Saturday, July 9, 2016

Men are from Mars, Women are from Venus..
இப்படி இருந்தா அப்புறம் பூமி எப்படி தாங்கும்.... இந்த  இரண்டு கேடகரி யும் சேர்ந்து பண்ற அமர்க்களம் இருக்கே...

படிக்கும் போது எந்த நாள் எந்த பரிட்சை என்பது கூட தெரியாமல் பத்து மணி எக்ஸாம் க்கு 10.10 க்கு கூலாக போய் பாக்கெட்டில் பதினாறாய் மடித்து பஸ் டிக்கெட் சைஸ் க்கு இருக்கும் ஹால் டிக்கெட் ஐ கவனமாக மெதுவ்வா பிரித்து காட்டி விட்டு எக்ஸாம் ஹால் க்கு என்ட்ரி விடும் மார்ஸ்... 10 மணி எக்ஸாம் இற்கு 10 மணி வரை எக்ஸாம் ஹால் க்கு வெளியே புத்தகத்தை வைத்து கொண்டு விழுந்து விழுந்து மண் எல்லாம் அப்ப படிக்கும் ரகம் வீனஸ்... ஒரே மெயின் ஷீட்டில் ஒரு மணி நேரத்திலேயே எக்ஸாம் முடித்து விட்டு பேப்பர் பேப்பரய் வாங்கி எழுதி தள்ளும் வீனஸ் ஐ வேடிக்கை பார்த்து விட்டு சோம்பல் முறித்து விட்டு வெளியே செல்லும் மெஜெஸ்டிக் மார்ஸ், ரிசல்ட் வரும் போது அசால்ட் மார்ஸ் ...

காலையில் ஆபீஸ் போன உடன் வீனஸ் போவது ரெஸ்ட் ரூமிற்கு டச் அப் செய்ய என்றால் மார்ஸ் போவது டீ குடிக்க பில்ட் அப் செய்ய... ஆகா மொத்தம் நேரே சீட் க்கு போவது வெகுவே வெகு சில வியாழன்கள் ஐ மீன் ப்ரஹஸ்பதிகள் தான்..... நாற்பது பக்க டாகுமென்ட் என்றாலும் சளைக்காமல் டைப் அடிக்கும், நாற்பது பேர் மீட்டிங் என்றாலும் நிறுத்தாமல் நாலு பக்கத்திற்கு லெக்சர் தரும் வீனஸ், நாலு நிமிஷம் கூட அதை கேட்க முடியாமல் மொபைலை  நோண்டும் மார்ஸ் ...

வீட்டில் காலையில் எழுந்தவுடனேயே அந்த கோள்களின் கோளாறுகள் ஸாரி வித்யாசங்கள் தெரிய துவங்கும்... வீனஸ் நேரே பால் பக்கெட் ஐ தேடினால் மார்ஸ் ஒ நியூஸ் பேப்பர் ஐ அள்ளும்... வீனஸ் பேப்பர் படிக்காது என்று இல்லை ஆனால் மைண்டில் முதலில் வருவது காபி (அதனால் தான் இப்போதைய ட்ரெண்டில் கபே காபி டே க்கு அத்தனை மவுசு போல) ... கல்கத்தா காளி போல, இருக்கும் எல்லா கைகளை கொண்டும், எல்லா நாளும் செய்யும், அதே பழகிய வேலைகள் தான் என்றாலும், வாய்க்கு மட்டும் வேலை இல்லையே என்று எதாவது டென்ஷன் இல் புலம்பி கொண்டோ கத்தி கொண்டோ செய்யவில்லை என்றால் மனம் திருப்தி படாதது வீனஸ் என்றால்... லௌட் ஸ்பீக்கரையே முழுங்கி விட்டு கத்தினாலும் காதே வேலை செய்யாமல் இண்டர்நேஷனல் பொருளாதாரம், வீட்டை தவிர வேறு எங்கு நடந்தாலும் நடந்த அந்த கலவரம் இதில் மட்டுமே மூழ்கி இருக்கும் மார்ஸ்.... இந்தியா வாண்ட்ஸ் டு நோ அர்னாப் ஐ விட உச்சஸ்தாயில் ஐ வான்ட் டு நோ என்று கத்தினாலும் துச்சமாய் பார்த்து விட்டு மறுபடியும் பேப்பரிலோ லேப்டோப்பிலோ தலை கவிழ்ந்துரும் .....

குழந்தை தூங்கிட்டு இருக்கா .. நான் கடைக்கு போயிட்டு வந்துறேன்... அவ எழுந்தா கொஞ்சம் cerelac கரைச்சு கொடுங்க என்று சொல்லி கிளம்பும் வீனஸ் ... திரும்பி வந்து பார்த்தால் facial செய்தது போல் குழந்தையின்  முகம் எல்லாம் cerelac pack போட்டு வைத்து கண்ணில் வெள்ளரிக்காய்க்கு பதிலாய் வாயில் teether ஐ வைத்து இருக்கும் மார்ஸ் ...

கணவருக்கு பர்த்டே வந்தாலும் நடு ராத்திரி சர்ப்ரைஸ் என்ற பெயரில் "இது நானே பண்ண கேக் " என்று எழுப்பி அதை வெட்ட முடியாமல் வெட்ட வைத்து "டார்லிங் உங்க பர்த்டேக்கு எனக்கு(???) என்ன ஸ்பெஷலா தர போறீங்க " என்று கேக்கோட சேர்த்து பர்ஸுக்கும் வேட்டு  வைக்கும் வீனஸ் ....  அரை தூக்கத்தில் "ம்ம் நல்லா நாலு சாத்து தரேன் " என்று மைண்ட் வாய்ஸ் கொடுத்தாலும் "ஹௌ ஸ்வீட் உனக்கு என்ன வேணும்னு கேளுமா " என்று  சமாளிக்கும் மார்ஸ் (எப்படியும் வாக்குறுதியை amnesia வில் மறந்துற போற தைரியம் தான்)

ஒரு இடத்துக்கு கிளம்பனும்னா இதுகள் பண்ற அக்கிரமம் இருக்கே.... கண்ணாடி யை விட்டு ஒரு இன்ச் கூட மாறாமல் ஒரு மணி நேரமாக டிரஸ் பண்ணும் வீனஸ் பின்னால் பிரேக் டான்ஸ் ஆடி கொண்டே சைடு கேப்பிலோ இல்லை ஹை ஜம்ப் செய்தோ எப்படியோ தலையை மட்டும் விடாமல் வாரி கொண்டு ஒரு ஜீன்ஸ் ஐ அணிந்து கொண்டு ஊருக்கு முன்னால் போய் பைக்கையோ காரையோ ஸ்டார்ட் பண்ணிவிட்டு அதன் ஹார்ன் இல் இளையராஜா போல வித விதமா மியூசிக் போடும் மார்ஸ்... அப்படி கிளப்பறாங்களாம் .... வீட்டில் வேறு சில குட்டி வெள்ளியோ புதனோ இருந்தால் அதை வேறு கிளம்பணும் என்ற எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருக்க மார்ஸ் இடம் ட்ரைனிங் போலாம்... ஆனாலும் வீனஸ் அசருவதில்லை ....

வீனஸ் ஒரு நாலு நாள் எங்கயாவது  போய்விட்டு திரும்பினால் வீடு முழுவதும் டவல் , டீ ஷர்ட்ஸ் ஷார்ட்ஸ் , கம்ப்யூட்டர் டேபிள் டிவி டேபிள் டைனிங் டேபிள் எல்லாத்திலும் காபி கப்ஸ்,  பெட் மேலே சாக்ஸ் , தரை எல்லாம் நியூஸ் பேப்பர் என்று ஒரு வார் பீல்டு ஆக மாற்றி இருக்கும் மார்ஸ் ...

ஒரே நேரத்தில் பல மொழிகளை கலந்து கட்டி கேப் விடாமல் ரீல் ஓட்டும் வீனஸ் முன்னால் பயங்கர ஸ்லோ ஸ்பீட் ரிசீவராய் என்ன பேசுகிறாள் என்று புரிந்து கொள்ளவே முழி பிதுங்கி நிற்கும் போது "இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கேனே எதாவது பதில் சொல்றீங்களா.. என்ன அழுத்தம் பாருங்க உங்களுக்கு" என்று கிரெடிட் வாங்கி கொள்ளும் மார்ஸ்....

எவ்வள்ளவு தான் கூல் அண்ட் அசால்ட் ஆக இருந்தாலும் இந்த கன்வின்சிங் உரிமை அந்த  உரிமையை நிலைநாட்டும் திறமை எல்லாம் டிராமடிக் வீனஸ் க்கே சொந்தம்... அது ஒரு நடமாடும் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் ஸ்டேஷன்... அதும் எந்த வித தடங்கலும் இல்லாமல் கண்ணில் இருந்து கொட்டிகொண்டே இருக்கும் ஹைட்ரோ பவர் இல் ஹை வோல்டேஜ் ஷாக் வாங்கும் மார்ஸ் வாய் அடைத்து போய் விடும்..... நடுவே நம்ம பூமி (அதாங்க எர்த் ) சரியாய் இல்லேன்னா பாவம் short circuit தான்...

No comments:

Post a Comment