சின்ன வயதில் அப்பா தான் முதல் ஹீரோ ... அப்பா என்ன செய்தாலும் நன்றாக கவனித்து வைத்து அதையே ரிபீட் செய்வதுதான் என் ஹீரோயிசம் .... ரிமோட் கார் அப்பா ... சைக்கிள் வேணும் அப்பா ... ரிப்போர்ட் கார்டு அப்பா .... பைக் ரைட் அப்பா என்று சுற்றிய என் அப்பா உலகம் எப்போ எங்கே எப்படி சற்று மாறியது..... ஹை ஸ்கூல் , பிரெண்ட்ஸ், ட்யுஷன், மேட்ச், தியேட்டர் , காலேஜ் என்று மற்ற எல்லாம் முதல் சீட் எடுக்க எப்படியும் பாக் சீட்டில் இருக்கும் அப்பா வேறு எங்கும் போய் விட மாட்டார் என்னும் மெத்தனமாயிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்... அப்படி ஓடும் போது அப்பாவின் கண்ணில் தெரிந்த ஒரு அக்கறையின் பரிதவிப்பு என்னவோ நான் ரொம்ப வளர்ந்து பெரிவனானதை போல பெருமை பட வைத்தது ....
வேலை சேர்ந்து பெரிய மனிதனாய் உணர்ந்த பின், என் பையன் அவன் சம்பளத்தில் வாங்கி தந்த ஷர்ட் , என் பையன் அவன் பைக்ல என்னை கூட்டிட்டு போனான் என்று அப்பா பெருமையாக சொன்ன போது அதை என் சாதனையாக நினைத்தேன்... அப்பாவை வைத்து முதல் ரைட் போன பைக் பின்னே ஏனோ ரொம்ப பிசியாகி விட்டது அப்பாவின் மென்மையான புன்னகையை கடந்து கொண்டே .... என் திருமணம் முடிந்த போது அப்பாவின் கண்ணில் தெரிந்த பெருமிதம் என்னவோ அப்பாவையே காக்கும் தலைவனாய் என்னை உணர வைத்தது.....
ஆனால் அப்பா இன்றைக்கு என் குழந்தையை பார்க்கும் போது தான் புரிகிறது .... தோளில் சுமக்க வேண்டிய காலத்தில் தோளில் சுமந்தும், கை பிடித்து அழைத்து செல்லும் நேரத்தில் கையை பிடித்தும், அந்த கையை உதறி விட்டு நான் ஓட எத்தனித்த தருணத்தில் மனம் பரிதவித்தாலும் நம்பிக்கையோடு என் கையை விட்டு என்னை பெரியவனாய் உணர செய்ததும் , எனக்கான வாழ்க்கை அமைந்த போது எட்டி நின்று அதை வாழ்த்தி நான் பெருமை அடைய செய்ததும் , என் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் அறியாமலே என்னை அரவணைத்து என்னை தலைவனாக உணர செய்ததும் அப்பா தான்...
இப்பொழுது தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அப்பா அணைப்புக்குள் இருந்து இருக்கலாமோ !

No comments:
Post a Comment