக்கறதால அந்த ஏரியாக்கு போவேன் .... அந்த மார்க்கெட்க்கு போவேன் ஆனா ஒரு தடவை கூட ஆட்டோ ஏறலை.....

இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அந்த ரோட்ல ஏதோ வேலையா போயிட்டு வீட்டுக்கு திரும்ப ஆட்டோ தேடினேன்.... தெளிவா அந்த ஸ்டாண்ட்ல இருந்து ரொம்ம்ம்ப தள்ளி ஒரு போக்கு ஆட்டோவை  நிறுத்தி கேட்டேன் ... ஆனா அவனை எங்கயோ பாத்த மாதிரியே இருந்தது ... அவனும் ஒரு மாதிரி என்னை பார்த்துட்டே யோசிச்சிகிட்டே சரி ஏறுங்கனான்.... ஏறி உக்காந்து மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சப்ப தான் தெரிஞ்சுது அது அப்போ நான் சண்டை போட்ட பதினஞ்சு வயசு ட்ரைவர்ன்னு.... இத்தனை வருஷத்துல வளர்ந்துருந்தான்.... அதான் ச்சட்ன்னு ஸ்ட்ரைக் ஆகல..... அய்யோஓஒ ன்னு நினைச்சுகிட்டே நிமிர்ந்து  பாக்கறேன் அவனும் ரியர் வ்யூ மிரர்ல ரொம்ம்ம்ம்ப தீவிரமா யோசிச்சிகிட்டே என்னை பாத்துட்டு இருந்தான்....  "அட ராமா... கடைசில இவன் ஆட்டோலயா ஏறிருக்கோம்.... அய்யோஓஒ இவன் ஸ்டாண்ட் ஆட்டோல கூட ஏற மாட்டோம்னு  நாம போட்ட சபதம் என்ன ஆறது (ம்ம்ம்கும்ம் இந்த அலப்பறைக்கு ஒண்ணுதான் குறைச்சல் ன்னு என் மைண்ட் வாய்ஸ் வேற இம்சை)....   இவனுக்கு நாம யாருன்னு தெரிஞ்சுட்டா அவ்ளோதான்....ஏதாவது வேணும்னே தகராறு பண்ணுவானே.... இவ்ளோ லேட்டா வேற போறோம்...  இது என்ன சோதனை.... " ன்னு வேகமா யோசிச்சிகிட்டே என்னோட ஹேண்ட்பேகை துழாவினேன்.... "ஆஹாஆஆ.... கிடைச்சுடுச்சு..... இதை வெச்சு தப்பிச்சுக்கலாம்" ன்னு உடனே அதை எடுத்து வெச்சிகிட்டேன் .... அப்பறம் கொஞ்ச நேரத்துல மெதுவா ரியர் வ்யூ மிர்ரரை பாத்தேனா.... அவன் ரோடை பாத்து ஓட்டிட்டு இருந்தான்.....

அது சரி அப்படி என்ன வெச்சுக்கிட்டேன்னு கேக்கறீங்களா.... ஒன்னும் இல்ல எப்பவோ அவசரத்துக்கு வாங்கின "ஷில்பா பொட்டு சைஸ் 1 " (இருக்கறதுலயே நெத்தி புல்லா அடைக்கற மாதிரி பெரிய சைஸ் பொட்டு) ஹாண்ட் பேக்ல இருந்ததா.... அதை எடுத்து கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் .... இப்போ என்னை அடையாளம் தெரியாதில்ல.... எப்புடிஇஇஇ ...

ஹிஹி.... ஏதோ சீரியஸா சொல்ல வந்தேன்னு நீங்க நினைச்சுருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது  !!!!

Saturday, March 11, 2017

பாட்டு பாடவா !!!

பாட்டு பாடறதுனா சும்மாவா .... அதுவும் பாட்டு பாடி ரெக்கார்டிங் பண்றதுன்னா ச்சும்மாவா ..... எட்டு வயசுல பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சது ... ஆரம்பிச்சது மட்டும் தான்...  ஒரு மூணு மாசத்துலயே  ஏன்டா போனோம்னு எப்படியோ சாக்கு போக்கு சொல்லி நிறுத்திட்டேன்.. ஏன்னா அது என் ப்ராப்ளம் இல்ல... பாம்பேல நாங்க இருந்த அபார்ட்மெண்ட்ல இருந்த கொஞ்சமே கொஞ்சம் மாமீஸ் ல பாட்டு தெரிஞ்ச ஒரு மாமிதான் சொல்லித் தந்தாங்க.... ஆனா பாருங்க "ஸா பா ஸா பா ஸா " ன்னு ஆரம்பிச்சவுடனேயே "பாரு மேல இருக்கற நவநீதா என்னமா பாடறா... க்ளாஸ்லயும் பர்ஸ்ட் ... பாட்டுலயும் கெட்டி படிப்புலயும் கெட்டி.. நீயும் இருக்கியே .... நல்லா இன்டரெஸ்ட் ஒட கத்துக்கணும்.... ஏனோ தானோன்னு கத்துக்க வந்தா இப்படிதான்" அப்படின்னு அவங்களுக்கு மேல் பிளாட்ல இருந்த என் க்ளாஸ்மேட்டை பத்தி சொல்லி சம்மந்தமே இல்லாம திட்டிட்டு இருப்பாங்க .... "மேம் நீங்க சொல்லிக் கொடுக்கவே ஆரம்பிக்கலையே... " அப்படின்னு சொல்லவா முடியும் (நவநீதா வேற எங்கயோ கத்துக்கிட்டா ).... கம்பேரிசனோட முழுழு பலனையும் அனுபவிச்சேன்... பாட்டு பாடணும்ன்னு ஆசை இருந்தாலும் அவங்க வீட்டுக்குள்ள நுழையவே பயம்... சோ அப்படியே நின்னு போச்சு ....

அதுக்கு அப்பறம் கேசட்டை போட்டு கேட்டு ஏதோ நானே கத்துகிட்டு பாடி அதை ரெக்கார்டு பண்ணி கேக்கறதுல ஒரு சந்தோஷம் .... அப்போ ஆரம்பிச்சது என்னோட ரெக்கார்டிங் பயணம்..... அதுவும் நடுவுல ஒரு வருஷம் வீட்ல பப்பின்னு ஒரு பொமரேனியனை வளர்த்தோம்.... நான் ரெக்கார்டு பண்ண வாயை திறந்தாலே கத்தும்.... நான் பாடகியா ஆகறதுல இப்படி பல பல தடைகள்.....

அப்பறம் பிளஸ் 1 படிக்கும்போது தான் வீட்டுக்கு ஒரு மாமி வந்து சொல்லித் தந்தாங்க .... ரெண்டு வருஷம் நல்லா கத்துக்கிட்டேன் .... ஆனா இப்போ வரைக்கும் கொலு, பண்டிகை , கல்யாணம், காதுகுத்து, பூணூல் , கோவில் ன்னு எந்த அகேஷனா இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை " இல்லனா "ஸ்ரீ சக்ரராஜ " ன்னு இந்த ரெண்டு பாட்டு தான் பாடறது... அதுதானே யுனிவர்சல் சாங்ஸ் .... பாட்டு மாமிக்கு தெரிஞ்சா இதற்கு தானா நடையா நடந்து சொல்லித் தந்தேன்னு ரத்த கண்ணீர் வடிப்பாங்க ....

அப்பறம் பாட்டு கிளாஸ் போனேனோ இல்லயோ ரெக்கார்டிங் மட்டும் அந்த அந்த பீரியட்ல இருந்த டெக்னாலஜி,  ஐ மீன் டேப் ரெக்கார்டார்ல, லேப்டாப்ல, மொபைல்லன்னு பண்றதுல ஒரு குறைச்சலும் இல்ல...

சரி சினிமா பாட்டெல்லாம் முக்கியமா ராஜா சார் பாட்டெல்லாம் பாடி பாடி தரோ ஆய்டுச்சுன்னு எம்.எஸ் அம்மாவோட பாட்டெல்லாம் ஆன்லைன்ல கேட்டு கேட்டு கத்தி கிட்டு ஐ மீன் கத்துகிட்டு மொபைல்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன் ... அப்போ தான் இந்த soundcloud ன்னு ஒண்ணு இருக்கறது தெரிய வந்தது .... அவ்ளோதான் குஷி பிச்சிகிச்சு... ஒரே இயர் போனை மாட்டிகிட்டு அதுல ரெக்கார்டிங்  ஆரம்பிச்சேன் ... இதுக்கு நடுவில கரோக்கே ன்னு ஒண்ணு இருக்கறது தெரிஞ்சவுடனே ஜானகி அம்மா மாதிரி இருக்கற என்னோட குரலோட இனிமைக்கு இனிமை சேர்க்கற மாதிரி கரோக்கே போட்டுக்கிட்டு இயர் போன்ல ஒரு சைட் மட்டும் இயர்ல போட்டுக்கிட்டு இன்னொரு சைடை மைக் கிட்ட வச்சிகிட்டு (என்கிட்ட இருக்கற லிமிடேட் ரெக்கார்டிங் facility யை கூட எவ்வளவு மூளையை கசக்கி எபக்டிவா யூஸ் பண்ணிருக்கேன் பாருங்க...) பாடி அப்லோடிங் தான் ..... ஆனா ஒண்ணு எல்லா ரெக்கார்டிங்கையும் நான் தனியா இருக்கும் போது தான் பண்ணுவேன் ...

அன்னைக்கு மட்டும் பாருங்க காதில் இயர் போனை மாட்டிக்கிட்டே கீரையை கிளீன் பண்ணி நறுக்கிட்டு இருந்தேன் .... ராஜா சாரோட "மௌனமான நேரம் ...." ஒட ஆரம்பிச்சவுடனே அஸ் யூஷுவல் ரிக்கார்டிங் ஆசை தலை தூக்கி, அதை அடக்க முடியாம அந்த பாட்டோட கரோக்கேவை  தேடி புடிச்சு அதோட சேர்ந்து பாடிட்டு (அப்படிதான் நினைச்சேன்) இருந்தேன்....

என் பொண்ணு எங்கிட்ட இருந்து கொஞ்ச தூரத்தில சோபாலயே தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தா..... நான் பாடினதை  பார்த்திட்டு என் அருமை கணவரும் ஏதோ பாடறதா நினைச்சு ட்ரை பண்ணிருக்கார்.... அவர் பாட ஆரம்பிச்ச உடனே "அப்ப்பாஆ ப்ளீஸ்... எனக்கு தூக்கம் வருது..... பாடாதீங்க ...." அப்படின்னு கத்தினா.... அப்பவும் நான் டீசெண்டா  சிரிப்பை அடக்கிட்டு அமைதியா தான் வேலைய பண்ணிட்டு இருந்தேன் .....

உடனே அவர் "அப்போ நான் இயர் போனை மாட்டிட்டு பாடுவேன் " ....

அதுக்கு அவ "அய்யோஓஓஓ வேணாம் வேணாம் ..... அப்படியே வேணாலும் பாடிக்கோங்க "

ஹம்ம்ம்.... ஜானகி மாதிரி பீல் பண்ணி ஒரு பாட்டு ரெக்கார்ட் பண்ண முடியுதா ... எனக்கு எதிரிங்க வேற எங்கயும் இல்ல 😛 !!!

Note :
இதுல பாத்தீங்கனா ஒண்ணு கூட நம்ம ஊர் பேரு இல்ல ... நான் பாடின ஒண்ணு ரெண்டு டமில் பாடல்கள்ல என்ன புரிஞ்சு லைக் பண்றாங்கனே தெரில ... என்னே soundcloudடோட ரீச் ன்னு சொன்னா "இது ஒரு வேளை soundcloud ஆப் டெவலப்பர்ஸா இருக்கும் .... இப்படியாவது  நம்ம ஆப் யூஸ் ஆகுதேன்னு லைக் பண்ணிருப்பாங்க ..." அப்படிங்கறார் என் ஹஸ்பண்ட் 😛 !!!

Tuesday, March 7, 2017

நான் ஒரு பெண் !!!

கொஞ்சம் மாசங்களுக்கு முன்ன டெல்லி போய் இருந்தப்போ ....
நாங்கள் ஸ்டே பண்ணி இருந்த இடத்தில் இருந்து சாயங்காலம் "அக்ஷர்தாம்" போகறதுக்காக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தோம்.... போகும் போது அவ்வளவு கூட்டமா இல்லை.... அக்ஷர்தாமில் இருந்து நைட் ஒரு எட்டரை மணிக்கு மேல் கிளம்பியபோது என்னவோ கொஞ்சம் துருக்க்ன்னு தான் இருந்தது.... இதுக்கும் கொஞ்சம் காலம் முன்னாடி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருந்து எந்த கவலையும் இல்லாம சென்னைல எலெக்ட்ரிக் ட்ரெயின்ல வீட்டுக்கு வருவேன்... ஆனால் அன்னைக்கு டெல்லில கூடவே கணவர் மாமனார் மாமியார் ன்னு எல்லாரும் இருந்தும் என்னவோ ஒரு டிஸ்கம்பர்ட்... என் பொண்ணை இறுக்கி கைய பிடிச்சிகிட்டே நடந்தேன்....

மெட்ரோ ஏறும் போது ஓரளவு தான் கூட்டமா இருந்தது.... டோர் கிட்ட இருக்கற சீட்ல (வயதானவர்கள் , நோயாளிகள் க்கு முன்னுரிமைன்னு நினைக்கறேன்....) நானும் என் பொண்ணும் உட்காந்துகிட்டோம்.... என் ஹஸ்பண்ட் எங்களுக்கு முன்னாடியே பாதுகாப்பா நின்னிட்டு இருந்தார்....  எங்க ரெண்டு பேராலயும் அந்த சின்ன கேப்ல ரொம்ப நேரம் உக்கார முடில... சோ அவ நல்ல உக்காந்துக்கட்டும்னு நான் எழுந்து  என் பொண்ணு பக்கத்துலயே நின்னுக்கிட்டேன்.... சில ஸ்டேஷன்ஸ் போனப்பறம் ஒரு வயசானவர் ட்ரெயின்ல ஏறினார்.... கொஞ்சம் மூச்சு திணறல் மாதிரி தெரிஞ்சார்..... அது வயதானவர்கள் சீட் னால என் பொண்ணை எழுப்பி அவளை என் பக்கத்துலயே கையை பிடிச்சிகிட்டே நின்னுட்டு இருந்தேன்.... கொஞ்ச நேரம் ஆனதும் என் பின்னாடி இருந்து யாரோ எங்களையே முக்கியமா என் பொண்ணையே கவனிக்கற மாதிரியே தோணிச்சு.... எதேச்சையா திரும்பற மாதிரி பின்னாடி பார்த்தேன்..... முகம் எல்லாம் ஏதோ தழும்போட தலையில துப்பட்டாவை போட்டு பாதி மறைச்சிகிட்ட முகத்தோட ஒரு பொண்ணு எங்களையே பார்த்துட்டு இருந்தா.... பகீர்ன்னு இருந்தது.... ஒரு நிமிஷத்துல பல விதமான எண்ணங்கள்.... என்னோட ஹேண்ட்பேகை பாக்கறாளா இல்லை என் பொண்ணை கவனிக்கறாளான்னு செக் பண்ண என் பேகை ஷோல்டர் மாத்தி மாட்டிகிட்டேன்…. அப்பொவும் அவ என் பொண்ணை தான் பாத்துட்டு இருந்தா.... அதுக்குள்ள வேற ஒருத்தர் எங்களுக்கும் அந்த லேடிக்கும் நடுவுல வந்தார்.... அவ அவரையும் மீறி என் பொண்ணு நின்னுட்டு இருந்த டைரக்ஷன்லயே பாத்துட்டு இருந்ததை பார்த்து அடி வயிறே கலங்கிடுச்சு.... மெதுவா பக்கத்துல இருந்த என் கணவர் கிட்ட சொன்னேன்.... அவரும் கொஞ்ச நேரம் அப்சர்வ் பண்ணிட்டு "ஆமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.... அவ நம்மளை தான் பார்த்துட்டு இருக்கா.... பட் கவலைப்படாத..... பாத்துக்கலாம்...." அப்படினார்..... அதுக்கு அப்பறம் ஒரு பதினைந்து நிமிஷம் என்னோட ஹார்ட் பீட் எனக்கே கேக்கற அளவு ஒரு பதட்டம்.... அவ நோக்கம் என்ன.... டெல்லி மெட்ரோ பத்தி நியூஸ்ல வந்த அத்தனையும் அப்போதான் ஞாபகம் வருது.... என் பொண்ணை அந்த லேடி பாக்க முடியாத மாதிரி எனக்கு முன்னாடி இழுத்து இறுக்க அணைச்சிகிட்டே "சாய் ராம் சாய் ராம் " ன்னு  சொல்ல ஆரம்பிச்சேன்…. I was super alert  when the train stopped at every station…. Was constantly scanning if there was someone else somewhere with whom that lady might communicate…. திடீர்ன்னு வந்த அடுத்த ஸ்டேஷன்ல அந்த லேடி எங்களுக்கு முன்னாடி வந்து உக்காந்து இருந்த அந்த வயசானவரை கூட்டிட்டு ட்ரெயின்ல இருந்து இறங்கறா.... அவ அவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்த எங்க கேப்ல அந்த பெரியவரை தான் பார்த்துட்டு இருந்தான்னு அப்போதான் புரிஞ்சது.... may be she was his care taker or helper….

ஒரு நிமிஷம் அவளை என்னன்னவோ நினைச்சிட்டோமேன்னு கொஞ்சம் வெட்கமா இருந்தாலும்..... அது தான் இன்றைக்கு வெளில பெண்களுக்கு நடக்கற நிதர்சனங்கள்..... எதையுமே லைட்டா எடுத்துக்க முடியறது இல்லை பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு....

என்றைக்கு நம் வீட்டு குட்டி பெண் குழந்தைகள் எந்த வித கவலையும் பயமும் இல்லாமல் வீட்டு முற்றத்தில் விளையாட விடப்படுகிறார்களோ, ரோடில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க படுகிறார்களோ….

என்றைக்கு ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போகும் பெண்களின் பாதுகாப்பை  பற்றி எந்த கவலையும் இல்லாமல் பெற்றவர்களால் இருக்க முடிகிறதோ....

என்றைக்கு பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளை தீர்க்க மறைவிடம் தேடி அலைவது நின்று ஒரு பேசிக் நீடாக வீட்டில் ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கோ....

என்றைக்கு பெண்களுக்கு அடிப்படை கல்வியாவது கட்டாயமாக கிடைக்குதோ  (I agree today women are in every possible field and doing wonders…. But I am talking about the women who do not get even basic education)....

என்றைக்கு morphing மண்ணாங்கட்டி என்று என்ன செய்து மிரட்ட பட்டாலும் "அது எதுவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.... நீ செய்வதை செய்" என்று துணிச்சலாக சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு determination வருகிறதோ....

பெண்கள் தினம் அன்று மட்டும் திரும்ப திரும்ப "பெண் ஒரு மகள், தாய், சகோதரி, மனைவி etc etc " என்று ஒரே மெசேஜை சொல்லாமல்,…

When a woman, a girl child is seen, treated, felt and protected as a fellow HUMAN BEING, deserving all the rights to live SAFELY in this world,  Only then Women’s Day becomes meaningful because it should not be just the celebration of social, economic and cultural achievements of women but it should be a celebration of

The proud emotion ...

“I am a WOMAN” !!!