ரொம்ப நாளைக்கு அப்பறம் போன வாரம் பெசன்ட் நகர் பீச் விசிட் .... ரெண்டு நாளா சென்னையை வறுத்தெடுத்த வெயிலா இல்லை சண்டே ங்கறதாலயான்னு தெரில பீச்ல நல்ல கூட்டம் .... செருப்பை கார்லயே கழட்டிட்டு வெறும் காலோட பேவ்மெண்ட்ல இருந்து கடல் வரைக்கும் மணல்லயே நடந்தோம்..... காரணம் ஒண்ணு எல்லாருமே அலையில காலை நனைக்கனும்னா இந்த செருப்பை காவல் காக்கற வேலை இல்ல.. ரெண்டு காலை நனைச்சிட்டு மணலை leg pack போட்டுக்கிட்டு செருப்பையும் போட்டுட்டு திரும்ப வரும்போது அந்த மணலை எல்லாம் பிரபுதேவா மாறி காலை உதறி டான்ஸ் ஆடிட்டே உதிர்க்கணும் இல்லேன்னா கார் பீச்சா மாறிடும் அபாயம்.... முணு மணல்ல வாக்கிங் போனா சட்டுனு நாலு கிலோ வெயிட் குறைஞ்சிடும்னு முன்ன யாரோ ஒரு ஞானி சொன்னதா ஞாபகம் ...
போய் அப்பா பொண்ணை அலையில விளையாட அனுப்பிட்டு ஆன்னு கடலை பராக்கு பாத்துட்டு உட்காந்தாச்சு... இப்படி இருக்கும்போது உடனே இளையராஜா மியூசிக் பாக்ஸா மாறிடறது என்னோட வழக்கம்... அங்க நாம யாரோதான ... யாருக்கு நம்மள தெரியும்கற தைரியத்துல வாயாலேயே வயலின் வீணை புல்லங்குழல் இப்படி சகல விதமான வாத்தியங்களையும் வாசிச்சு பாட்டும் பாடுவேன்... so வழக்கப்படி ராதிகாவா மாறி காலால தாளம் போட்டுட்டே "கண்ணன் வந்து பாடுகின்றான் .." ன்னு பீலோட ஆரம்பிச்சேன்... பக்கத்தில ஒரு காலேஜ் கேர்ள்... ஒரு க்ரூப்பா வந்து இருப்பாங்க போல இருக்கு... ஒரு பெரிய செருப்பு கடையவே காவல் காத்துட்டு இருந்தா .... நான் முதல் பாட்ட பாடி முடிச்சதுமே என்னை திரும்பி பாத்தா .... ஆஹா நமக்கு ஒரு ரசிகை போல ... அவளை ஏமாத்த வேண்டாமே ன்னு உற்சாகமா அடுத்து அர்விந்த்ஸ்வாமியா மாறி "எல்லோரும் சொல்லும் பாட்டு ...." ன்னு கிட்டரோட (அட வாயால தான் பா) கருத்து சொல்ல ஆரம்பிச்சேன் ... உடனே அவ எழுந்து போய் அலையில விளையாடிட்டு இருந்த அவ பிரெண்ட்ஸ் கிட்ட என்னை காமிச்சு ஏதோ சொன்னா ..... உடனே அவங்க இன்னும் கொஞ்ச நேரம்ன்னு சைகை காட்டின மாறி இருந்தது ... ஆஹா நம்ம ரசிகை அவ பிரெண்ட்ஸும் என் கான மழையில நனையட்டும்னு கூப்படறா போல இருக்குன்னு பயங்கர குஷி எனக்கு... இப்போ திரும்பி வந்து உட்கார்ந்த அவளுக்காக ஸ்பெஷலா ஒண்ணு பாடுவோம்னு எனக்கு பிடிச்ச (எனக்கு மட்டும் பிடிச்சா போறுமான்னு தான கேக்கறீங்க... புரியுது...) "குச் நா கஹோ ..." வ ஆரம்பிச்சேன் ... பின்ன எனக்கு ஹிந்தியும் வரும்னு ரசிகைக்கு காட்ட வேணாமா.... அவ பேக்ல இருந்து மொபைல எடுத்தா... ஆஹா ஆஹா என் பாட்டை பிரெண்ட்ஸ்க்காக ரெகார்ட் வேற பண்ணிக்க போறாளான்னு எனக்கு பெருமை தாங்கல ... உடனே வாய்ஸ் கிளாரிட்டிக்காக வால்யூமை கூட்டினேன்.... உடனே அவ பேக்ல தீவிரமா எதையோ தேடி அப்பான்னு பெருமூச்சோடு ஒண்ண எடுத்து மொபைல்ல சொருகி காதுல மாட்டிக்கிட்டா.... வேற ஒண்ணும் இல்ல ... earphones ....ஹிஹி ...
இதுக்கெல்லாம் அசந்து பீச்ல பாடறத நிறுத்துவேனா என்ன ... Never !!

No comments:
Post a Comment