Saturday, March 11, 2017

பாட்டு பாடவா !!!

பாட்டு பாடறதுனா சும்மாவா .... அதுவும் பாட்டு பாடி ரெக்கார்டிங் பண்றதுன்னா ச்சும்மாவா ..... எட்டு வயசுல பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சது ... ஆரம்பிச்சது மட்டும் தான்...  ஒரு மூணு மாசத்துலயே  ஏன்டா போனோம்னு எப்படியோ சாக்கு போக்கு சொல்லி நிறுத்திட்டேன்.. ஏன்னா அது என் ப்ராப்ளம் இல்ல... பாம்பேல நாங்க இருந்த அபார்ட்மெண்ட்ல இருந்த கொஞ்சமே கொஞ்சம் மாமீஸ் ல பாட்டு தெரிஞ்ச ஒரு மாமிதான் சொல்லித் தந்தாங்க.... ஆனா பாருங்க "ஸா பா ஸா பா ஸா " ன்னு ஆரம்பிச்சவுடனேயே "பாரு மேல இருக்கற நவநீதா என்னமா பாடறா... க்ளாஸ்லயும் பர்ஸ்ட் ... பாட்டுலயும் கெட்டி படிப்புலயும் கெட்டி.. நீயும் இருக்கியே .... நல்லா இன்டரெஸ்ட் ஒட கத்துக்கணும்.... ஏனோ தானோன்னு கத்துக்க வந்தா இப்படிதான்" அப்படின்னு அவங்களுக்கு மேல் பிளாட்ல இருந்த என் க்ளாஸ்மேட்டை பத்தி சொல்லி சம்மந்தமே இல்லாம திட்டிட்டு இருப்பாங்க .... "மேம் நீங்க சொல்லிக் கொடுக்கவே ஆரம்பிக்கலையே... " அப்படின்னு சொல்லவா முடியும் (நவநீதா வேற எங்கயோ கத்துக்கிட்டா ).... கம்பேரிசனோட முழுழு பலனையும் அனுபவிச்சேன்... பாட்டு பாடணும்ன்னு ஆசை இருந்தாலும் அவங்க வீட்டுக்குள்ள நுழையவே பயம்... சோ அப்படியே நின்னு போச்சு ....

அதுக்கு அப்பறம் கேசட்டை போட்டு கேட்டு ஏதோ நானே கத்துகிட்டு பாடி அதை ரெக்கார்டு பண்ணி கேக்கறதுல ஒரு சந்தோஷம் .... அப்போ ஆரம்பிச்சது என்னோட ரெக்கார்டிங் பயணம்..... அதுவும் நடுவுல ஒரு வருஷம் வீட்ல பப்பின்னு ஒரு பொமரேனியனை வளர்த்தோம்.... நான் ரெக்கார்டு பண்ண வாயை திறந்தாலே கத்தும்.... நான் பாடகியா ஆகறதுல இப்படி பல பல தடைகள்.....

அப்பறம் பிளஸ் 1 படிக்கும்போது தான் வீட்டுக்கு ஒரு மாமி வந்து சொல்லித் தந்தாங்க .... ரெண்டு வருஷம் நல்லா கத்துக்கிட்டேன் .... ஆனா இப்போ வரைக்கும் கொலு, பண்டிகை , கல்யாணம், காதுகுத்து, பூணூல் , கோவில் ன்னு எந்த அகேஷனா இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை " இல்லனா "ஸ்ரீ சக்ரராஜ " ன்னு இந்த ரெண்டு பாட்டு தான் பாடறது... அதுதானே யுனிவர்சல் சாங்ஸ் .... பாட்டு மாமிக்கு தெரிஞ்சா இதற்கு தானா நடையா நடந்து சொல்லித் தந்தேன்னு ரத்த கண்ணீர் வடிப்பாங்க ....

அப்பறம் பாட்டு கிளாஸ் போனேனோ இல்லயோ ரெக்கார்டிங் மட்டும் அந்த அந்த பீரியட்ல இருந்த டெக்னாலஜி,  ஐ மீன் டேப் ரெக்கார்டார்ல, லேப்டாப்ல, மொபைல்லன்னு பண்றதுல ஒரு குறைச்சலும் இல்ல...

சரி சினிமா பாட்டெல்லாம் முக்கியமா ராஜா சார் பாட்டெல்லாம் பாடி பாடி தரோ ஆய்டுச்சுன்னு எம்.எஸ் அம்மாவோட பாட்டெல்லாம் ஆன்லைன்ல கேட்டு கேட்டு கத்தி கிட்டு ஐ மீன் கத்துகிட்டு மொபைல்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன் ... அப்போ தான் இந்த soundcloud ன்னு ஒண்ணு இருக்கறது தெரிய வந்தது .... அவ்ளோதான் குஷி பிச்சிகிச்சு... ஒரே இயர் போனை மாட்டிகிட்டு அதுல ரெக்கார்டிங்  ஆரம்பிச்சேன் ... இதுக்கு நடுவில கரோக்கே ன்னு ஒண்ணு இருக்கறது தெரிஞ்சவுடனே ஜானகி அம்மா மாதிரி இருக்கற என்னோட குரலோட இனிமைக்கு இனிமை சேர்க்கற மாதிரி கரோக்கே போட்டுக்கிட்டு இயர் போன்ல ஒரு சைட் மட்டும் இயர்ல போட்டுக்கிட்டு இன்னொரு சைடை மைக் கிட்ட வச்சிகிட்டு (என்கிட்ட இருக்கற லிமிடேட் ரெக்கார்டிங் facility யை கூட எவ்வளவு மூளையை கசக்கி எபக்டிவா யூஸ் பண்ணிருக்கேன் பாருங்க...) பாடி அப்லோடிங் தான் ..... ஆனா ஒண்ணு எல்லா ரெக்கார்டிங்கையும் நான் தனியா இருக்கும் போது தான் பண்ணுவேன் ...

அன்னைக்கு மட்டும் பாருங்க காதில் இயர் போனை மாட்டிக்கிட்டே கீரையை கிளீன் பண்ணி நறுக்கிட்டு இருந்தேன் .... ராஜா சாரோட "மௌனமான நேரம் ...." ஒட ஆரம்பிச்சவுடனே அஸ் யூஷுவல் ரிக்கார்டிங் ஆசை தலை தூக்கி, அதை அடக்க முடியாம அந்த பாட்டோட கரோக்கேவை  தேடி புடிச்சு அதோட சேர்ந்து பாடிட்டு (அப்படிதான் நினைச்சேன்) இருந்தேன்....

என் பொண்ணு எங்கிட்ட இருந்து கொஞ்ச தூரத்தில சோபாலயே தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தா..... நான் பாடினதை  பார்த்திட்டு என் அருமை கணவரும் ஏதோ பாடறதா நினைச்சு ட்ரை பண்ணிருக்கார்.... அவர் பாட ஆரம்பிச்ச உடனே "அப்ப்பாஆ ப்ளீஸ்... எனக்கு தூக்கம் வருது..... பாடாதீங்க ...." அப்படின்னு கத்தினா.... அப்பவும் நான் டீசெண்டா  சிரிப்பை அடக்கிட்டு அமைதியா தான் வேலைய பண்ணிட்டு இருந்தேன் .....

உடனே அவர் "அப்போ நான் இயர் போனை மாட்டிட்டு பாடுவேன் " ....

அதுக்கு அவ "அய்யோஓஓஓ வேணாம் வேணாம் ..... அப்படியே வேணாலும் பாடிக்கோங்க "

ஹம்ம்ம்.... ஜானகி மாதிரி பீல் பண்ணி ஒரு பாட்டு ரெக்கார்ட் பண்ண முடியுதா ... எனக்கு எதிரிங்க வேற எங்கயும் இல்ல 😛 !!!

Note :
இதுல பாத்தீங்கனா ஒண்ணு கூட நம்ம ஊர் பேரு இல்ல ... நான் பாடின ஒண்ணு ரெண்டு டமில் பாடல்கள்ல என்ன புரிஞ்சு லைக் பண்றாங்கனே தெரில ... என்னே soundcloudடோட ரீச் ன்னு சொன்னா "இது ஒரு வேளை soundcloud ஆப் டெவலப்பர்ஸா இருக்கும் .... இப்படியாவது  நம்ம ஆப் யூஸ் ஆகுதேன்னு லைக் பண்ணிருப்பாங்க ..." அப்படிங்கறார் என் ஹஸ்பண்ட் 😛 !!!

2 comments:

  1. அந்த பாடலை இணைத்து இருந்தால் கேட்டு இன்புற்று இருக்கலாம்)))

    ReplyDelete