"அம்மா .... நாளைக்கு நாங்க பீல்ட் டிரிப் போறோம் .... அதனால நாளைக்கு எனக்கு வெஜிடபிள் சாண்ட்விச் தரியாமா ..."
(அவள் ஸ்கூலிலே இந்த பிரெட், பிஸ்கட் , ஜாம், சாஸ் etc etc எல்லாத்துக்குமே பிக் தடா ... அதனாலேயே நான் ஆச்சர்யமா )
"என்னடா சாண்ட்விச் எல்லாம் allowed ஆ ..."
"நாளைக்கு மட்டும் ஓகே மா .... ப்ளீஸ் வெஜிடபிள் சாண்ட்விச் பண்ணித்தாமா... அதுல மறக்காம சீஸ் வெக்கணும்.."
"ஓகே கண்டிப்பா தரேன்..." என்றேன்.
ராத்திரியே அதுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்தேன்... potato , carrot , peas, cheese.... காரணம் காலையில் சீக்கிரம் ஸ்கூலுக்கு ரெடி ஆகணும்..
அன்னைக்குன்னு பார்த்து காலையில் ஏனோ அலாரம் அடிக்கவில்லை ... திடீரென எழுந்து பார்த்தால் 6.45.... தொலைந்தேன்.. 7.15 மணிக்குள் குழந்தைக்கு லன்ச் பாக்ஸ் ரெடியாகணும் ... வாக்கு கொடுத்தாச்சு வேற ... இனி ஏமாற்ற மனம் இல்லை ... அலாரம அலற விடாம புடிச்சிட்டு கதவு கிட்டயே law புத்தகத்தோட காத்துட்டு இருந்த நம்ம பேமஸ் Mr Murphy ய நான் அப்போ கவனிக்கலை ...எப்படியாவது பண்ணிடணும்னு போய் கிச்சன் லைட்டை on செய்தால் டப் என்று கரண்ட் கட் ... உள்ள வந்து சோபால கால் மேல கால போட்டு உட்கார்ந்துட்டார் Mr Murphy ....
எப்படியோ அடிச்சு புடிச்சு வெயிட், கேஸ்கட் இப்படி எதுவுமே சரியில்லாத சின்ன cooker ஐ உபயோகித்து (அதான் கரண்ட் இல்லையே எலெக்ட்ரிக் cooker க்கு ) vegetable சாண்ட்விச் க்கு தேவையான filling ரெடி செய்தேன் ... இதில் அவசரத்தில் காபி கூட குடிக்காத மப்பில் ( coffee maker no current பகவானே ) இஞ்சி என்று நினைத்து பொங்கலுக்கு வாங்கிய மஞ்சளை துருவி பின்ன என்னடா ஏதோ வித்யாசமா இருக்கேன்னு பாத்து அப்பறம் அவசர அவசரமா இஞ்சியை என் விரலோடு சேர்த்து துருவி (ரத்தத்தை சிந்தி உழைச்சு) , அப்பறம் விரலை கவனிக்க வேற ஒரு 5 நிமிஷம் வேஸ்ட் பண்ணி என்று ஓரே அமர்க்களம்...
கடைசீயா பேக் பண்ணிட்டு பாக்கறேன் சீஸ் போடலை.... உடனே "கண்ணா சீஸ் தனியா slice ஆ வெக்கறேன் ...." அப்டின்னு பெர்மிஷன் வாங்கி அவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு உக்காந்து இருந்த Murphy ய தெனாவட்டா ஒரு லுக் விட்டேன் ... என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு எழுந்து போய்ட்டார் Mr . Murphy ....
3 மணிக்கு ஸ்கூலுக்கு அவளை கூட்டிட்டு வர போனா மேடம் முகமே சரியா இல்லை ... ஏண்டா டல்லா இருக்கன்னு கேட்டா "அம்மா நீ வாட்டர் பாட்டிலே வெக்கலை... எவ்வளவு தாகமா இருந்தது தெரியுமா.. ஸ்கூலா இருந்தாலாவது கேன் இருக்கும் ... பீல்ட் டிரிப் வேற ... ஸ்கூலுக்கு திரும்பி வந்த உடனே தான் தண்ணி குடிச்சேன் தெரியுமா " என்றாள் (யாரிடமும் கேக்க மாட்டாள் மானஸ்த்தி )... உடனே நான் "அய்யோ சாரிடா ... ஆனா நீ பொறுப்பா வீட்ல இருந்து கிளம்பும் போதே பார்த்து இருக்கலாம்ல " என்று நைசாக அவள் பக்கம் பாலை நவுத்தினேன் ... உடனே அவள் "சரி அதுகூட பரவால்ல ஆனா நீ வெஜிடபிள் சாண்ட்விச் ன்னு சொல்லிட்டு அதை ஏன் தரலை... நான் எப்படி ஏமாந்து போய்ட்டேன் தெரியுமா " என்று அழ ஆரம்பித்தாள்....
"ஹேய் அம்மா அதுதானடா தந்து இருந்தேன் ..." என்கிறேன்.... அதுக்கு அவள் "எங்க அப்படினா அதுல round ஆ slice slice ஆ கட் பண்ண cucumber , tomato , onion எல்லாம் இல்லயே... நீ ஏதோ மசால் எல்லாம் குக் பண்ணி இல்ல வெச்சுருந்த ...." என்றாளே பார்க்கணும்....
அட கடவுளே இது தெரிஞ்சிருந்தா 7 மணி வரைக்கும் தூங்கி இருந்தா கூட 10 நிமிஷத்துல ரெடி பண்ணி இருக்கலாமே என்று சீவின என் விரலை பார்த்து நிமிர்ந்தால் கதவுக்கு பின்னால் இருந்த Mr .Murphy விழுந்து விழுந்து சிரிக்கிறார்...
Requirements சரியாக புரியாமல் project பண்ணி முடிச்சு release க்கு பதிலா scrap பண்ண மாதிரி ஆயிடுச்சு !!!

No comments:
Post a Comment