Friday, January 27, 2017

எல்லா புகழும் இறைவனுக்கே !!

காலைல ஆறு மணிக்கு எழுந்து பக்கத்து வீட்டு ரூபா அதுக்கு முன்னாடியே எழுந்து அப்படி என்னதான் படிப்பான்னு யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, கஜானனம் சுலோகம் சொல்லி, நாலு சென்டிமீட்டரே இருந்த ஷாலினி கிராப்பை (உபயம் எங்கப்பா அண்ட் தெருமுனை சலூன்கார்ர்ர்) நூறு தடவை வாரி வாரி ஒரு ஸ்லைடை குத்தி, பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு பேபி ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) தலை ஆட்டி ஆட்டி சொல்லி, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது மூணாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... பர்ஸ்ட் ரேங்க் ஆமா...

காலைல ஆறு மணிக்கு எழுந்து கங்காபாய் மேம் சொல்லித்தந்த மராத்திய நினைச்சு கண்ணீர் விட்டுட்டே, அப்படி மராத்தி லெட்டர்ஸ்லயே தந்தி அடிக்கற நான் போய் மராத்தில கட்டுரையே எழுதணுமேன்னே யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, பத்து சென்டிமீட்டர் இருந்த முடியை நூறு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு வளர்ந்த ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) பின்னலை முன்னாடி பின்னாடின்னு மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது அஞ்சாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... ஆனா பர்ஸ்ட் ரேங்க் இல்லை ஆமா... பின்ன மராத்தியே தெரியாதே அப்போ அதுல ஜஸ்ட் பாஸ் தான ஆக முடியும் (அப்போ ஹிந்தி மட்டும் தெரியுமா ... அதுல நூத்துக்கு நூறானெலாம் தயவு செஞ்சி கேட்டுடாதீங்க ... அதுலயும் ததிங்கிணத்தோம் தான் ஸ்டில் பெட்டர் தான் மராத்தி)

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் மலையை பார்த்த மாதிரி உக்காந்து சிவபெருமானை தியானம் பண்ணிகிட்டே ஒரு அரை மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, இருபது சென்டிமீட்டர் இருந்த முடியை நாலு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு யாரை மாதிரியும் நினைச்சுக்காம என்னோட ஸ்டைல்லயே பவ்யமா சொல்லிட்டு, டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, போய் எழுதினது டென்த் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... திஸ் டைம் சிவா ஆல்சோ ஹெல்ப்ட்....  சோ நல்ல மார்க் தான்...

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் வானத்தை பார்த்து  உக்காந்து சூர்ய பகவானை தியானம் பண்ணிகிட்டே ஒரு மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, என்னோட நாப்பது கிலோ ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பெரிரிரிய ஷர்ட்டையும்  போட்டுக்கிட்டு தெருமுனை பிள்ளையார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் சுத்து சுத்துன்னு ஒரு முப்பது சுத்து சுத்திட்டு, முப்பது சென்டிமீட்டர் இருந்த முடியை ஒரு தடவை கூட சரியாய் வாராம ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் (இது மட்டும் காலேஜ் ஹாஸ்டல் போற வரைக்கும் மாறலை) சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "யெஸ்ஸ்ஸ்" ன்னு (கான்பிடன்ட்டா இருக்கேனாமாம் ... ) பெரிய்ய மனுஷியா சொல்லிட்டு,  டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, கூடவே கொஞ்சம் குங்குமமும் சேர்த்து வெச்சிக்கிட்டு போய் எழுதினது ப்ளஸ் டூ எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... கூடவே ஆஞ்சி வேற ... சோ கேட்கணுமா...

நல்லா தான் போயிட்டு இருந்தது இது வரைக்கும்......
அப்பறம் தான் ....
....
மறுநாள் எக்ஸாம்க்கு முதல் நாள் புல்லா ஸ்டடி லீவ் இருந்தாலும் புக்கை பூஜைல வெச்சிட்டு, பகல்ல நல்லா தூங்கிட்டு , சாயங்காலம் இருந்த அரை அடி கூந்தலை (ஹோம் சிக்ல முடி எல்லாம் கொட்டி போச்சு) சும்மா கட்டிக்கிட்டு , அந்த டீ தண்ணிய (பின்ன காபி தண்ணின்னு சொல்லலாம்.... உண்மையாவே தண்ணியா இருக்கற ஹாஸ்டல் டீயை சொல்ல கூடாதா), குடிச்சிட்டு அங்க இருந்த ஆபத்பாந்தவன் பிள்ளையார் கோவிலுக்கு போய் ஒரு நாப்பது சுத்து சுத்திட்டு, திரும்ப ஹாஸ்டல் வந்து, மறக்காம அங்க வந்து பொறி விக்கறவர் கிட்ட கார பொறி வாங்கி சாப்பிட்டு (இந்த ரண களத்துலயும் உனக்கு கார பொறி கேக்குதான்னு மட்டும் தெரியாம கேட்டுடாதீங்க .... அது சென்டிமென்ட .. பொறி சாப்டா அடுத்த நாள் எக்ஸாம் சும்மா பொறி பறக்க வெளுக்கற அளவு ஈஸியா வரும்னு .... it was a proven fact in those 4 years), அப்பறமும் திருந்தாம டின்னரையும் சாப்பிட்டு அலப்பறை விட்டுட்டு காரிடார்ல சுத்திட்டு, ராத்திரி புல்லா காலைல 5 மணி வரைக்கும் படி படின்னு அந்த புக்கை வெச்சி செஞ்சிட்டு,  காலைல ஆறு மணிக்கு இல்ல எட்டு மணிக்கு எழுந்து சுத்தமா படிச்ச மாதிரியே இல்லாம மண்டையெல்லாம் ஒரே பிளாங்க்கா, முழிச்சிகிட்டே பல்லை தேய்ச்சு (ஆனாலும் கூலா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன் இல்ல ),  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி ப்ளஸ் ஒரு நாலு a4 ஷீட்ல எழுதி வெச்சிருக்கற எல்லா ஸ்லோகத்தையும் சொல்லி, தலை வாருவது எல்லாம் ஒரு வேலையான்னு அதை குழாயடி சண்டைக்கு போறவ மாதிரியே அள்ளி முடிஞ்சிகிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்க ஹாஸ்டல்ல அப்பா இருப்பாரா என்ன... சோ நானே வரிசையா பிள்ளையார் கோவில் விபூதி, பாபா விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் செந்தூரம் (இதையெல்லாம் கரெக்ட்டா கலெக்ட் பண்ணி வெச்சிருப்பேன்.... பிரெண்ட்ஸ்க்கும் சாமியாடி ரேஞ்சுக்கு நானே மந்திரிச்சு வெச்சு விடுவேன்) எல்லாத்தையும் வெச்சிக்கிட்டு மேல்மருவத்தூர் ச்ச டங் ஸ்லிப் எக்ஸாம் ஹாலுக்கு போய் எழுதினது எஞ்சினீரிங் எக்ஸாம் .... அப்பப்பா இவ்வளவு பேர் இருந்தாங்கல... சோ எப்படியோ காப்பாத்திட்டாங்க...

இப்படியாக ஒரு வழியா எக்ஸாம்ஸ்க்கு ஒரு பெரிய முழுக்கை போட்டு படிப்பை முடிச்சிட்டேன் (வேணும்னா மேல படிக்கலாம்.... பட் இந்த கதையை படிச்ச உங்களுக்கே புரிஞ்சுருக்குமே )...

இப்போ போன மாசம் முதல் ஹிந்தி எக்ஸாம் (ஸ்கூல்ல ஆறாவது வரைக்கும் நோ எக்ஸாம்ஸ்... நல்லா இருக்குல்ல ).... சோ "    I am soooo excited maa… this is my first exam…” அப்படினெல்லாம் சொல்லிட்டு, என்னை மாதிரி இருக்க மாட்டா கொஞ்சம் சீரியஸா தான் இருக்கான்னு நினைக்கற மாதிரி நைட் படிச்சிட்டு தூங்கிட்டு, காலைல ஏழு மணிக்கு எழுந்து , மெதுவ்வ்வ்வா ஏதோ யோசனை பண்ணிகிட்டே (சேம் ப்ளட்) பல்லை தேய்ச்சி, குளிச்சு, டிரஸ் போட்டுக்கிட்டு , நேரா புக் ஷெல்ப் திறந்து தேடிடி ஒரு அமர் சித்ர கதா புக் (மஹாபாரதம்) எடுத்து மெனக்கெட்டு ஏதோ பேஜை திறந்து அதை படிக்க ஆரம்பிச்சா... "ஹே சுலோகம் (because that is the most important part of exams you see) ஏதாவது சொல்லுடி..." ன்னு நான் சொன்னதுக்காக இருந்த இடத்துலயே வேகவேகமா என்ன சொன்னான்னே புரியாம ஏதோ ஒண்ண சொல்லிட்டு "சொல்லிட்டேன்மா..." ன்னு மறுபடியும் மஹாபாரதம் படிக்க ஆரம்பிச்சாளே பாக்கணும் .... நானே ஷாக் ஆய்ட்டேன்னா பாத்துகோங்களேன் ...

பின் குறிப்பு:
இதெல்லாம் கூட பரவால்ல .... ஆனா வீட்ல ஒருத்தர் ஆபீஸ் போயிட்டு வந்து மறுநாள் எக்ஸாம்க்கு நைட், கொட்டாவி விட்டுக்கிட்டே, இந்த கண் இமையெல்லாம் குச்சி வெச்சு ஓபன் பண்ணிக்கிட்டு தெய்வமேங்கற மாதிரியே பாவமா  படிக்க ஆரம்பிக்கறப்போ.... இந்த பக்கம் என் பொண்ணு ஏதோ கதை புக்கும், அந்த பக்கம் நான் "மங்கையர் மலரும்" படிப்போமே... இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையாங்கற மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பாக்காதீங்க... அவருகிட்ட எல்லா ஸ்லோகமும் இருக்கற a4 ஷீட்டை கொடுத்துட்டேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே !!

Tuesday, January 24, 2017

மேரேஜ் கிப்ட்....

"சரி ... எனக்கு மேரேஜ் கிப்ட்டா என்ன தரப்போற..."

"அடிப்பாவி.... லவ் பண்ணப்போ தான் உன் பர்த்டே, என் பர்த்டே, இன்னைக்கு ஐம்பதாவது சண்டே, நாளைக்கு நூறாவது மண்டேன்னு எதுக்கெடுத்தாலும் கிப்ட்டா கேட்டு இம்சை பண்ண.... இப்போ கல்யாணம் நடக்க போறது நம்ம ரெண்டு பேருக்கும் தான் .... அது என்ன இப்பவும் நாந்தான் உனக்கு தரணுமா...  நீ எனக்கு தரக்கூடாதா...."

"உனக்குள்ள இவ்வளவு பீலிங்கா இருந்தது... நான் உன்னை உரிமையா கேட்டேன்..."

"ம்ம்ம்ஹும்ம்  .... இந்த கதையே வேண்டாம்.. என்ன நடந்தாலும் சரி இந்த தடவை நான் தரப்போறதில்லை...  நீதான் எனக்கு கிப்ட் தர...."

"ஓகே ஓகே... உனக்கு கிப்ட் தான வேணும்..... என்ன வேணும் கேளு..."

"ஹேய்ய் இத்தனை நாள் நான் உனக்கு என்ன வேணும்னு கேட்டா வாங்கித் தந்தேன்... எவ்வளவு மண்டைய பிச்சிகிட்டு ஒவ்வொரு தடவையும் உனக்கு வாங்குவேன் தெரியுமா.... ஒரு தடவை நீ அனுபவி அப்போ தெரியும் அந்த கஷ்டம்..."

"சும்மா ஒரு பொக்கே, புக் இதுக்கெல்லாம் மண்டைய பிச்சிகிட்டா??...  ம்ம்க்க்கும் ... ரொம்ப தான் பேசற... சரி இப்போ என்ன மேரேஜ் கிப்ட் நான் உனக்கு தரணும் அவ்ளோதானே... வெயிட் அண்ட் சி..."

கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் எந்த கிப்ட்டும் வரலை... அவனுக்கு ஒரே ஆர்வம்..."ஹே... என்ன கிப்ட் தரேன் அது இதுன்ன... ஒண்ணையும் காணோம்..."

"நான் தான் வெயிட் அண்ட் சி ன்னு சொன்னேன் இல்ல... இப்போதான கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் ஆயிருக்கு... பொறுமையா இரு... "

அப்படி என்ன வாங்கறா ஒரு வாரமா...

"இது பார் உனக்கு என்னோட மேரேஜ் கிப்ட்... "ன்னு சொல்லிட்டே அவள் நீட்டிய கவரை பார்த்து "என்ன இது... இதுக்கு தான் இவ்வளவு நாளா " ன்னு சிரிச்சுகிட்டே பிரிச்சான்...  உள்ளே கிப்ட் வவுச்சர் ....

"என்ன முழிக்கற.... நீதான் மண்டைய பிச்சிகிட்டு எனக்கு வாங்கித் தருவ.... நான் பாரு எவ்வளவு இன்டெலிஜென்ட்டா உனக்கு கிப்ட் கார்டு கொடுத்து இருக்கேன்.... உனக்கு என்ன வேணுமோ நீயே வாங்கிக்கலாம் பாரு..." அப்படின்னு சிரிச்சா...

சரின்னு அதை எடுத்துட்டு லைப் ஸ்டைல் போனா "திஸ் கார்டு இஸ் ஒன்லி பார் விமன் பேஷன் அஸஸரீஸ் அண்ட் காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸ் சார் ...." னானே பாக்கணும் ...

தெளிவாத்தான் இருக்காங்க 😛 !!

Monday, January 16, 2017

அம்மான்னா சும்மாவா !!!!

இந்த கால யங் பேரன்ட்ஸ் முக்க்கியமா அம்மாக்கள் (ஏன்னா அப்பாக்கள் இப்பவும் கொஞ்சம் கூலா தான் இருக்காங்க ங்கறது  என்னோட தாழ்மையான அபிப்பிராயம் ... அம்மாக்கள் என்னை அடிக்க வராதீங்க .. நாம எப்பவுமே ரொம்ம்ம்ப பொறுப்பானவங்கன்னு சொல்ல வந்தேன்) பதட்டத்தை (anxious parenting) குறைக்க, செய்யவே கூடாததுன்னு சில விஷயங்களை வெச்சுக்கணும்னு எனக்கு தோணுது (காரணம் இதுல சிலதை  நானும் செஞ்சு அது எல்லாம் என்னை வெச்சு செஞ்சுடுச்சு)

முதல்ல எதுக்கெடுத்தாலும் Mr கூகுளை போய் கருத்து கேக்கறது... குழந்தைக்கு நாப்பி மாற்றுவது எப்படி, செர்லாக் கலக்குவது எப்படி, அதை ஊட்டுவது எப்படி, தூங்கவைப்பது எப்படி, குழந்தையை அழ வைப்பது ..ச்சை  நாக்கு குளறிடுச்சு .. அழாமல் இருக்க வைப்பது எப்படி, கொஞ்சுவது எப்படி , திட்டுவது எப்படி.... இப்படி பல பல எப்படிகள்.... நாமளானா வீட்ல இருக்கற நம்ம பாட்டிஸ் எல்லாம் "ஒண்ணும் இல்லடி... வயத்து வலினா தொப்புளை சுத்தி கொஞ்சம் எண்ணையை தடவு ..." ன்னு சொல்றதை எல்லாம் துச்சமா நினைச்சு எங்கயோ எத்தியோப்பியால இருக்கற பாட்டி "ஹோம் ரெமடிஸ்" ங்கற பேர்ல அதே எண்ணெய் தடவும் டெக்னிக்க சொல்ல அதை செய்வோம்.... இதுல என்னடானா கூகிள் இதுக்கெல்லாம் சைல்டு சைக்கியாட்ரிஸ்ட்ஸ் கிட்ட இருந்தோ சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ஸ் கிட்ட இருந்தோ கருத்தை எடுக்காம,  நம்மள மாதிரியே எக்ஸ்பர்ர்ர்ட்(???) பேரன்ட்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்பர்ட் அட்வைஸாஆ அள்ளி கொட்டும்.... அதை படிச்சிட்டு நம்ம குழந்தை நார்மலா பண்ற விஷமத்தை கூட "ஹைப்பர் ஆக்டிவ்", "அடன்ஷன் டெபிசிட் டிஸார்டர்"  அச்சா பூச்சா ன்னு பெரிய ப்ரச்சனையா நினைச்சு நமக்கு பிபி, டிப்ரெஷன், ஹிஸ்டிரியான்னு வர வெச்சுப்போம்... பாவம் குழந்தை நம்ம டிஸ்ஆர்டர பாத்து ஒண்ணும் புரியாம முழிக்கும் (இன்னும் கொஞ்ச நாள்ல மேனேஜிங் பேரன்ட்ஸ்ன்னு கூகிள் பண்ணி பாத்தாலும் பாக்கும்)...

இது எல்லாத்தையும் விட ரொம்ம்ம்ம்ப முக்கியமான த்ரெட்டா நான் பாக்கறது, இப்போ நெட்ல உலா வர்ற நிறைய டெர்மினாலஜிஸ்.... full time at home mother, stay at home mother (SAHM), working mother, working part time mother (sorry part time working mother ) இப்படி... அட என்ன கொடுமை வேலைக்கு போனாலும் வீட்ல இருந்தாலும் அம்மாங்கறது முழு நேரமும் தான... எங்கயாவது working father, part time working father பார்த்து இருக்கறோமா .... அப்பறம் என்ன full time at home mother... இந்த ஒரு விஷயம் மட்டுமே அம்மாங்கற நம்ம கான்பிடன்ஸை பெருசா அசைச்சு பாக்கற விஷயமா தான் எனக்கு தோணுது.... இதுல quantity time and quality time மாம்.... இது எல்லாம் கொடுக்கற ப்ரெஷர் இருக்கே .... சேப்டி வால்வ் ரிப்பேர் ஆன ப்ரெஷர் குக்கர் மாதிரி ரொம்ம்ம்ப ஆபத்தானது நம்ம ஹெல்த்துக்கு ..... வீட்ல இருக்கற அம்மாக்களுக்கு வெட்டியா இருக்கோமோன்ன பீலிங்கும், வொர்க் பண்ற அம்மாக்களுக்கு ஓர்ர்ரே கில்ட்டி பீலிங்கும் தர தான் இப்படி பட்ட forums discussions லாம் ஹெல்ப் பண்ணும் மத்தபடி பேரன்டிங் டிப்ஸ் எல்லாம் தராது ங்கறது தான் நான் நினைக்கறேன் (i know this because i was a working but a full time at home(!!!) mother now...)..எப்படிப்பட்ட மதரா இருந்தாலும் நாம ஒரு நாள் வீட்ல இல்லைனா வீட்ல இருக்கறவங்க நிலைமையும் அதை விட வீடு (தலைகீழா ) இருக்கற நிலைமையும் நினைச்சாலே நம்ம இம்பார்டன்ஸ் நமக்கு தன்னால புரிஞ்சுரும் ... அப்பறம் இந்த SAHM , full time, part time mother ங்கறதெல்லாம் நம்ம ப்ளட் பிரஷரை ஒண்ணும் பண்ண முடியாது... நாம தான் வீட்ல இருக்கறவங்க பிரஷரை ஏத்துவோம் ஓவர் கான்பிடன்ஸ்ல ...வேலைக்கு போறதும் வீட்ல இருக்கறதுக்கு ஒவ்வொருத்தர் குடும்ப நிலைமை, ஹெல்த் நிலைமை, பெர்சனல் ரீஸன்ஸை பொறுத்து செய்யறது ... it has nothing to do with our ability,intelligence and importantly mothering skills...

அடுத்தது சிங்கிள் சைல்டு அண்ட் sibling ஓட வளரும் சைல்டு.... அதை பத்தி வர்ற ஆர்டிகல்ஸ் போரம்ஸ் டிஸ்கஷன்ஸ் .... இந்த கவலை இருக்கே அது இன்னொரு தலையை தின்னும் பெரும் ப்ரச்சனை.... அகைன் சிங்கிளா அமையறதும் அதுக்கு மேல அமையறதும் அவங்க அவங்க நிலைமையை பொறுத்தது.... முக்கியமா கடவுள் கொடுக்கும் வரம்.... எப்படி இருந்தாலும் அது நன்மைக்கே ன்னு நினைச்சு அமைதியான பதட்டம் குறைந்த நல்ல ரோல் மாடல் அம்மாவா இருந்தாலே குழந்தை நல்லா வளரும் ... இதை கேரிங் ஷேரிங் எல்லாம் நாம சொல்லிக்கொடுக்க சொல்லி கொடுக்கவே வளரும்னு தான் தோணுது.... இதை எல்லாம் படிச்சிட்டு குழந்தையோட எதிர்காலம் பத்தி   ரொம்ம்ம்ப  கவலை படாம பாஸிட்டிவா இருந்தாலே லைஃப் நல்லா இருக்கும்...

அடுத்து வருவது ஸ்கூல் ஹண்ட்.... ஓர்ர்ர்ர்ரெ ரெவ்யூஸ் படிச்சிதான் செலெக்ட் பண்ணுவோம்.... இதுல பாத்தா ஒரு சைட்ல ஒரு ஸ்கூலை திட்டுவாங்க அதே ஸ்கூல இன்னொரு சைட்ல சூப்பர்ம்பாங்க .... நாமளான மண்டைய பிச்சிகிட்டு இன்டர்வ்யூக்கு குழந்தையை தயார் படுத்துவோம் .... அப்போதான் நமக்குள்ள இருக்கற ஷேக்ஸ்பியர், ரென் அண்ட் மார்ட்டின் எல்லாம் வெளிய வருவாங்க.... ஸ்கூல் சேர்த்துட்டு ஓரொரு மீட்டிங்கிலேயும் பேரன்ட்ஸ் ஒரே பதட்டமா டிஸ்கஸ் பண்ணுவோம் குழந்தை வாங்கின கிரேட் பத்தி.... போன் பண்ணி பண்ணி எல்லா பேரன்ட்ஸ் கிட்டயும் கருத்து கணிப்பு எடுப்போம்.... ஸ்கூல் செலக்ட் பண்றதெல்லாம் தப்பு இல்ல ஆனா அதுக்கப்பறம் ஓரொரு விஷயத்துக்கும் ஓவரா ரியாக்ட் பண்றதுதான் நம்ம பிபியை ஏத்தும்....  அப்பறம் எக்ஸ்டரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்ன்னு இருக்கற எல்லாத்துலயும் போய் சேக்கறது.... சேக்கறது தப்பு இல்ல.... ஆனா எதுலங்கறது தான் முக்கியம்.. பாவம் குழந்தை நல்லா வரையும் நாம போய் பாட்டுல சேப்போம்... நல்லா பாடும் நாம போய் ஆட வெப்போம்..... அந்த காலத்துல எல்லாருக்கும் எல்லா க்ளாஸ்லயும் சேக்கற அளவு வசதியும் இருக்காது இவ்வளவு க்ளாஸசும் இருக்காது ... ஸ்டில் சில்ட்ரன் வேர் கான்பிடண்ட் ன்னு தோணுது... அதை விட முக்கியமா பேரன்ட்ஸ் வேர் கான்பிடண்ட்... அதனால தான் நாமயெல்லாம் ரொம்ம்ம்ம்ப யோசிக்கற புத்திசாலியா வளந்துட்டோம்....

இதெல்லாம் விட நாம ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் நம்ம பேரண்ட்ஸ்க்கு இருந்த ஒரு முக்கியமான விஷயம் நம்ம ஜெனரேஷன்க்கு அவ்வளவா இல்லைன்னு எனக்கு தோணற ஒரு விஷயம்.... லைஃப் ல நம்பிக்கை ... கான்பிடனஸ் ... நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கற அந்த பக்குவம்.... may be life was simple and there was no much job tension , job insecurity etc those days... But now apart from stress, job insecurity we have one more thing called desire... எதையோ துரத்திக்கிட்டே ஓடறோம் ... ஆனா அது என்னன்னு கேட்டா சொல்ல தெரியாது...

சோ பாசிட்டிவ் ஆட்டிட்யூடை வளர்ப்பது எப்படின்னு Mr கூகிளை நான் கேக்க ஆரம்பிச்சுட்டேன் (இன்னும் முழுசா திருந்தல.... ஸ்டில் இன்  த ப்ராஸஸ் 😉) !!!!

Tuesday, January 3, 2017

நல்ல டெயிலர் அமைவதெல்லாம்ம்ம்.....

வாழ்க்கைல எவ்வளவோ விஷயங்கள் நல்லா அமையலாம்.... அமையாம போலாம் .... ஆனா இந்த டெயிலர் அமையறது இருக்கே .... அப்பப்பப்பா.... அது உண்மையாவே இறைவன் கொடுத்த வரம் தான் .... எனக்கும் துணி தச்சு போட்டுக்கறதுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்..... ஜாதகத்துல தச்ச துணி போட்டுக்கற கட்டத்துல  தோஷம்னு நினைக்கறேன்... ஏன் ஜாதகத்தையெல்லாம் இழுக்கறேன்னு கேக்கறீங்களா... சொல்றேன் இருங்க ...

எனக்கு தெரிஞ்சு கடைசியா எனக்கு ஒரு டெயிலர் தச்சு பிரமாதமா இருந்த சல்வார் கம்மீஸ் நான் மூணாவது படிக்கும் போது .... அப்போவே என் அப்பா ஒரே ட்ரெண்டியா தான் ட்ரஸ் வாங்கித்தருவார்....  சல்வார் கம்மீஸ் ஸ்டையில் ஸ்டேட்மெண்டா இருந்தப்போ ஒரு கிரீம் அண்ட் பிங்க் சல்வார் கம்மீஸ் துணிய மேட்டுபாளையத்துல வாங்கி குடும்பத்தோட பஸ் ஏறி கோயம்புத்தூர் போய் அங்க ஒரு டெயிலர் கிட்ட கொடுத்து ஒரு பத்து நாள் தூக்கத்துல எல்லாம் ஒரே ஆஷா பரேக், மும்தாஜ் , ஹேமமாலினி மாறி இமாஜின் பண்ணி (including தட் மண்டை மேல கொண்டை ... ஆனா எனக்கு அப்போ பாய் கட் ) அப்பறம் திரும்ப பஸ் ஏறி போய் அதை வாங்கிட்டு வந்து துப்பட்டாவை ஏகப்பட்ட மெத்தட்ல மாத்தி  மாத்தி போட்டு அடுத்த ஒரு வருஷத்துக்கு எல்லா கலர் ட்ரஸ் சாட்டர்டே ஸ்கூல் , கல்யாணம், காது குத்து, தீபாவளி (ஆமா காலைல புதுச போட்டுட்டு ஈவினிங் சல்வார் ), பொங்கல், கடைவீதிக்கு போறதுல இருந்து தெருமுனை மளிகை கடை வரைக்கும் அது தான் மை காஸ்ட்யூம் ... அதுவும் எவ்வளவுதான்  தாங்கும் பாவம் .... நொந்து போய் நார் நாராடுச்சு..... I still pity that lovable salwar ...

அதுக்கு அப்பறம் மோஸ்ட்லி ரெடிமேட் தான் கொஞ்ச வருஷத்துக்கு .... டெயிலர் ஒன்லி பார் ஸ்கூல் யூனிபார்ம் .... ஆனா நான் தான் வருஷா வருஷம் ஊர் ஊரா சுத்தி ஏகப்பட்ட ஸ்கூல்கள்ல படிச்சேன்னே .... ஆனாலும்  சொல்லி வெச்ச மாறி ஆல் டெயிலர்ஸ் சொதப்புவாங்க... யூனிபார்ம்ல எப்படிங்கறீங்களா..... ஸ்கூல்ல ஸ்கர்ட்ன்னா பாவாடையா தெச்சு வரும்.... ஸ்கூல்ல பினபார்ன்னா ஷிம்மியா வரும் .... சுடிதார்ன்னா அங்கியா வரும்.... oh my god i am very thankful to all my class friends who tolerated my look ....

அடுத்து தாவணி பருவம்..... ஸ்கூல் யூனிஃபார்ம் தான் .... அதுவே கரும்பச்சை பாவாடை மஞ்சள் பிளவுஸ் கிளிப்பச்சை தாவணின்னு செம்ம்ம்ம்ம காமெடியா இருக்கும் .... இதுல நீளமா பாவாடை ஆனா அதுக்குள்ள ஒரு அடிக்கு டக்கு (எதுக்குன்னே இப்போ வரைக்கும் எனக்கு புரில... ஒரு வருஷத்துல அவ்வ்வ்வளவா வளருவேன்... ) அதுவும் படு கனமான பெட்ஷீட் துணி.... அதை போட்டுக்கிட்டு வெயிட் கீழ இழுத்ததுல ஷோல்டர்ல கூன்னே விழுந்துடுச்சு..... பாவம் அதை வாஷ் பண்ண எங்க அம்மா ( என் பொண்ணுக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ற நான் ஒரு நாள் கூட எங்கம்மாக்கு ஹெல்ப் பண்ணலையேன்னு இப்போ ஒரே பீலிங்) ... பாவாடை இப்படின்னா பிளவுஸ் ஒரே தொள தொள.... பின்ன பாவாடைல  டக்குன்னா பிளவுஸ்க்கு மட்டும் வேண்டாமா... ஆனா கொடுக்கற துணியவே அடிக்கற டெயிலர்களுக்கு மத்தியில் (no offense please) எக்ஸ்டரா துணிய போட்டு தச்ச டெயிலர் அண்ணாக்கு கோவிலே கட்டலாம்....

அப்போ தான் நாமளே தைக்கலாமேன்னு அம்மாகிட்ட பேப்பர் கட்டிங் வாங்கி அவங்களுக்கு பிளவுஸ் தைக்கறதுல ஆரம்பிச்சேன் .... வாட் அ மிராக்கிள் .... அவங்க அளவுக்கு தைச்சது கடைசியில என் அளவுக்கு இருந்தது .... அதுக்கு மேல ஸ்க்ரீன் தலைகாணி கவர  தவிர எதுவும் தைக்க மாட்டேன்ன்னு சபதம் எடுத்துட்டேன்... வேற வழி ...

அப்பறம் சுடிதார் ..... வெச்சு போடலாம் வெச்சு போடலாம்னு கொஞ்சம் லூசா தைக்க சொன்னா டபிள் த சைஸ்ல வரும்... அந்த ராசில தான் இப்போ டபிள்  த சைஸ்ல இருக்கேனோ என்னவோ .... சரி பிட்டிங்கா தைங்கன்னு சொன்னா கைல முட்டிக்கு மேல நுழையாது..... அசையவே முடியாது .....  சுடிதார்க்கெல்லாம் ரெண்டு மூணு தையல் போட்டு வேணும்னா பிரிச்சுக்கற மாதிரி தைச்சுக்கிட்டவ நான் ஒருத்தியாதான் இருப்பேன் ... what an idea madamji...  அதுகூட பரவால்ல நான் கொடுத்த துணியில் டாப்சும் வேற யாரோ கொடுத்த துணியில் பேண்டும் வரும்.... வாட் அ கொடுமை பாருங்க....

என் கல்யாணத்துக்கு பிளவுஸ் தைக்க பிள்ளையாருக்கு 108 தேங்கா, ஆஞ்சநேயருக்கு வடைமாலை , அம்பாளுக்கு 108 பிரதக்ஷிணம் (கூடவே நீயும் ஒரு பெண் தானேன்னு வேண்டுதல்....) ன்னு எல்லாம் பண்ணி சீட்டு குலுக்கி போட்டு ஒரு டெயிலர கண்டுபிடிச்சு எப்படியோ எல்லா கடவுளும் காப்பாத்திட்டாங்க..... ஆனா அதுக்கு அப்பறம் ஒரே மாசத்துல அந்த மஹானுபாவர் (டெயிலர் தான் ) ஊரை விட்டே போயிட்டார்.....

அப்பறம் ஒரே டிஃபரெண்ட் டைப்ஸ்  ஆப் லூஸா இருக்கற ரெடிமெட் பிளவுஸ் போட்டு ஸாரி கட்டற ஆசையே போயிடுச்சு (என்னை சுத்தி இருக்கறவங்க ரியாக்ஷன் பாத்துதான்)... சுடிதார்களாம் ஸ்டிச்சிங் மூச் நினைக்கறதே இல்ல..... ஒன்லி மெகாமார்ட் பாண்டலூன் குர்தா தான் ....

இப்போ லேட்டஸ்ட்டா ஒரு நல்ல டெயிலர கேள்விப்பட்டு என்னோட கசின் கல்யாணத்துக்கு ரிஸ்க் எடுத்து பிளவுஸ் தைக்க கொடுத்தேன் .... சும்மா சொல்லக்கூடாது .... ரொம்ம்ம்ப வருஷத்துக்கு அப்பறம் சூப்பரா தைச்சு வந்தது .... போட்டு பாத்திட்டு ஒரே சந்தோஷம் ..... ஒரு வாஷ் பண்ணிட்டு அயர்ன் பண்ணலாம்ன்னு அயர்ன் பாக்ஸை வச்சேன் பாருங்க... புஸ்ன்னு ஒரு சவுண்ட்.... பின்ன சில்க் காட்டன் துணின்னு மறந்துட்டு புல்  ஹீட்ல அயர்ன் பாக்ஸை அது மேல வச்சா தீஞ்சு போகாம ....

இப்போ சொல்லுங்க இது ஜாதகத்துலயே இருக்கற ஸ்டிச்சிங் தோஷம் தான !!!