Friday, February 3, 2017

ராங் நம்பர்ங்க !!!

எங்க வீட்டு லேண்ட் லைன் போன் ஒரு ஆறு மாசமா வொர்க் ஆகல போல இருக்கு.... என்னது எங்க வீடு ஆனா 'போல இருக்கு' ங்கறேன்னு பாக்காதீங்க.... அந்த லேண்ட் லைன் போன் ச்சும்மா கிரஹாம்பெலோட கண்டுபிடிப்புக்கு ஒரு மானுமெண்டல் ப்ரூப்பா , வீட்ல வேற எங்கயுமே ஒரு பொட்டு தூசி இல்லேன்னா அப்போ தூசி தட்டப்படும் (அப்போ இந்த ஜென்மால அது எவ்வளவு கைவிட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே தூசி தட்டப்பட்டிருக்கும்) ஒரு வஸ்து .... மோடம் மட்டும் ஓவர் டைம் செய்யும் ஒரு போன் கனெக்ஷன் ....  அவ்வ்வளவேதான்...

ஆனா எவ்வளவு தடவை 'ராங் நம்பர்ங்க' ன்னு சொன்னாலும் வாரத்துக்கு ஒரு தடவை தவறாம 'ஹலோ .... துரை இருக்கானா' ன்னு ஓர்ர்ர்ர்ரெ ஒரு கால் மட்டும் வரும்... நானும் "ராங் நம்பர் " ன்னு சொல்லி வெறுத்து போய் ஒரு தடவை "இங்க ஜாக்சன் துரை இல்லங்கோ .... கட்டபொம்மன் தான் இருக்காருங்கோ " ன்னு கூட சொல்லிப் பார்த்துட்டேன்.... ம்ம்ம்ஹ்ம்ம் நோ யூஸ் ...

கொஞ்ச நாள் முன்னாடி அதிசயமா என் அம்மா, தங்கை எல்லாருமே என்னவோ லேண்ட் லைன்க்கு போன் பண்ணி பாத்திட்டு "என்னடி லேண்ட் லைன் வொர்க் ஆகலையா... " ன்னு கேட்டப்ப தான் "அந்த துரை" கால் ரொம்ம்ம்ப நாளா வரலைங்கறதே உறைச்சுது..... நானும் ரொம்ப மெனக்கெட்டு கனெக்ஷன் செக் பண்ணலை .... அதான் வீட்டுல நூறு மொபைல் போன் இருக்கே ....

இப்போ ஆசைக்காக ஒரு பழய மாடல் retro போன் வாங்கினவுடனே தான் அந்த லேண்ட் லைன் ஞாபகம் வந்து போனை ஆராய்ச்சி பண்ணேன்... போன்ல டிஸ்ப்ளேயே வரலை... அப்போ போன் தான் பால்ட்ன்னு முடிவு பண்ணி retro போனை கனெக்ட் பண்ணினேன்..... அதுவும் வரலை... "பாருங்க இது ஷோபீஸ் தான் போலருக்கு ... வொர்க் ஆகலை" ன்னு இவர்கிட்ட சொன்னா என்னை முறைச்சிட்டு பழய போனை செக் பண்ணார்.. பேட்டரியே இல்ல அதுல ... "இதுதான் நீ செக் பண்ண லக்ஷணமா" ங்கற மாதிரி என்னை லுக் விட்டார் .... "ஆமாப்பா ரொம்ம்ம்ப நாள் முன்னாடியே அந்த பேட்டரியை என்னோட டாக்கிங் பேர்ட்க்கு போடறதுக்கு நான் தான் எடுத்தேன் " அப்டின்னா பொண்ணு... "ரெண்டு போனும் வொர்க் ஆகலைனா லைன்லயே பால்ட்டா இருக்கும் .... அது புரியாம இதை ஷோ பீஸ்ங்கற " அப்டின்னு என்னோட இமேஜ டேமேஜ் ஆயிடுச்சேன்னு பீல் ஆயிட்டேன் ... ஓகே கம்மிங் டு தி பாயிண்ட் ....

அப்பறம் bsnl கம்ப்ளெயிண்ட் கொடுத்து ஒரே நாள்ல லைன் பால்ட்ட  கரெக்ட் பண்ணிட்டாங்க .... retro போனை கனெக்ட் பண்ணா டயல் டோன் வருது... இவருக்கு கால் பண்ணி "சூப்பரா வொர்க் ஆகுது " ன்னு சொன்னேன் .... "இரு நான் திருப்பி கால் பண்ணி இன்கம்மிங் செக் பண்ணறேன்" ன்னு சொன்னாருன்னு போனை வச்சேன்..... உடனே "ட்ரிங்க்க்க் ட்ரிங்க்க்க்க் " ன்னு உச்சஸ்தாயில அலறுது.... வேகமா எடுத்து "வொர்க்கிங் ..." ங்கறேன் ....

அந்த சைடுல இருந்து "ஹலோ..... துரை இருக்கானா " !!!

இந்த கதையை காமெடியா எழுதினாலும் , ஒரு மூணு வருஷமா இந்த நம்பரை அவங்க துரையோட நம்பர்ன்னு நினைச்சு கால் பண்ணிகிட்டே இருக்காங்களே... அப்போ மாறின தன்னோட போன் நம்பரை அந்த துரை அவங்களுக்கு இன்னமும் தரலைன்னு தானே அர்த்தம் .... "துரை இருக்கானா " அப்டின்னு மாத்தி மாத்தி கேக்கற அந்த வயதான குரல்களை நினைச்சா .........

No comments:

Post a Comment