Friday, July 22, 2016

பிள்ளை மனம் ....

நேற்று குழந்தை ஸ்கூலில் இருந்து வரும்போதே கொஞ்சம் டயர்டாக இருந்து இருக்கிறாள்.. so ஒரு உருப்படியான அம்மாவா நான் கொஞ்சம் cranky பிஹேவியரை எதிர்பார்த்து இருந்து இருக்கணும் ..... பேட் டயம் எனக்கும் என்னவோ தலைவலி மூட் சரியில்ல ( தலைவலி ஒரு சால்ஜாப்பு தான் .... குழந்தை விஷயத்துல வள் ன்னு விழுந்துட்டு அப்பறம் பீல் பண்ணலைனா நார்மல் அம்மா இல்லையே... கோபமே  படாமல்  பொறுமையே உருவாக இருக்க பண்டரிபாய் , கவியூர் பொன்னம்மா இவர்களால் மட்டுமே முடியும்.. அப்படி இருக்கும் மற்ற அம்மாக்கள் இப்படி சொன்ன என்னை மன்னிக்கவும்) .... லன்ச் பாக்ஸை திறந்தால் சாப்பிடாமல் அப்படியே இருக்கிறது (எனக்கும் லஞ்சுக்கும் தான் ராசி இல்லயே சாண்ட்விச் தந்த பாடம் ).... வந்ததே ஒரு கோபம் ...உங்க ஊர் கோபம் எங்க ஊர் கோபம் இல்லை ... மேல மேல அதுக்கும்  மேல... தூக்க கலக்கத்தில் அவளும் கொஞ்சம் கூடுதலா வெறுப்பேத்தினாள்.. இருந்தாலும்... ஆனாலும் ... கொஞ்சம் ஓவராக தான் கத்திட்டேன் ... அழுதுட்டே தூங்கிட்டாள்... as usual தூங்கற குழந்தைய பாத்து  மனசாட்சி "உனக்கு இதே வேலையா போச்சு .... உனக்கே  பொறுமை இல்லை... பாவம் அது குழந்தை.....  தூக்கத்துல தான் அப்படி இருந்து இருக்கா ... அதை புரிஞ்சுக்க முடில ... நீ எல்லாம் ஒரு அம்மா " என்று தலையை கடித்து துப்பியதில் தலைவலி போய் நெஞ்சு (அதான் மனது ) வலிக்க ஆரம்பித்தது.... சாயங்காலம் ஹிந்தி கிளாஸ்க்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால தான் அவளை  அவசர அவசரமா எழுப்பி ரெடி பண்ணி கொண்டு போய் விட்டு வந்ததில் சமாதானம் பேச இடைவேளை கிடைக்கலை .... அவளும் ஒண்ணும் பேசாமல் சைலண்டா ரெடி ஆனா ... கிளாஸ் முடிஞ்சு கூட்டிட்டு வரும்போது மெதுவா நான் பேச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவள் "அம்மா எங்க ஸ்கூல்ல சொல்லி கொடுக்கற மெத்தடும் நல்லா இருக்கு.. மறக்கவே மறக்காது மா... இந்தி டீச்சர் சொல்லி கொடுக்கறதும் எனக்கு நல்லா mindல பதியுது மா..." என்றாள் (அவள் ஸ்கூல் மாண்டிசோரி அதனால டீச்சிங் டிபரண்டா இருக்கும் ).... நான் உடனே இதுதான் சாக்கு லெக்சர் கொடுக்கலாம்ன்னு "ஆமாடா ... you should be really grateful to god for whatever you have got... you should not waste anything " அப்படீன்னு ஆரம்பிச்சேன்.... உடனே அவள் "அம்மா god எனக்கு முக்கியமா ரெண்டு ரொம்ம்ம்ம்ம்ப நல்லதா கொடுத்து இருக்கார் ... அதை சொல்லலியே நீ " என்றாள் .... என்னடா என்று நான் கேட்டதற்கு "ஒண்ணு நீ... இன்னொண்ணு  அப்பா " என்றாளே பார்க்கணும்... தெரிஞ்சு தான் சொல்லி இருக்காங்க குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு... நாம் செய்யும் எதையும் மன்னித்து மறப்பதில் !

2 comments:

  1. அற்புதம்
    நிகழ்வும்
    அதைச் சொல்லிச் சென்ற விதமும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete