" ம்ம் ம்ம் ம்ம்"...
"ஏம்மா இப்படி அழற" ...
"ம்ம் எனக்கு இப்போவே தாழம்பூ வெச்சு ஜடை போட்டு விடு ".....
"சொன்னா கேளும்மா இப்போவேனா எப்டி முடியும்... திடிர்னு உனக்கு என்ன ஆச்சு "...
"ம்ம்ம் பக்கத்து வீட்டு பவித்ரா பின்னி இருக்கா... என்னை பார்த்து வேவேவே னு சொல்றா "...
"சரி டீ அதுக்கு என்ன பண்ண முடியும் ... இப்பொவே னா நான் எங்க போவேன்"....
"தாழம்பூ அந்த பூக்கடைல இருக்கும் .. வாங்கி வச்சு விடு "...
"ஐயோ சொன்னா கேக்கணும் டீ ... ஆர்பாட்டம் பண்ணாத "....
அதற்குள் குழந்தையின் அழுகையை கேட்டு அந்த அக்ரஹார தெருவில் இருந்த அக்கம் பக்கம் வீட்டார் வந்த விட்டார்கள் ....
"ஏன் மாமி குழந்தைய அழ விடறீங்க ... என்ன கேக்கறதோ அத கொடுங்களேன்... பாவம் இப்படி கதறர்து "
"அய்யோ அவ என்ன கேக்கறான்னு உங்களுக்கு தெரியலை.. அதான் இப்படி சொல்றீங்க....அவ இப்போவே தலைக்கு தாழம்பூ வச்சு பின்னி விட சொல்றா "...
"ஹா ஹா ஹா சரியா போச்சு... கொழந்தை இப்போ அழாம சமத்தா இருந்தா அம்மா அப்றம் வச்சு விடுவா... சரியா "...
அழுகையின் சுருதி மேலும் கூடியது... இந்த அக்கபோரை இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தாத்தா வந்தார்..
"எடுடி அந்த குச்சிய... இவ தலைல அதை நட்டு பூவை சுத்துவோம்" ...
"அய்யோ தாத்தா வேணாம் வேணாம் "...
"அப்றம் என்ன பண்றது... உன் தலைல என்ன இருக்கு "..
தலையை தொட்ட உடன் சட்டென்று பிரக்ஞை வந்த "ஞே " என்று முழித்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தது போன வாரம் தலை மொட்டை அடிக்கப்பட்ட அந்த குட்டி பேத்தி !

No comments:
Post a Comment