அரட்டைனா அரட்டை அப்படி ஒரு அரட்டை... எப்போன்னு கேக்கறீங்களா.. நான் காலேஜ் ஹாஸ்டல்ல இருந்தப்போ தான் .... இப்போவே இவ்வளவு பேசறியே அப்ப என்னவோ காலேஜ் படிக்கும் போது மட்டும் தான் அரட்டை அடிச்ச மாதிரி கதை விடற... ஏன் அதுக்கு முன்ன அதுக்கு பின்ன நீ அரட்டையே அடிச்சதில்லையான்னு தானே கேக்கறீங்க... அதெப்படி சும்மா இருந்து இருப்பேன் ... நான் நான்ஸ்டாப்பா அரட்டை அடிப்பேன் தான் பட் எல்லார்கிட்டயும் இல்ல... அது மனசு செட் ஆகணும்.....மனசு செட் ஆனாலும் மணிக்கணக்கா அரட்டை அடிக்க வாய்ப்பும் இருக்கணும்... ரெண்டுமே அமைஞ்சது காலேஜ் ஹாஸ்டல் லைஃப் தான் ....
ஏன் இப்படி சொல்றேன்னா +1 வந்தப்போ ஒரு கிளோஸஸ்ட் பிரெண்ட் கிடைச்சா... ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து டெலிபோன்ல கன்டின்யூ பண்ணுவோம்... அப்போல்லாம் நோ மொபைல் ....போனும் பேங்க் மேனேஜர்க்காக அப்பாக்கு பாங்க் தந்தது.... அப்படி என்ன அரட்டை அதான் ஸ்கூல்லயே பேசிக்கறீங்க இல்லன்னு திட்டு வாங்கிக்கிட்டே எந்த அளவு டெலிபோன்ல பேசுவேனா ஒரு தடவை யாரோ எங்க வீட்டுக்கு போன் பண்ணி "இது 23814 ங்களா" ன்னு கேக்கறாங்க .... அதான் எங்க நம்பர்.... நான் உடனே "இல்ல இது .... " அப்படின்னு என் பிரெண்ட் வீட்டு நம்பரை சொல்லி வீட்ல நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்... இப்படி மணிக்கணக்கா பேச நினைச்சதை எல்லாம் ஒரு கால் மணி அரை மணி ன்னு கெரகம் புடிச்ச ஸாரி கிரஹாம்பெல் கண்டுபிடிச்ச டெலிபோன்ல பேசறது ரொம்ப சேலஞ்சிங் டாஸ்கா இருந்தது ....
அப்பறம் தான் காலேஜ்க்கு ஹாஸ்டல் போனேன் .... இனிஷியலா இந்த ஹோம் சிக் ஹோம் புட் சிக் ன்னு அழுகைல போய்டுச்சு ... அப்பறம் தான் மாட்டினா ஒரு அப்பாவி பிரெண்ட் ... ஏன் அப்பாவின்னு சொல்றேன் .... ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருந்ததால ரூம் மட்டும் வேற வேற .... பட் அவ தூங்கற நேரத்தைக்கூட நாந்தான் முடிவு பண்ணுவேன்... என்னல்லாம் அட்டூழியம் பண்ணுவேன்னா என்னை சைக்கிள்ல டபிள்ஸ் ஏத்திட்டு கஷ்டப்பட்டு மிதிச்சிட்டு போவா நான் அவ பின்னாடி ஹாய்யா உட்கார்ந்து அவ காதை கடிச்சிட்டே போவேன் ... அசைன்மென்டை சீக்கிரம் எழுதி குடு நான் காப்பி அடிக்கணும்னு சொல்லி பக்கத்துலயே உட்காந்து அவ கஷ்டப்பட்டு எழுத நான் இஷ்டத்துக்கு பேசிட்டு இருப்பேன்.. அவ என் பேச்சை கேட்டுக்கிட்டே எழுதி முடிக்கணும்.... இதுல ஒரு தடவை நான்ஸ்டாப்பா நான் "காதல் மன்னன் " படத்தை பேக்ரவுண்ட் ம்யூசிக் பாட்டு வசனம் சகிதம் 3 மணி நேரம் கதை சொல்லிட்டே ஒரு முக்கியமான மண்டைய பிச்சுக்கற அசைன்மெண்டை அவளை எழுத வச்சு அப்பறம் நான் ஈஸியா காப்பி அடிச்சிட்டேன்... அந்த ரூம்ல மூணு பிரெண்ட்ஸ்.... எல்லாரையும் என்டர்டெயின் பண்ணிட்டு அவங்க டயர்டு ஆகி தூங்கினதும் இந்த அப்பாவிய மட்டும் டார்கெட் பண்ணி அவ காட்ல உக்காந்து "குட் நைட் டா.. " ன்னு ஆரம்பிச்சு நைட் 2 3 வரைக்கும் விடாம மூச்சு முட்ட பேசிட்டு மனசே இல்லாம என் ரூம்க்கு வந்து என் ரூம்ல இருந்த இன்னொரு அப்பாவியை தூங்க விடாம அரட்டை அடிப்பேன்.... இது மட்டும் இல்லாம ஊருக்கு பஸ்ல ட்ரெயின்லன்னு எதுல போனாலும் நான் ஸ்டாப் நான்சென்ஸ் (நான் தான் ..)
இதுல ஒரே கம்பெனில காம்பஸ் செலக்க்ஷன் ஆயிட்டோம்... பாவம் அவ... பட் அவன் வேலைல ஜாயின் பண்ண கூப்பிட ரொம்ப லேட் பண்ணான்.... அந்த கேப்ல 2 3 தடவை நானும் அவளும் டிரெயின்ல பெங்களூர் போனோம் சில இன்டெர்வியூக்காக ... டிரெயின்ல என் பர்த் அ விட்டுட்டு அவளோட டாப் பர்த்ல உட்கார்ந்து தூங்க விடாம பேசி அடுத்த நாள் இண்டெர்வியூல நல்லா தூங்கினேன்.... கடைசில ஒண்ணா வேலைல சேர போனா என்னோட லக் என் ஸ்கூல் பிரெண்டும் அதே நாள் அதே கம்பெனில ஜாயின் பண்றா... பயங்கர குஷியா எல்லாரும் சேர்ந்து ஒரு வீட்ல இருந்தோம்... நான் பேசி பேசி சாகடிக்கறது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலை.. எனக்கு மட்டும் ட்ரைனிங் முடிஞ்சி போஸ்டிங் சென்னைல ...
சென்னை வந்து ரொம்ப நாள் பேச ஆள் இல்லாம புது முகங்களோட ஒரு ஹாஸ்டல்ல இருந்து தனிமை துயர்ல பைத்தியமே பிடிச்சிடுச்சு .... அப்படியே கொஞ்ச நாள் போனப்போ ஒரு வீக் எண்ட் நான் பெங்களுர் போக முடிவு பண்ணேன்.. அங்க போய் என் பிரெண்ட்ஸை எல்லாம் பாத்ததும் சந்தோஷம் துக்கம் எல்லாம் சேர்ந்து தொண்டையை அடிக்குது.... அன்னைக்கு நைட் எல்லாரும் ஒண்ணா படுத்து இருக்கோம் .... முதல் நாள் டிரெயின் அலுப்பு பகல்ல பெங்களுர் சுத்தின அலுப்புன்னு அலுப்புல என் கண்ணு அப்படியேஏஏ தூக்கத்துல சொருகுது... இந்த அப்பாவி என்னை மெதுவா சுரண்டி "ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கற.... பேசு சாரு...." ங்கறா .... ஒருத்தர்கிட்ட மனசு செட் ஆகறதுனா என்னன்னு இப்போ புரிஞ்சி இருக்குமே !!!
பின் குறிப்பு:
இப்போ போன மாசம் அவ யூ எஸ் ல இருந்து இங்க ஒரு மாசம் வந்து இருந்தா .... கடைசில அவ கிளம்ப ஒரு 2 நாள் இருந்தப்போ என் பொண்ணு ஸ்கூல் போய் இருந்தப்போ அவசரமா போய் ஒரு 1 ஹவர் அரட்டை அடிச்சிட்டு வந்தேன் .... என்னவோ பேசின மாறியே இல்ல.... so அவ கிளம்பும் போது வேகமா ஏர்போர்ட் போய் கரெக்ட்டா அவ கேட்ல நுழைய அவளுக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்கும் போது அவளை பாத்து நல்லா (???) 2 நிமிஷம் பேசிட்டு திரும்ப கார்ல வரும்போது FM ல "வானும் மண்ணும் கட்டி கொண்டதே ..." ன்னு காதல் மன்னன் பட பாட்டு ஓடுது ... அப்படியே என் நினைவுகளும் !!!!!!

No comments:
Post a Comment