Tuesday, January 3, 2017

நல்ல டெயிலர் அமைவதெல்லாம்ம்ம்.....

வாழ்க்கைல எவ்வளவோ விஷயங்கள் நல்லா அமையலாம்.... அமையாம போலாம் .... ஆனா இந்த டெயிலர் அமையறது இருக்கே .... அப்பப்பப்பா.... அது உண்மையாவே இறைவன் கொடுத்த வரம் தான் .... எனக்கும் துணி தச்சு போட்டுக்கறதுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்..... ஜாதகத்துல தச்ச துணி போட்டுக்கற கட்டத்துல  தோஷம்னு நினைக்கறேன்... ஏன் ஜாதகத்தையெல்லாம் இழுக்கறேன்னு கேக்கறீங்களா... சொல்றேன் இருங்க ...

எனக்கு தெரிஞ்சு கடைசியா எனக்கு ஒரு டெயிலர் தச்சு பிரமாதமா இருந்த சல்வார் கம்மீஸ் நான் மூணாவது படிக்கும் போது .... அப்போவே என் அப்பா ஒரே ட்ரெண்டியா தான் ட்ரஸ் வாங்கித்தருவார்....  சல்வார் கம்மீஸ் ஸ்டையில் ஸ்டேட்மெண்டா இருந்தப்போ ஒரு கிரீம் அண்ட் பிங்க் சல்வார் கம்மீஸ் துணிய மேட்டுபாளையத்துல வாங்கி குடும்பத்தோட பஸ் ஏறி கோயம்புத்தூர் போய் அங்க ஒரு டெயிலர் கிட்ட கொடுத்து ஒரு பத்து நாள் தூக்கத்துல எல்லாம் ஒரே ஆஷா பரேக், மும்தாஜ் , ஹேமமாலினி மாறி இமாஜின் பண்ணி (including தட் மண்டை மேல கொண்டை ... ஆனா எனக்கு அப்போ பாய் கட் ) அப்பறம் திரும்ப பஸ் ஏறி போய் அதை வாங்கிட்டு வந்து துப்பட்டாவை ஏகப்பட்ட மெத்தட்ல மாத்தி  மாத்தி போட்டு அடுத்த ஒரு வருஷத்துக்கு எல்லா கலர் ட்ரஸ் சாட்டர்டே ஸ்கூல் , கல்யாணம், காது குத்து, தீபாவளி (ஆமா காலைல புதுச போட்டுட்டு ஈவினிங் சல்வார் ), பொங்கல், கடைவீதிக்கு போறதுல இருந்து தெருமுனை மளிகை கடை வரைக்கும் அது தான் மை காஸ்ட்யூம் ... அதுவும் எவ்வளவுதான்  தாங்கும் பாவம் .... நொந்து போய் நார் நாராடுச்சு..... I still pity that lovable salwar ...

அதுக்கு அப்பறம் மோஸ்ட்லி ரெடிமேட் தான் கொஞ்ச வருஷத்துக்கு .... டெயிலர் ஒன்லி பார் ஸ்கூல் யூனிபார்ம் .... ஆனா நான் தான் வருஷா வருஷம் ஊர் ஊரா சுத்தி ஏகப்பட்ட ஸ்கூல்கள்ல படிச்சேன்னே .... ஆனாலும்  சொல்லி வெச்ச மாறி ஆல் டெயிலர்ஸ் சொதப்புவாங்க... யூனிபார்ம்ல எப்படிங்கறீங்களா..... ஸ்கூல்ல ஸ்கர்ட்ன்னா பாவாடையா தெச்சு வரும்.... ஸ்கூல்ல பினபார்ன்னா ஷிம்மியா வரும் .... சுடிதார்ன்னா அங்கியா வரும்.... oh my god i am very thankful to all my class friends who tolerated my look ....

அடுத்து தாவணி பருவம்..... ஸ்கூல் யூனிஃபார்ம் தான் .... அதுவே கரும்பச்சை பாவாடை மஞ்சள் பிளவுஸ் கிளிப்பச்சை தாவணின்னு செம்ம்ம்ம்ம காமெடியா இருக்கும் .... இதுல நீளமா பாவாடை ஆனா அதுக்குள்ள ஒரு அடிக்கு டக்கு (எதுக்குன்னே இப்போ வரைக்கும் எனக்கு புரில... ஒரு வருஷத்துல அவ்வ்வ்வளவா வளருவேன்... ) அதுவும் படு கனமான பெட்ஷீட் துணி.... அதை போட்டுக்கிட்டு வெயிட் கீழ இழுத்ததுல ஷோல்டர்ல கூன்னே விழுந்துடுச்சு..... பாவம் அதை வாஷ் பண்ண எங்க அம்மா ( என் பொண்ணுக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ற நான் ஒரு நாள் கூட எங்கம்மாக்கு ஹெல்ப் பண்ணலையேன்னு இப்போ ஒரே பீலிங்) ... பாவாடை இப்படின்னா பிளவுஸ் ஒரே தொள தொள.... பின்ன பாவாடைல  டக்குன்னா பிளவுஸ்க்கு மட்டும் வேண்டாமா... ஆனா கொடுக்கற துணியவே அடிக்கற டெயிலர்களுக்கு மத்தியில் (no offense please) எக்ஸ்டரா துணிய போட்டு தச்ச டெயிலர் அண்ணாக்கு கோவிலே கட்டலாம்....

அப்போ தான் நாமளே தைக்கலாமேன்னு அம்மாகிட்ட பேப்பர் கட்டிங் வாங்கி அவங்களுக்கு பிளவுஸ் தைக்கறதுல ஆரம்பிச்சேன் .... வாட் அ மிராக்கிள் .... அவங்க அளவுக்கு தைச்சது கடைசியில என் அளவுக்கு இருந்தது .... அதுக்கு மேல ஸ்க்ரீன் தலைகாணி கவர  தவிர எதுவும் தைக்க மாட்டேன்ன்னு சபதம் எடுத்துட்டேன்... வேற வழி ...

அப்பறம் சுடிதார் ..... வெச்சு போடலாம் வெச்சு போடலாம்னு கொஞ்சம் லூசா தைக்க சொன்னா டபிள் த சைஸ்ல வரும்... அந்த ராசில தான் இப்போ டபிள்  த சைஸ்ல இருக்கேனோ என்னவோ .... சரி பிட்டிங்கா தைங்கன்னு சொன்னா கைல முட்டிக்கு மேல நுழையாது..... அசையவே முடியாது .....  சுடிதார்க்கெல்லாம் ரெண்டு மூணு தையல் போட்டு வேணும்னா பிரிச்சுக்கற மாதிரி தைச்சுக்கிட்டவ நான் ஒருத்தியாதான் இருப்பேன் ... what an idea madamji...  அதுகூட பரவால்ல நான் கொடுத்த துணியில் டாப்சும் வேற யாரோ கொடுத்த துணியில் பேண்டும் வரும்.... வாட் அ கொடுமை பாருங்க....

என் கல்யாணத்துக்கு பிளவுஸ் தைக்க பிள்ளையாருக்கு 108 தேங்கா, ஆஞ்சநேயருக்கு வடைமாலை , அம்பாளுக்கு 108 பிரதக்ஷிணம் (கூடவே நீயும் ஒரு பெண் தானேன்னு வேண்டுதல்....) ன்னு எல்லாம் பண்ணி சீட்டு குலுக்கி போட்டு ஒரு டெயிலர கண்டுபிடிச்சு எப்படியோ எல்லா கடவுளும் காப்பாத்திட்டாங்க..... ஆனா அதுக்கு அப்பறம் ஒரே மாசத்துல அந்த மஹானுபாவர் (டெயிலர் தான் ) ஊரை விட்டே போயிட்டார்.....

அப்பறம் ஒரே டிஃபரெண்ட் டைப்ஸ்  ஆப் லூஸா இருக்கற ரெடிமெட் பிளவுஸ் போட்டு ஸாரி கட்டற ஆசையே போயிடுச்சு (என்னை சுத்தி இருக்கறவங்க ரியாக்ஷன் பாத்துதான்)... சுடிதார்களாம் ஸ்டிச்சிங் மூச் நினைக்கறதே இல்ல..... ஒன்லி மெகாமார்ட் பாண்டலூன் குர்தா தான் ....

இப்போ லேட்டஸ்ட்டா ஒரு நல்ல டெயிலர கேள்விப்பட்டு என்னோட கசின் கல்யாணத்துக்கு ரிஸ்க் எடுத்து பிளவுஸ் தைக்க கொடுத்தேன் .... சும்மா சொல்லக்கூடாது .... ரொம்ம்ம்ப வருஷத்துக்கு அப்பறம் சூப்பரா தைச்சு வந்தது .... போட்டு பாத்திட்டு ஒரே சந்தோஷம் ..... ஒரு வாஷ் பண்ணிட்டு அயர்ன் பண்ணலாம்ன்னு அயர்ன் பாக்ஸை வச்சேன் பாருங்க... புஸ்ன்னு ஒரு சவுண்ட்.... பின்ன சில்க் காட்டன் துணின்னு மறந்துட்டு புல்  ஹீட்ல அயர்ன் பாக்ஸை அது மேல வச்சா தீஞ்சு போகாம ....

இப்போ சொல்லுங்க இது ஜாதகத்துலயே இருக்கற ஸ்டிச்சிங் தோஷம் தான !!!

No comments:

Post a Comment