எனக்கு இதே வேலை..... என்ன வேலை????? ..... எங்கயாவது ஏதாவது வம்பு வளர்த்துட்டு அப்பறம் பின் விளைவுகளை பத்தி யோசிக்கறது.... வம்புன்னா ரொம்ம்ம்ப பெரிய லெவல்லாம் இல்ல..... இந்த கடைக்காரர் ஆட்டோக்காரர் அந்த மாதிரி ..... பின்ன என்னங்க பஸ் கண்டக்டர்ல இருந்து ரெஸ்டாரண்ட் வெய்ட்டர் வரைக்கும் எல்லாரையும் "சார்" "அண்ணா" "ஏம்ப்பா தம்பி" ன்னு க்ரோனலாஜிக்கல் ஆர்டர்ல மரியாதையா "தேங்க் யூ""எக்ஸ்க்யூஸ் மீ" ன்னு கர்டெசியோட பேசற என்னை ஏமாத்தற மாதிரி மட்டும் தெரிஞ்சுது அவ்ளோதான் பொங்கி எழுந்து சண்டை போட்டு வந்துருவேன்.... அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணா பரவால்ல ..... ஆனா கொஞ்ச நேரத்துல "இது தேவையா .... அவங்களுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்னு பேசாம பொறுமையா இருந்து இருக்கலாம்.... இப்ப எந்த ஏழரைய இழுத்து விட்டுருக்கோமோ" ன்னு விட்டத்தை பார்த்து யோசிப்பேன்.... என்னோட ஹஸ்பண்ட்க்கு வேற இந்த மாதிரி நான் பண்ணறதெல்லாம் சுத்தமா பிடிக்காது.... இப்படி ஏதாவது பண்ணிட்டு அதை பத்தி அவர்கிட்ட சொன்னா (அவர்கூட போகும்போது வாய திறப்பேன்??.... பரம சாது நான் ) அவ்ளோதான் ..... "நாம படிச்சவங்க தான .... இக்னோர் பண்ணிட்டு பேசாம வரலாம்ல.... ரோட்ல கடைலன்னு ஏன் ஸீன் கிரியேட் பண்ணனும்" ன்னு இங்கயும் திட்டு விழும் .... அவர்கிட்ட சொல்லாமலாவது இருக்கலாம்ல ... சின்சியரா சொல்லி வாங்கி கட்டிப்பேன்.... சரி சரி ஓகே ஓகே புரியுது …. முன்குறிப்பு தற்பெருமை எல்லாம் நிறுத்திக்கறேன் … விஷயத்துக்கு வரேன்.... இந்த மாதிரி ஸ்டண்ட் வேலை ஒன்னு பண்ணிட்டு அதனால வசமா மாட்டிகிட்டேன் ...
ஒரு பன்னெண்டு பதிமூணு வருஷம் முன்னாடி இருக்கும்..... வீட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல என்னை பாத்தாலே ஒரே தி மரியாதை... எல்லாரும் உடனே மீட்டிங்க போட்டு "ஹே நேத்து நீதான்பா போன.... இன்னைக்கு என் டர்ன்னு " அப்படின்னு பஞ்சாயத் பண்ணி "உக்காருங்க மேடம்.... " அப்படின்னு ஆட்டோ கதவை திறந்து விடுவாங்க .. ச்சை ஆட்டோல ஏது கதவு... வாய்ல அதுவா வருது .... பின்ன ரெகுலரா ஏழரை மணி ஆபீஸ் பஸ்ஸை கரெக்ட்டா ஏழு நாப்பதுக்கு பஸ் ஸ்டாப்க்கு போய் அதை மிஸ் பண்ணிட்டு அங்க இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கற ஆட்டோஸ்க்கு டெயிலி முதல் போணியே நாந்தான் பண்ணுவேன்.... நல்ல கை ராசின்னு பேசிக்குவாங்க ..... பின்ன காலைல நான் தர ஆட்டோ சார்ஜே அன்னைக்கு முழுசா போதுமே.... எல்லாம் ஒரு தர்மம் தான்..... அப்பறம் வீட்ல "பொறுப்பே இல்ல..... என்ன சொல்லி என்ன" ன்னு தர்ம திட்டு .... பட் அது ஒரு சோஷியல் சர்வீஸ் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்னு வெச்சுக்கோங்க ...
அன்னைக்கு அப்படிதான் எங்க வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி இருந்த சித்தப்பா வீட்ல இருந்து என்னோட பாட்டியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர போனேன்.... வயசானவங்கறதால போகும் போதே ஆட்டோல போயிட்டு அவங்கள அதே ஆட்டோல கூட்டிட்டு வர்றதா பிளான் .... ஆட்டோ ஸ்டாண்ட்ல அன்னைக்கு இருந்த ஆட்டோல பதினஞ்சு வயசு தான் இருக்கும் அந்த ஆட்டோ ட்ரைவர்க்கு.... "ஆபீஸ் தான மேடம் " னான்.... "இல்லப்பா .... --- ஸ்ட்ரீட்க்கு போய் அங்க இருந்து பாட்டியை கூட்டிட்டு இங்க திரும்ப வந்து டிராப் பண்ணனும்.... ஒரு அஞ்சு நிமிஷம் அங்க வெயிட் பண்ண வேண்டி இருக்கும்.... அதையும் இப்போவே சொல்லிர்றேன்" னேன்.... "சரிங்க" னான்.... "யூஷுவலா அந்த ஸ்ட்ரீட்க்கு போக இருபது ரூபாய் தான.... நான் நாப்பது தரேன்... அப்பறம் கூட கேக்க கூடாது " அப்படின்னு தெளிவா பேசிட்டு தான் ஆட்டோல ஏறினேன் ......
அங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட்டிங்க்ல இருந்துருப்பான் .... அதையும் தெளிவா சொல்லிருந்தேனே... முணுமுணுன்னு புலம்பிகிட்டே தான் ஆட்டோவை ஓட்டிட்டு வந்தான் ... திரும்ப எங்க வீட்டுக்கு வந்தப்போ தான் பிரச்சனை.... "என்ன நாப்பது ரூபா தரீங்க.... எவ்வளவு நேரம் அங்க வெயிட்டிங்க்ல இருக்க வெச்சீங்க.... வேற சவாரியாவது போயிருப்பேன்.... அம்பது தாங்க..." ன்னு ரைட் ராயலா கேட்டானே பாக்கணும்.... சுர்ர்ர்ன்னு ஏறிடுச்சு எனக்கு ...."ஏன்பா எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு தான ஏறினேன்..... இப்போ என்ன தகராறு பண்ற.... உங்க ஸ்டாண்ட்ல ரெகுலரா ஆட்டோல போறேன்..... நீ என்ன இந்த சின்ன வயசுலயே இப்படி இருக்க.... " ன்னு முதல்ல கொஞ்சம் பொறுமையாதான் பேச ஆரம்பிச்சேன்.... அவன் தேவை இல்லாம மரியாதை குறைவா பேசினவுடனே ரொம்ம்ம்ப கோபம் வந்துருச்சு.... கடுப்பாகி "வேணாம்டி எதுக்கு தகராறு.... அம்பது கொடுத்துரு ..." ன்னு சமாதானமா பேசின பாட்டியை வீட்ல விட்டுட்டு நேரா ஆட்டோ ஸ்டாண்ட்க்கே போய் "என்ன உங்க ஸ்டாண்ட் பையன் இப்படிலாம் பேசறான்.... நீங்கலாம் ஒன்னும் சொல்ல மாட்டிங்களா..." அப்படி இப்படின்னு சண்டை போட்டுட்டேன்.... அவங்க அப்போதைக்கு "சரி மேடம்.... நீங்க போங்க... நாங்க சொல்லி வெக்கறோம்..... டேய் அவங்க சொல்லிட்டு தான வண்டிய எடுத்தாங்க.... அப்பறம் என்ன தகராறு பண்ற..." அப்படின்னு அவன்கிட்ட பேசற மாதிரி என்னை அனுப்பிட்டாங்க.... அடுத்த ரெண்டு மூணு நாள் ஆட்டோலேயே போகல.... அதுக்கு அடுத்த வாரம் வேற வழி இல்லாம ஒரு நாள் அந்த ஸ்டாண்ட்ல வேற ஒரு ஆட்டோல ஆபீஸ் போனேன்... ஆட்டோ சார்ஜ்க்கு கரெக்ட்டா சேஞ்சு இல்ல.. அந்த ட்ரைவர் மீதி சிக்ஸ்டி ரூபீஸ் தரணும் .... சரி மீதியை சாயங்காலம் ஸ்டாண்ட்ல கொடுத்துர்றேன் மேடம் ன்னு சொன்னவனை நம்பி விட்டுட்டேன்.... அன்னைக்கு நான் வீட்டுக்கு போக லேட் ஆயிடுச்சு.... அடுத்த நாள் பஸ் வர்ற டைம்க்கே போய்ட்டேன்.... அந்த ட்ரைவர் ரோட்ல அப்போசிட் சைட்ல நின்னுட்டு தான் பேசிட்டு இருந்தான்.... என்னை பாத்தும் பாக்காத மாதிரி திரும்பிகிட்டான்.... பஸ் வந்துட்டதுனால நானும் சரி ஈவினிங் பாத்துக்கலாம்னு போய்ட்டேன்.... அன்னைக்கும் லேட் ஆயிடுச்சு... அதுக்கு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பினேன்.... அவன் என்னை பாக்காத மாதிரி இருந்தான்.... நான் ரோடை க்ராஸ் பண்ணி "நீங்க எனக்கு சிக்ஸ்டி தரணும்.... ரெண்டு நாளா பாத்தும் பாக்காத மாதிரி இருக்கீங்க...." அப்படினேன்.... "ஆமா சிக்ஸ்டி தான தரணும்..... மறந்துட்டேன்.... உனக்கு உன் காசு வேணும்னா நீ (கவனிக்கவும் மரியாதை இல்லாம) வந்து கேக்க வேண்டியது தான " ன்னு திமிரா பேசினான்.... அவன் ஆட்டோக்குள்ள ஏற்கனவே என் கூட தகராறு பண்ண அந்த பையன் உக்காந்து இருந்தான்.... சரிதான் இது பிளான் பண்ணி செய்யறதுன்னு புரிஞ்சு திரும்பவும் செம்மா கடுப்பு.... நேரா அந்த ஸ்டாண்ட்ல கொஞ்சம் சீனியர் கிட்ட போய் "எனக்கு அறுபது ரூபா பெரிய விஷயம் இல்ல (ஆமா கர்ணனுக்கு தங்கச்சி நான்னு நெனப்பு ) ஆனா ஏமாத்தணும்னு நினைச்சது தான் என்னால பொறுத்துக்க முடியலை …..இந்த மாதிரி ஒரு ரோக் கூட்டம் இந்த ஸ்டாண்ட்ல இருக்குன்னு இத்தனை நாள் நான் தெரிஞ்சுக்கலை பாருங்க ...இனிமேல் உங்க ஸ்டாண்ட் வண்டில ஏறுவேன் ...." அப்படின்னு கத்திட்டு போய்ட்டேன்....
அதுக்கு அப்பறம் அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோவே ஏறலை.... ஆனா அங்க இருந்த கொஞ்ச மாசம் அந்த ட்ரைவர்ஸ் எப்ப நான் அந்த பக்கம் போனாலும் முறைச்சுகிட்டே இருப்பாங்க… நானும் கண்ணாலேயே எரிச்சிட்டு போய்டுவேன்…. இருந்தாலும் சம்டைம்ஸ் ஆபீஸ்ல இருந்து லேட் நைட்லாம் கேப்ல வரும்போது கொஞ்சம் பயமாதான் இருக்கும்.... பெரிய இவளாட்டம் ஆட்டோ ட்ரைவர்ஸ் கிட்டலாம் தகராறு பண்ணிட்டோம்... கராத்தே கூட கத்துக்கல.... இதெல்லாம் எனக்கு தேவையான்னு தோணும்... அப்பறம் கொஞ்ச மாசத்துலயே வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம்.... கல்யாணம் ஆகி நானும் வேற ஏரியாக்கே வந்துட்டேன்.... ஸ்டில் என்னோட பேரன்ட்ஸ் அங்க இருக்கறதால அந்த ஏரியாக்கு போவேன் .... அந்த மார்க்கெட்க்கு போவேன் ஆனா ஒரு தடவை கூட ஆட்டோ ஏறலை.....
இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அந்த ரோட்ல ஏதோ வேலையா போயிட்டு வீட்டுக்கு திரும்ப ஆட்டோ தேடினேன்.... தெளிவா அந்த ஸ்டாண்ட்ல இருந்து ரொம்ம்ம்ப தள்ளி ஒரு போக்கு ஆட்டோவை நிறுத்தி கேட்டேன் ... ஆனா அவனை எங்கயோ பாத்த மாதிரியே இருந்தது ... அவனும் ஒரு மாதிரி என்னை பார்த்துட்டே யோசிச்சிகிட்டே சரி ஏறுங்கனான்.... ஏறி உக்காந்து மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சப்ப தான் தெரிஞ்சுது அது அப்போ நான் சண்டை போட்ட பதினஞ்சு வயசு ட்ரைவர்ன்னு.... இத்தனை வருஷத்துல வளர்ந்துருந்தான்.... அதான் ச்சட்ன்னு ஸ்ட்ரைக் ஆகல..... அய்யோஓஒ ன்னு நினைச்சுகிட்டே நிமிர்ந்து பாக்கறேன் அவனும் ரியர் வ்யூ மிரர்ல ரொம்ம்ம்ம்ப தீவிரமா யோசிச்சிகிட்டே என்னை பாத்துட்டு இருந்தான்.... "அட ராமா... கடைசில இவன் ஆட்டோலயா ஏறிருக்கோம்.... அய்யோஓஒ இவன் ஸ்டாண்ட் ஆட்டோல கூட ஏற மாட்டோம்னு நாம போட்ட சபதம் என்ன ஆறது (ம்ம்ம்கும்ம் இந்த அலப்பறைக்கு ஒண்ணுதான் குறைச்சல் ன்னு என் மைண்ட் வாய்ஸ் வேற இம்சை).... இவனுக்கு நாம யாருன்னு தெரிஞ்சுட்டா அவ்ளோதான்....ஏதாவது வேணும்னே தகராறு பண்ணுவானே.... இவ்ளோ லேட்டா வேற போறோம்... இது என்ன சோதனை.... " ன்னு வேகமா யோசிச்சிகிட்டே என்னோட ஹேண்ட்பேகை துழாவினேன்.... "ஆஹாஆஆ.... கிடைச்சுடுச்சு..... இதை வெச்சு தப்பிச்சுக்கலாம்" ன்னு உடனே அதை எடுத்து வெச்சிகிட்டேன் .... அப்பறம் கொஞ்ச நேரத்துல மெதுவா ரியர் வ்யூ மிர்ரரை பாத்தேனா.... அவன் ரோடை பாத்து ஓட்டிட்டு இருந்தான்.....
அது சரி அப்படி என்ன வெச்சுக்கிட்டேன்னு கேக்கறீங்களா.... ஒன்னும் இல்ல எப்பவோ அவசரத்துக்கு வாங்கின "ஷில்பா பொட்டு சைஸ் 1 " (இருக்கறதுலயே நெத்தி புல்லா அடைக்கற மாதிரி பெரிய சைஸ் பொட்டு) ஹாண்ட் பேக்ல இருந்ததா.... அதை எடுத்து கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் .... இப்போ என்னை அடையாளம் தெரியாதில்ல.... எப்புடிஇஇஇ ...
ஹிஹி.... ஏதோ சீரியஸா சொல்ல வந்தேன்னு நீங்க நினைச்சுருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது !!!!

No comments:
Post a Comment